காயத்ரி மந்திரம்- 4

உலகம் முழுவதும் பரவ வேண்டிய அமுத மந்திரம் காயத்ரி என்பது சுவாமி சித்பவானந்தரின் உள்ளக் கிடக்கை. இதன் விரிவான விளக்கத்தை இந்த அத்தியாயத்தில் காணலாம்…

காயத்ரி மந்திரம்- 3

நமது அறிவை புடம் போட்ட தங்கமாக மாற்றும் சக்தி படைத்தது காயத்ரி மந்திரம். இதன் பொதுவான விளக்கத்தை இந்த அத்தியாயத்தில் சுவாமி சித்பவானந்தர் முன்வைக்கிறார்…

காயத்ரி மந்திரம்- 2

நம்முடைய தேசிய மந்திரமாக இருப்பது, தேசிய லட்சியமாக இருப்பது, மானுட வர்க்கத்துக்கே லட்சியமாக இருப்பது காயத்ரி மந்திரம். இதற்கு ஒவ்வொரு சொல்லாக விளக்கம் அளிக்கிறார் சுவாமி சித்பவானந்தர்…

காயத்ரி மந்திரம்- 1

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனரான பூஜ்யஸ்ரீ சுவாமி சித்பவானந்தர் (1920-1985), தமிழகத்தில் அண்மைக்காலத்தில் ஆன்மிகப்பயிர் வளர்த்த அருளாளர். பாரதத்தின் முதன்மை மந்திரமான காயத்ரி மந்திரம் குறித்த சுவாமிகளின் சிறிய நூல் (காயத்ரீ), இங்கு நான்கு பாகங்களாகக் கொடுக்கப்படுகிறது.

ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்

கந்தன் கலியுகவரதன்  எனப்படுகின்றான். இதன் உட்பொருளை நாம் அறிந்துகொள்வது அவசியம். நான்கு யுகங்களுள் கடையாயது கலியுகம். அதில் அறம் மிகக் குறைந்துள்ளது. ஆதலால் தெய்வத்தை அறிந்துகொள்ளவும், தெய்வத்தைத் தொழவும் முயலுபவர் கலியுகத்தில் மிகக் குறைந்திருக்கின்றனர். இனி, தெய்வம் எனும் சொல் எப்பொருளைக் குறிக்கிறது என அறிந்துகொள்வது அவசியம். இயற்கை வேறு, தெய்வம் வேறு அல்ல. ஒரே பொருள் இரண்டு விதங்களில் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஐம்பொறிகள் வாயிலாக நுகர்கின்றவிடத்து அது இயற்கை. ஞானக்கண் கொண்டு காணுமிடத்து அதே பொருள் கடவுள் எனப் பெயர்பெறுகிறது. கடவுள் காட்சி மெய்க் காட்சி. இயற்கைக் காட்சி பொய்யானது, நிலையற்றது. ஆதலால்தான் இயற்கையாகக் காணும் காட்சியைக் கடந்து மெய்ப்பொருளை உள்ளவாறு காணுதல் வேண்டும். அதை உள்ளவாறு அறிகின்றவிடத்து வாழ்க்கைச் சிக்கல்களெல்லாம் தாமாக அடிபட்டுப் போய்விடுகின்றன. விவேகானந்தரிடத்து மிளிர்கின்ற மகிமைகளுள் சில கந்தனிடமிருந்து பெற்றுள்ள மகிமைகளாகத் தென்படுகின்றன. ஆதலால் முருகக் கடவுளது மகிமைகளையும் மானுடருள் மேலோனாகிய விவேகானந்தரது விபூதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்ப்போம்....