வெட்டவெளி

-கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்

நாகர்கோவிலில் வசிக்கும் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன், தத்துவமும் கவிதையும் இயந்த மன கொண்டவர். முகநூலில் அவர் எழுதும் இனிய கவிதைகள் நமது தளத்தில் அவ்வப்போது வெளியாகும்...


உடல் விடர்த்து
தளிர்க்கும் அரசமரம்
மரத்தின் எலும்புக்கூடென
நிற்கிறது.

கிளைகளில் அமர்ந்திருக்கும்
காகங்கள்
கிளிகள்
கொக்குகள் மரத்தின் பழங்களென
தொங்குகின்றன.

அடுத்த பருவம் இவை உதிர்த்து
பச்சயம் பூக்கும்.
பழங்களை மூடிக் கொள்ளும்
பச்சயம்.

எல்லாமே வெட்ட வெளியில்
நடக்கின்றன.
ஒளிவு மறைவு என்று
ஒன்றுகூட இல்லை.

பிரதான சாலையோரம்
இது.

$$$

Leave a comment