-துக்ளக் சத்யா, லக்ஷ்மி மணிவண்ணன், பி.ஏ.கிருஷ்ணன்
வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் மீது பாரத ராணுவம் நடத்தி வரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அந்நாட்டைப் பந்தாடி வருகிறது. இந்நிலையில் நமது ராணுவத்தினரின் தியாகத்தையும் அரசின் உறுதியையும் கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியல் சார்ந்த சிலர், எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தக் கழிசடைக் கும்பலைக் கண்டிக்கும் நேர்மையாளர்களின் பதிவுகள் நமது தளத்தில் தொடர்கின்றன… இது முதல் பகுதி…

1. அமைதி என்ற பெயரில் வக்கிர சிந்தனை
-துக்ளக் சத்யா
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை தொடர்பாக, சில எழுத்தாளர்களும் கலைஞர்களும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.
‘பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மத அடையாளத்தை உறுதி செய்து கொண்ட பிறகே தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர் என்பது பொய்த்தகவல், அதை இந்திய மக்கள் நிராகரித்து விட்டனர்’ என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த தீவிரவாத சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு வர பாகிஸ்தான் தயாராக இருந்ததாகவும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டு விட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் மதச்சார்பற்ற தன்மை வெளிப்படவில்லை என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
‘போரால் இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பார்கள். இது ஒரு சாதனையா? போர் மீளாத்துயர் தரும். நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. மத ரீதியான மோதலுக்கும் வெறுப்பரசியலுக்கும் வழி வகுக்கும்…’ என்றெல்லாம் கவலை தெரிவித்துள்ளது அந்த அறிக்கை.
மத அடையாளம் கேட்டே தீவிரவாதிகள் சுட்டனர் என்று நாடு முழுவதிலிருந்து வெளியான பல பத்திரிகைகளும் குறிப்பிட்டுள்ளன. எல்லா பத்திரிகைகளும் ஒரே மாதிரியாக பொய் கூறிவிட்டன என்பதை விட பெரிய பொய் இருக்க முடியாது.
15 நாட்களுக்குப் பிறகே இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு துணை நின்று நடத்தும்; அதன் பிறகு அவர்களை விசாரணைக்கு அனுமதித்து, அவர்கள் சொல்லும் பொய்யை ஏற்க வேண்டும் என்றால், முழு மூடர்கள் இந்தியத் தலைவர்களாக இருந்தால்தான் சாத்தியம்.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மதச்சார்பின்மை இல்லை என்பதிலிருந்தே இந்த அறிக்கை யாருடைய குரல் என்று புரிந்து கொள்ள முடியும். இந்த ஏமாற்று வித்தையை பல ஆண்டுகளாக நாடு பார்த்து வருகிறது.
போர்க்கொடுமை, போரின் விளைவுகள் பற்றிய போதனையை பாகிஸ்தானுக்குத் தான் தர வேண்டும். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்தி வந்த தீவிரவாத சம்பவங்களுக்கு அளவே இல்லை. இது போருக்கு வழி வகுக்கும் என்று தெரியாத பாகிஸ்தானுக்கு இந்த அறிக்கையை அவர்கள் அனுப்பலாம்.
கட்டுப்படுத்தப்படாத பயங்கரவாதம் போரை விடக் கொடியது.
மோடியையும் பாஜகவையும் பிடிக்கவில்லை என்றால் அரசியல் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதன் காரணமாக நாட்டுக்கு எதிரான மனநிலையை வளர்த்துக் கொள்வது ஆபத்தானது.
மத்திய அரசை ஆதரிக்க மனம் வராமல், ‘இந்திய ராணுவத்துக்கு துணை நிற்போம்’ என்று கூறுவதற்கு அது போன்ற வக்கிர சிந்தனையே காரணம்.
மத்திய அரசு இல்லாமல் இந்திய ராணுவம் இல்லை. பிரதமர் சொல்லாத எதையும் இந்திய ராணுவம் செய்யப் போவதில்லை.
யார் என்ன சொன்னாலும், மத்திய அரசுக்கே துணை நிற்போம். நாட்டைக் காக்கும் மோடியின் முயற்சி வெல்லட்டும்.
$$$
2. தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் கம்யூனிஸ தாலிபான்கள் ஆனது எப்படி?
-லக்ஷ்மி மணிவண்ணன்
இன்று தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பான்மையோர் கம்யூனிஸ தாலிபான்கள்; தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். இந்தக் கும்பல் இன்றைய ஊடகத்தின் உபசாதி போன்றது. திராவிடத்தின் கள்ளக் கருத்தியல்களுடன் இணைக்கப்பட்டது.
