‘கள்ளிப் புதர்களும் கற்றாழைக் காடுகளும் நிறைந்திருந்த கலைத் துறையை நாங்கள் கைப்பற்றி விட்டோம்; இனி இங்கே இதிகாசங்களும், புராணங்களும் இடம் பெற இயலாது’ என நண்பர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ‘இராமாயணம்’ திரைப் படத்தை வெற்றிப் படமாகக் கொண்டு வந்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரிலும் அப்படத்தை நூற்றுக் கணக்கான நாட்கள் ஓட்டிக் காட்ட முடிந்தது என்றால் அந்தக் காப்பியத்தின் அழியாத் தன்மைக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?
Tag: அவ்வை டி.கே.சண்முகம்
நாடகக் கலை – 3 அ
சமுதாயத்தை உயர்த்துவது எப்படி என்பதில்தான் கருத்து வேற்றுமைகள் ஏற்படுகின்றன. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். சமுதாயத்தை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு அறிவுப் பிரசாரம் என்ற பெயரால் அழிவுப் பிரசாரம், அபத்தப் பிரசாரம் முதலியவற்றைச் செய்வதால் யாருக்கும் நன்மையேற்படாது. அப்படிச் செய்யத் தொடங்கும்போது கலை மறைந்து நாடக மேடை வெறும் பிரசார மேடையாகி விடுகிறது. அதற்காக நம் கலையில் பிரசாரக் கருத்துக்களே கூடாது என்ற முடிவுக்கு வந்து ‘கலை கலைக்காகவே’ என்னும் கோஷ்டியில் சேர்ந்துவிட முயல்வது தவறாகும்.
நாடகக் கலை – 2 – ஆ
இசைக் கலைஞன் ஒருவன் இல்லத்தில் தனித்திருந்து இசைபாடி இன்புறுவான். மெய்மறந்து இசைச்சுவையோடு அவன் ஒன்றிவிடவும் முடியும். ஓவியக் கலைஞன் இதற்கு விலக்கன்று. தனது சுவைக்காகவே, தனது உள்ளுணர்ச்சியின் அமைதிக்காகவே கூட ஓவியம் தீட்டத் தொடங்கி விடுவான்; உணர்விழந்து நிற்பான். சிற்பக் கலைஞனும் இப்படித்தான். ஆனால் நடிப்புக் கலை தனித்தன்மை வாய்ந்தது. நடிகன் தனித்திருந்து நடித்து இன்புற இயலாது. எதிரே வீற்றிருக்கும் ரசிகர் கூட்டம் அவ்வப்போது காட்டும் மெய்ப்பாட்டுணர்ச்சிகள் மேடையில் நடிக்கும் நடிகனின் உணர்ச்சிகளோடு ஒருமைப்படும் போது தான் நடிப்புக்கலை அதன் உச்சநிலைக்கு வருகிறது. இது அனுபவத்தின் வாயிலாக நான் கண்ட உண்மை.
நாடகக் கலை – 2 -அ
நடைமுறை வாழ்க்கையில் நம்மில் எத்தனையோ பேர் அபூர்வமாக நடிக்கிறார்களே; இந்த நடிப்பையெல்லாம் அவர்கள் எந்தப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டார்கள்? வணிகர்கள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இவர்களில் பலர் தம் சொந்த வாழ்க்கையில் எப்படியெல்லாம் திறமையாக நடிக்கிறார்கள்?
நாடகக் கலை -1 ஆ
தமிழ் நாடக உலகம் ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ என சங்கரதாஸ் சுவாமிகளையும், ‘தமிழ் நாடகத் தந்தை’ என ‘பத்ம பூஷணம்’ பம்மல் சம்பந்தனாரையும் இதயத்தில் வைத்துப் போற்றி வருகிறது.
நாடகக் கலை -1 (அ)
தமிழ் நாடகக் கலையின் இன்றைய வளர்ச்சியிலே எத்தனையோ பெரியவர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். நாடக இலக்கியம் என்பது படித்து மட்டும் வளரும் இலக்கியமல்ல; கண்களால் பார்த்தும் மகிழக்கூடிய இலக்கியமாகும். எனவே, அச்சிலே வெளிவந்துள்ள நாடக நூல்களின் அளவைக் கொண்டு மட்டும் அதன் வளர்ச்சியைக் கணக்கிட முடியாது. பரம்பரை பரம்பரையாக அரங்கிலே ஆடிவந்துள்ள நாடகங்களின் வளர்ச்சியையும் அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும். இந்தக் கண்ணோட்டத்தோடுதான் தமிழ் நாடக வரலாற்றை நாம் ஆராய வேண்டும்.
நாடகக் கலை – காணிக்கை
சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகக் கலையை வளர்த்த பெருமகன்களின் முதன்மையானவர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது ‘நாடக கலை’ நூல் நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது...
நாடகக் கலை – அணிந்துரையும் முன்னுரையும்
சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகக் கலையை வளர்த்த பெருமகன்களின் முதன்மையானவர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது ‘நாடக கலை’ நூல் நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது...