ஆறில் ஒரு பங்கு – பாரதி

‘ஆறிலொரு பங்கு’ என்பது பாரதத்தின் ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்கு கொண்ட ஹரிஜனங்கள், ஆதிதிராவிடர்கள். அதாவது பாரதி கணக்கிட்ட முப்பது கோடி மக்களின் ஐந்து கோடி மக்கள் தீண்டாத வகுப்பினர்களைக் குறிப்பது. அவர்களை இருபத்தைந்து கோடி மேல் வகுப்பினர் பாரதத்தின் பொது வாழ்விலிருந்து விலக்கி வைத்து, அவர்களை பிரஷ்டர்களாகக் கருதி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திவரும் ஒரு சமூக மகா பாபத்தைக் குறிப்பதுதான் இந்தத் தலைப்பு. அவர்களை உயர்த்தும் பணியில், ஒரு மகத்தான நிமித்தத்துக்கு, சமூக சேவைக்கு இக்கதையின் நாயகன் - நாயகி இருவரும் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்... மகாகவி பாரதியின் அற்புதமான சமூக, தேசிய சிந்தனைக்கு இக்கதை உதாரணம்...