500 வருட ரணம், இன்று ஆறியிருக்கிறது. கோடி கோடி பக்தர்களின் மனங்களில் ஆட்சி செய்த ராமபிரான், தான் பிறந்த இடத்தில் ஒரு குடிசையில் இருந்து வந்தது விதியின் பிழையா? மனித மதியின் பிழையா? எது எப்படியிருப்பினும் நம் ராமன் திரும்பினான்.
Tag: அயோத்தியாயணம்
அயோத்தியாயணம்- 10
பிரிந்த கன்றைப் பார்த்த தாயாருக்கு எவ்வளவு மகிழ்ச்சி வருமோ அவ்வளவு மகிழ்ச்சி, ராமனை மீண்டும் பார்த்ததில். மாயையால் பிரிந்தவர்க்கு, ராமனைப் பார்த்த மாத்திரத்தில் பரப்பிரம்மத்தைக் கண்டது போல இருந்தது.
அயோத்தியாயணம் – 9
நம் தலை பட வேண்டும். கூப்பிய கைகள், கண்ணீர் திரையிடும் கண்கள், உணர்ச்சியிழக்கும் கால்கள், இப்படித்தான் இருப்போமா?
அயோத்தியாயணம்- 8
ஒரு பெண்மணி 32 வருடங்களாய் மௌன விரதம் இருந்திருக்கிறார், ராமர் கோயில் அமையும் வரை பேசப் போவதில்லை என்று விரதம். எதிர்பார்ப்பு எதுவில்லாமல் ராமன் மீதுள்ள அன்பு மட்டும் மேலோங்கி. ஒரு பக்தர் காலால் நடக்காமல் கைகளாலேயே நடந்து செல்கிறார். இன்னொரு பக்தர் நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு நடந்தே போகிறார், ‘என் ராமன் மீதுள்ள அன்பினால்’ என்று உள்ளம் பூரிக்கிறார்.
அயோத்தியாயணம்- 7
அவசரமாகத் திறக்கப்படுகிறது ராமர் கோயில் என்று சிலர் கூனிமொழி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ராமர் கோயில் வரக் கூடாது என்பதுதான் முதல் குறிக்கோள். அது மோடியின் தலைமையில் வரக் கூடாது என்பது அடுத்த குறிக்கோள். போகட்டும். ராமனின் வாழ்வில் அனைத்தும் அவசரமாகத்தான் நிகழ்ந்திருக்கிறது.
அயோத்தியாயணம்- 6
200 ஆண்டுகளுக்கு முன்னர், ராமனுக்காக ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றியவர் தியாகராஜ ஸ்வாமிகள். வாழ்வெல்லாம் ராம நாமம் ஜெபித்து பின்வரும் சந்ததியினரையம் ராம நாமம் பாடச் செய்தவர். "ஓரக்கண்ணால் ஒரு பார்வை பாரேன் ராமா" என்று அன்பொழுக உருகியவர்.....
அயோத்தியாயணம்- 5
ராமன் ஹனுமனை நோக்கி, நெகிழ்ச்சியுடன், “உதவி செய்வதில் உனக்கு நிகர் யாருளர்? நீ எனக்குச் செய்த உதவிக்கு என்னால் எதுவும் ஈடு கொடுக்க முடியாது. என்னை ஆரத் தழுவிக்கொள்” என்று அந்த கருணைமாக் கடவுளும், தான் ஹனுமனுக்கு, கடன்பட்டதாய்ச் சொல்கிறான்.
அயோத்தியாயணம்-4
கோயிலைக் காப்பதற்காக உயிரையும் கொடுத்த மன்னர்கள் பிறந்த நாடு பாரத நாடு. அதே வழியில், இன்று ஒரு கோயிலுக்கே உயிர் கொடுக்கும் மன்னன் ஆளுகின்ற நேரம் இது.
அயோத்தியாயணம்-3
அங்கே அறம் பெரிது, தர்மம் பெரிது. பாசம் பெரிது, வீரம் பெரிது. அயோத்தியாவில் மதில்களும் பெரிது. அயோத்தியின் புகழ் பெரிது. அயோத்தியாவைச் சுற்றியுள்ள மதில், மலைகளைப் போல வலிமையாய், நகர மாந்தரைக் காக்கும் காவல் தெய்வமாய் இருந்தது; காத்து வந்தது.
அயோத்தியாயணம்-2
ஸ்ரீமன் நாராயணன் அயோத்யாவைத் தேர்தெடுத்தான், அவதாரம் புரிய. அயோத்தியா போல தேவலோகத்திலும் ஒரு நகர் இல்லை “இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?”
அயோத்தியாயணம்-1
“நிலமகளின் விலாசம் அயோத்தியோ” என்று ஆரம்பத்திலேயே அயோத்தியின் பெருமையை வானில் வைக்கிறான் கம்பன். பூமியின் திலகமோ? பூமியின் கண்ணோ? மங்கல சூத்திரமோ? நிலமகளின் மார்பில் அணிந்த இரத்தின மாலையோ? நிலமகளின் உயிரின் இருக்கையோ? லட்சுமி வசிக்கும் தாமரையோ? திருமால் மார்பில் அணிந்த ஆபரணங்கள் வைக்கப்பட்ட பெட்டியோ? தேவலோகத்திற்கும் மேலான இடமோ? இல்லை ஊழிக்காலத்தில் எல்லாமும் தங்கும் திருமாலின் வயிறோ?”