ராமாயண சாரம் (24-25)

அன்றைய இரவு, மனித குலத்தின் ஓரு பெரும்போரை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. இலங்கையின் இரண்டு முனைகளில் இரண்டு மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இரண்டு வீரர்கள் ஒருவரோடு ஒருவர் பொருதற்குக் காத்திருந்தனர். அடிபட்ட புலிபோல, தர்மத்தை நிலைநாட்ட வேண்டி ராமன் ஒரு முனையில். அதர்மியாக, அதீத ஆசை கொண்டு, யார் பேச்சையும் மதிக்காமல் திமிர் பிடித்த ராவணன் மறுமுனையில்.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 6

கல்வி மட்டுமல்லாது மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துதல் அவசியம் என்கிறார் மகாகவி பாரதி. அவரது  ‘தேசியக் கல்வி’ திட்டத்தில் ‘சரீரப் பயிற்சி’க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ராமாயண சாரம்- 23

நளன் வானரத் தச்சன் என்றறியப் பட்டவன். It was not a random choice. அனுமன் இலங்கை செல்ல வேண்டுமென்பதும் நளன் சேது செய்ய வேண்டும் என்பதும், அவரவர் திறமையை உணர்ந்தே. Horses for courses.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 5

மகாகவி பாரதி தான் முன்வைத்த தேசியக் கல்வி என்ற திட்ட்த்தில் வலியுறுத்தும் பாடங்கள்: 1. எழுத்து, படிப்பு, கணக்கு, 2.  இலேசான சரித்திரப் பாடங்கள், 3.  பூமி சாஸ்திரம், 4.  மதப்படிப்பு, 5. ராஜ்ய சாஸ்திரம், 6.  பொருள் நூல், 7. ஸயன்ஸ் அல்லது பெளதிக சாஸ்திரம், 8.  சரீரப் பயிற்சி, 9.  யாத்திரை (Excursion) ஆகியன. ...

ராமாயண சாரம் – 22

ராமனின் சிறந்த பக்தன் அல்லவா அனுமன்?  கோபத்தில், உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிறான். ராவணன், சீதைக்கும் ராமனுக்கும், செய்த கொடுமைக்குப் பதில் சொல்லும் விதமாய் துவம்சம் செய்கிறான். அனுமனின் பராக்கிரமத்தை கம்பன் (at his best) தமிழில் வானளாவிய கவிதை செய்து வைத்திருக்கிறான்.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 4

மகாகவி பாரதி விரும்பிய கல்வி என்பது தேசியக் கல்வி ஆகும். அக்கல்வி ஆன்மிக அடிப்படையில் அமைந்திருக்கும். தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதாகவும், மாணவர்களை சொந்தக்காலில் நிற்கச் செய்வதாகவும், தேசியச் செயல்வீரர்களை உருவாக்குவதாகவும் அக்கல்வி அமைந்திருக்கும்....

ராமாயண சாரம் – 21

அதன் பின், சீதை, தன் கசங்கிய ஆடையில் முடிந்து வைத்திருந்த சூளாமணியைக் கொடுத்து  “எப்பொழுதெல்லாம் ராமனின் நினைவு வருகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த சூளாமணியைப் பார்த்து ஆறுதல் அடைவேன். நீ என்னைப் பார்த்ததற்கான அடையாளமாக இதைக் கொண்டு செல்” என்று சொல்கிறாள்.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 3

பாரதி எழுதிய ‘தேசியக் கல்வி’ என்ற கட்டுரையில், பாரதி விரும்பிய சுதேசிப் பள்ளியின் இலக்கணமும், அங்கு பயிற்றுவிக்கப்பட வேண்டிய பாடங்களும், ஒரு தேர்ந்த கல்வியாளர் போல திட்டமிட்டு அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டு உவக்கிறோம்.

ராமாயண சாரம் (19-20)

தன் உயிரைத் துச்சமென மதித்து கடல் கடந்து தனியனாக வந்து அரக்கர் மாளிகையின் உட்புகுந்து சீதையைத் தேடி தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிய அனுமனுக்கு கோவில் வைத்து கும்பிட்டு நன்றி சொல்வது நம் கடமை.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 2

திருவள்ளுவரையும் சுவாமி விவேகானந்தரையும் தனது ஆதர்ஷ நாயகர்களாகக் கருதியவர் மகாகவி பாரதி. இது, அவரது படைப்புகளில், சிந்தனைகளில் வெளிப்பட்டபடியே இருக்கிறது. பாரதியின் கல்விச் சிந்தனைகள் பலவும் வள்ளுவரும் விவேகானந்தரும் கூறியவையே. வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட நாயகரான பாரதி, இக்கருத்துகளையே தனது பாணியில் முன்வைக்கிறார்.

ராமாயண சாரம் (17-18)

தன் மகன் அங்கதனை அழைத்து  “ராமன் என்னை முடித்துவிட்டான் என்ற எண்ணம் எப்பொழுதும் உன் மனதில் எழக் கூடாது. நடந்தது தர்மத்தின் படியே நடந்திருக்கிறது. எனவே நீ  “தருமம் நோக்கி, மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி” என்று அங்கதனிடம் சொல்லிவிட்டு  “ராமா இவன் மற்று உன் கையடை ஆகும்” என்று ராமனிடம் ஒப்புவித்து விட்டு மேலுலகம் செல்கிறான் வாலி.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 1

வைரத்தின் ஒவ்வொரு முகப்பும் ஒளியுடன் திகழ்வது போல, மகாகவி பாரதியின் கவிதைகளும் கட்டுரைகளும் தேசநலனை மட்டுமே ஒளியாக உமிழ்கின்றன. அவற்றில் கல்விக்கு அவர் அளிக்கும் இன்றியமையாமையை மட்டும் இங்கு நாம் தொடராகத் தொகுத்துக் காணலாம்....

பொது சிவில் சட்டம் தேவைதானா?

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அது எவ்வாறு இந்துக்களில் ஒரு பிரிவினரின் திருமண முறை மற்றும் பழங்குடிகளின் வாழ்வியல் முறைகளில் காலம் காலமாக இருந்து வரும் மரபுகளை பாதிக்கும் என்பது குறித்தும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்தும் விவரிக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு. இந்து தமிழ் திசை டிஜிட்டல் இணைய இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரை இது...

காவடிச்சிந்து

மகாகவி பாரதியின் காலத்தில் காவடிச்சிந்து மிகவும் போற்றப்பட்டது. எட்டயபுரம் அரண்மனையில் பாரதி பணியில் இருந்தபோது காவடிச்சிந்து பாட முடியுமா? என்ற புலவர்கள் கேட்க, பாரதியும் காவடிச்சிந்து மெட்டில் பாடலொன்று பாடியுள்ளார். அப்பாடலின் ஒரு கண்ணி மட்டுமே கிடைத்துள்ளது. இதோ அப்பாடல்…

‘A misconception is that the UCC will interfere with the Shariat’: Atif Rasheed

The BJP leader Atif Rasheed says people have made up opinions without actually understanding the depth of the Uniform Civil Code. It is an interview by Ismat Ara, published in FrontLine magazine...