போலியான அறிவுச் சூழலை இவர்கள் புனைந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு அசாதாரண நிலை. இவர்கள் இணைந்து ஒரு தாலிபான் மனநிலையை தமிழ் நாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த நிலை இவ்வாறே நீடித்தால், இது தேச நலனுக்கோ, இளைஞர்களின் எதிர்காலத்திற்கோ, பண்பாட்டிற்கோ நல்லதல்ல. இவர்கள் பல்வேறுபட்ட பிரச்னைகளைப் பேசுபவர்கள் போல பாவனை செய்தாலும் கூட, நடித்தாலும் கூட அடிப்படையில் இவர்கள் இந்திய, ஹிந்து எதிர்ப்பாளர்கள் என்பதே உண்மை
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு நிலை இருக்கவில்லை. அப்போது வணிக எழுத்தாளர்கள், நவீன எழுத்தாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சி எழுத்தாளர்கள் என மூன்று வகையினர் இருந்தார்கள். நவீன எழுத்தாளர்களை அப்போது கம்யூனிஸ்ட் கட்சி எழுத்தாளர்கள் அவதூறு செய்தார்கள், தாக்கினர்கள். நவீன தமிழ் எழுத்தின் பின்னணியில் பிராமணர்கள் அதிகம் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. அப்போது கட்சி எழுத்தாளர்களும், வணிக எழுத்தாளர்களும் மதிப்பீட்டின் அடிப்படையில் பொருட்படுத்தப் படவில்லை
ஊடகம் அப்போது பிராமணர் வசமே இருந்தது. அது குற்றங்குறைகள் இருப்பினும் கூட ஒரு ஆரோக்கியமான நிலை என்றே சொல்ல வேண்டும். குற்றங்குறைகள் கொண்ட ஆரோக்கிய நிலை அது. பிராமணர்களைப் பொருத்த வரை அவர்கள் பல்வேறு கருத்தியல் தளங்களில் பங்காற்றினாலும் கூட அவர்கள் தேசத்துக்கு எதிரானவர்களாக மாறுவது கிடையாது. ஹிந்து எதிர்ப்பு பிராமணர்கள் இருக்கிறார்கள்- ஆனால் இந்திய எதிர்ப்பு பிராமணர்கள் கிடையாது. ராஜன் குறை என்னும் ஒரு நரகல் விதிவிலக்கு. ஊடகமும் எழுத்தும் இரட்டைக் குழந்தைகள் போல. ஒன்றை ஒன்று நிரப்பும்.
தமிழ்நாட்டில் நிலவிய கடும் பிராமண எதிர்ப்பால் பிராமணர்கள் ஊடகங்களில் இருந்து விரட்டப்பட்டார்கள். மிஞ்சிய ஒன்றிரண்டு சக்கைகள் பிழைப்பை முன்வைத்து கடுமையான போலி தாலிபான் நிலை எடுத்தார்கள். ஹிந்து ராம் போன்றோர் உதாரணம். ஆனந்த விகடன் போன்ற பிராமண முதலாளிகள் நடத்திய இதழ்களைக் கூட கிரிப்ட்டோ கிறிஸ்தவர்கள் அபகரித்து தாங்கள் காட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். இன்று தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஊடகங்களில், இந்திய எதிர்ப்பையும், ஹிந்து எதிர்ப்பையும் கொள்கையாக வகுத்துக் கொள்ளாத எவருமே பணியாற்றவே முடியாது என்பதே கசப்பான உண்மை. மதமாற்ற சக்திகள், தாலிபான் ஊக்க சக்திகள் உங்களை அறிய வேண்டுமானால் நீங்கள் தீவிர இந்திய, ஹிந்து எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்தாக வேண்டும் என்பதே கசப்பான உண்மை
தொடர்ந்து நான் இந்த இழி நிலையை சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கிறேன்
இன்று இந்தக் கும்பல் வெளிப்படையாக பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்து இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்தக் கூட்டம் எழுத்தாளர்கள் என்னும் போர்வையில் இதனைச் செய்திருக்கிறது.
இது எவ்வாறு சாத்தியம் ஆயிற்று?
தொண்ணுறுகளில் தமிழில் நவீன இலக்கியம் தவிர்க்க இயலாத சக்தியாக உருவெடுத்தது. அதுவரையில் நவீன இலக்கியத்தைத் தாக்கி அவதூறு செய்த கம்யூனிஸ்ட்கள் அதன் சக்தி கண்டு நவீன இலக்கியத்தில் புகத் தொடங்கினார்கள். இன்று நவீன இலக்கியமும் கம்யூனிச தாலிபான் கூட்டமாக மாறி நிற்கிறது. இதற்கு எதிராக சக்தி வாய்ந்த நடவடிக்கை அவசியம்.
