மிருகங்களும் பக்ஷிகளும்

... எளிய வகுப்பினருக்குச் சிறிதேனும் ஈரம் இரக்கமின்றிக் கொடுமைகள் செய்யும் மக்களின் மீது சில சமயங்களில் என்னையும் மீறி எனக்குக் கோபம் பிறந்து விடுகிறது. ஆனால், இந்தக் கோபத்தையும் கூடிய சீக்கிரத்தில் முயற்சி பண்ணி அடக்கி விடுகிறேன். நீங்கள் சொன்ன விதியையே எப்போதும் பரிபூரணமாக அனுஷ்டிக்க முயலுகின்றேன். ஏனென்றால், கோபச் சொற்கள் நமது நோக்கத்தின் நிறைவேறுதலுக்கே, நீங்கள் குறிப்பிட்டவாறு, தடையாகி முறிகின்றன. ...

ஓநாயும் வீட்டுநாயும்

எத்துணை புஷ்டியாக இருந்தாலும், வசதியாக வாழ்ந்தாலும் அடிமைப்பட்டவன் நிம்மதியாக இருக்க முடியாது என்கிறார் மகாகவி பாரதி இக்கதையின் மூலம்…

அனந்த சக்தி

தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேன்மேலும் பெருகச் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டாகவே நாம் உயிர்தரிக்கின்றோம்.   “மாதா இந்த நாட்டு ஜனங்களுக்குச் சக்தி யதிகரிக்கும்படி செய்க; அக் காரியத்தை நிறைவேற்றுதற்குரிய சக்தியை எனக்கருள் புரிக”' என்று நம்மில் ஒவ்வொருவனும் தியானம் புரிய வேண்டும்.

பிராமண வெறுப்பை உமிழும் திருந்தாத திராவிடம்!

தினமலர் (ஈரோடு, சேலம்) நாளிதழில் வெளியான தவறான, கண்டிக்கத்தக்க செய்தி ஒன்றிற்காக, தமிழகத்தின் பூர்வகுடிகளான பிராமண மக்களை நாக்கூசாமல் வசை பாடுகிறது ஒரு கும்பல். பிரிட்டீஷாரால் திணிக்கப்பட்ட ஆரிய- திராவிடக் கோட்பாட்டை இன்னமும் பற்றிக்கொண்டு அரசியல் நடத்துவோரின் எளிய இலக்குகளாக பிராமணர்கள் தாக்கப்படுவதை நம்மால் கண்டும் காணாமல் இருக்க இயலாது.

வீரத்தாய்மார்கள்

அந் நாட்களில் மாதர்கள் காட்டிய வீரத்தன்மையையும், இந்நாளிலே ஆண்மக்கள் காட்டும் பேடித் தன்மையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது,  “ஆ! நமது உயர்வு கொண்ட பாரத ஜாதி இத்தனை தாழ்ந்த நிலைக்கு வருவதைக் காட்டிலும் ஒரேயடியாக அழிந்து போயிருந்தாலும் சிறப்பாயிருக்குமே” என்று மனம் குமுறுகின்றது.

அகல் விளக்கு- 17

அடுத்த மார்கழி விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, பாக்கிய அம்மையார், வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கேட்டார். அவருடைய முகத்தில் முன்போல் மகிழ்ச்சியும் ஊக்கமும் காணப்படவில்லை. கவலையும் சோர்வும் காணப்பட்டன. அவரைப் பார்த்தவுடன், இமாவதி சொன்னது நினைவுக்கு வந்து என் உள்ளத்தை வருத்தியது.