கருணைமிகு திருக்கருவையம்பதி- இனிய தொகுப்பு

கரிவலம்வந்தநல்லூரின் தலப்பெருமைகள், இத்தலம் குறித்து எழுதப்பட்ட இலக்கியங்கள் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ள இனிய நூல், ‘கருணைமிகு திருக்கருவையம்பதி’. திருக்கருவையம்பதி என்பது கரிவலம்வந்தநல்லூரின் இலக்கியப் பெயர். தங்கள் ஊர் சிவன் கோயிலின் பாரம்பரிய வரலாற்றையும் தற்போதைய நடைமுறைகளையும் சீராகத் தொகுத்து அளித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.