நாவாய்- புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்!

-சேக்கிழான்

கோவையில் வசிக்கும் திரு. பார்கவன் சோழன், திரைத்துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்; சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட எழுத்தாளர். அதற்கென INDUS என்ற இணைய இதழை நடத்தி வருகிறார். இதில் ‘நாவாய்’ என்ற தொடரை பார்கவன் சோழன் எழுதி வருகிறார்.

கப்பலோட்டிய தமிழன், தென்னகத்தின் சுதேசிப் பிழம்பு, செக்கிழுத்த செம்மல் திரு. வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தொடர் அது.

இந்நிலையில், அந்தத் தொடரை செயற்கை நுண்னறிவுத் தொழில்நுட்ப (A.I.) உதவியுடன் ‘நாவாய்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் FIRST LOOK POSTER அண்மையில் (26.04.2025) வெளியிடப்பட்டது. மதுரை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இதனை வெளியிட்டார்.

சுதந்திர வேள்வியில் தமிழகத்தின் ஆன்மாவாகச் சுடர்விட்ட தியாகதீபம் வ.உ.சி. அவர்கள். அவரைப் பற்றிய வரலாற்றுத் திரைப்படத்தை தோழர் திரு. பார்கவன் சோழன் இயக்கி, உருவாக்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு ‘பொருள் புதிது’ இணையதளத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! அவரது முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

$$$

Leave a comment