-ச.சண்முகநாதன்

10. கன்றைக் கண்ட பசு…
பிரிந்த கன்றைப் பார்த்த தாயாருக்கு எவ்வளவு மகிழ்ச்சி வருமோ அவ்வளவு மகிழ்ச்சி, ராமனை மீண்டும் பார்த்ததில்.
மாயையால் பிரிந்தவர்க்கு, ராமனைப் பார்த்த மாத்திரத்தில் பரப்பிரம்மத்தைக் கண்டது போல இருந்தது.
பரத சத்ருக்கனுகனுடைய கண்கள் ராமனைப் பார்த்த மாத்திரத்தில் எவ்வளவு மகிழ்ச்சியடையுமோ, அவ்வளவு மகிழ்ச்சி அனைவருக்கும்.
வியாதியால் உடலை நீங்கிய உடம்பில் உயிர் புகுந்தாற்போல ஆனது, ராமனைக் கண்ட அயோத்தி மாநகர் மக்களின் நிலை.
இன்று நாம் கொண்டிருக்கும் அதே மனநிலை.
“தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான்;
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான்”
ராமன் வருகிறான்.
வா ராமா!
$$$