அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 2 ஆ

அந்த நெடியோன் பாண்டிய குலத்தில் வந்த பெரிய மன்னர்களில் ஒருவன். ஒருகுலத்தில் பல மன்னர்கள் பிறந்திருந்தாலும், யாரேனும் சிலருடைய பெயராலே அந்தக் குலத்தைக் குறிப்பது வழக்கம். அந்தப் பெயரை உடையவர்கள் மிக்க சிறப்பைப் பெற்றவர்கள் என்பதை அவர்கள் குலம் என்று சுட்டிச் சொல்லும் வழக்கத்தினால் உணரலாம். சூரிய வம்சத்தில் பலர் உதித்தாலும் ரகு என்ற மன்னன் சிறந்தவனாக இருந்தான். அதனால் ரகுகுலம் என்ற பெயர் இராமன் பிறந்த குலத்துக்கு ஏற்பட்டது....