அவர்களுடைய இந்திய எதிர்ப்பு அறிக்கையில் பெயர் சொல்லப்படாத உதிரி செந்நாய்கள் ‘என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்’ என்று ஊழையிட்டு ஏங்குகின்றன. ஒருவிதத்தில் இது பார்க்க பரிதாபமாக இருந்தாலும், இந்த நாய்கள் கூட்டாகச் சேர்ந்து தனிமைப்படுத்தி விடும் என்கிற அச்ச உணர்வை சூழலில் உண்டாக்கியிருப்பதை இது தெளிவாக்குகிறது
உண்மையாகவே இந்த நாய்களின் அறிக்கை சட்ட ரீதியாக குற்றம். தார்மிக ரீதியிலும் பிழை. இவர்கள் ஒவ்வொருவர் பேரிலும் நடவடிக்கை அவசியம்.
$$$
3. இரட்டைவேடமிடும் சமாதானப் புறாக்கள்
-பி.ஏ.கிருஷ்ணன்
நமது எழுத்தாளர்களின் மனிதநேயம் வேடிக்கையானது.
இவர்களில் யாரும் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனேகமாக அனைவரும் ஹிந்துக்கள் என்பதை ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. தாக்குதலில் பலியானவர்களின் மனைவிகள் ‘எங்களை ஹிந்துவா என்று கேட்ட பிறகுதான் சுட்டுக் கொன்றார்கள்’ என்று சொன்னவற்றை புறந்தள்ளி விட்டு சுட்டவர்கள் ஹிந்து என்று பார்த்துச் சுடவில்லை என்று அறிக்கை விடுபவர்கள்.
பாகிஸ்தான் சொல்பவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு இந்தியா சர்வேதேச விசாரணைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கேட்பவர்கள். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்திருக்க வேண்டாம் எனக் கருதுபவர்கள்.
போர் வேண்டாம் என்று சொல்வதற்கும் பாகிஸ்தான் சொல்வதோடு ஒத்துப் போக வேண்டும் என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
ஆனால் எனக்கு இது வியப்பைத் தரவில்லை. இவர்களில் பலர் பெரியார் சீடர்கள். அவர் மனிதநேயம் ஓங்குக என்று சொன்ன அதே வாயால் தமிழ் பிராமணர்கள் முழுவதுமாகக் கொலை செய்யப்பட வேண்டும் என்று சொன்னவர்.
***
எனது அறிக்கை:
மனித நேயத்திற்கும் மனித உரிமைகளுக்கும் ஆதரவாக நான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு வருகிறவன்.
எனது மனிதநேய வட்டத்திற்குள் ஹிந்துக்களும் வருவார்கள். மற்றைய மதத்தினரின் உரிமைகளை மதிப்பது போல, ஹிந்து மக்களின் உரிமைகளை நான் முழுவதும் மதிப்பேன்.
சிந்தூர் நடந்திருக்க வேண்டாம் என்று சொல்வது பயங்கரவாத ஊற்றை அடைக்காமல் விட்டுவிடலாம் என்று சொல்வது போன்று என நான் நினைக்கிறேன். இந்தியாவிற்கு வேறு வழி ஏதும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. பாகிஸ்தான் இப்போது என்ன சொன்னாலும், பின்னால் பயங்கரவாதிகளை ஆதரிப்பதில் இருக்கும் அபாயங்களைக் கருத்தில் கொண்டுதான் செயல்படும். அதனால் பயங்கரவாதிகளுக்கு நிச்சயம் பின்னடைவு ஏற்படும்.
பாகிஸ்தானோடு போர் நிகழக் கூடாது என்றுதான் நானும் விரும்புகிறேன். இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகள் நடத்தி இந்த அபாயகரமான சூழலை முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
***
நேற்று வரை நான் எடுக்கும் ஆயுதத்தை எதிரிதான் தீர்மானிக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ் எழுத்தாளர்கள் இன்று சமாதானப் புறாக்களாக மாறி வானில் பறக்க முயல்கிறார்கள்.
ஐயா, நானும் போர் வேண்டாம் என்றுதான் சொல்கிறேன். ஆனால் பாகிஸ்தானும் அவ்வாறு சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று சமூகத்திற்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
போர் வேண்டாம் என்று சொல்வதும், பாகிஸ்தான் சமாதானத்தை வேண்டுகிறது ஆனால் இந்தியா அதை ஒதுக்கித் தள்ளுகிறது என்று சொல்லாமல் சொல்வதும் வேறு.
$$$
2 thoughts on “இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 1”