‘யானைக்குத் தழையுணவைக் கொடுக்கிறோம். அது அதை உடனே உண்ணாமல் தன் கொம்பினிடையிலே வைத்துக் கொள்கிறது. “அடடா, இதை இது உண்ண வேண்டுமென்றல்லவா கொடுத்தோம்? இது இங்கே துக் கொண்டு விட்டதே” என்று கவலைப் படலாமோ! யானை எப்படியும் அதை உண்டே விடும். யானை தன் கோட்டிடையே வைத்த கவளத்தைப் போன்றது, அதியமான் நமக்குத் தரப்போகும் பரிசில்; அது நம் கையிலே இருப்பது போன்றதுதான். அது கிடைக்காமற் போகாது. இதை அனுபவத்தில் நாம் நன்றாக உணர்ந்திருக்கிறோமே அப்படியிருந்தும் நீ ஐயுறலாமோ! ..’