-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்று ஒன்பதாம் திருப்பதி...

99. வன வடிவில் பெருமாள் அருள்பாலிக்கும் நைமிசாரண்யம்
பஞ்ச ஆயுதங்களை அணிந்தவனே, பாஞ்சசான்யம் உடையவனே! சஞ்சரிக்கும் சூரியனை பஞ்சவர்க்காய் மறைத்தவனே! அஞ்சி வரும் பக்தர்களைக் காப்பவனே! நைமி சாரண்யத்தில் நிற்பவனே! தஞ்சம் என வந்த என்னை தடுத்தாட்கொள்வாயே!
ஸ்ரீமத் பாகவதம் உபதேசிக்கப்பட்ட தலம். கோமுகி நதி மற்றும் சக்ர தீர்த்த்த்தின் கரையில் பெருமாள் வனரூபமாகக் காட்சி அளிக்கிறார். ஸ்வயம் வ்யக்த ஷேத்திரங்களுள் ஒன்று. 108 திவ்ய தேசங்களில், இத்தலத்தில் மட்டுமே இயற்கை முறைப்படி பெருமாளை வன உருவத்தில் வழிபடும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.புரானகாலத்தில் ரிஷி முனிவர்கள் தவம் செய்த பகுதி இது.
மூலவர்: தேவராஜன் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: புண்டரீகவல்லி
விமானம்: ஸ்ரீஹரி விமானம்
தீர்த்தம்: சக்ர தீர்த்தம், கோமுகி நதி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்
தல விருட்சம்: தபோவனம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை
எப்படிச் செல்வது?
இத்திருத்தலம் உத்தரப்பிரதேச மாநில, சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ளது. கொல்கத்தா- டேராடுன் ரயில் மார்க்கமாய்ச் செல்லும் பாதையில் பாவமாவ் ஜங்ஷனில் இறங்கி அங்கிருந்து தோப்பூர் போகும் மற்றொரு ரயிலில் ஏறினால் நைமிசாரண்யம் ரயில்நிலையம் வரும். அங்கிருந்து நடைபாதையாகவே இக்கோயிலுக்குச் செல்லலாம். உ.பி. தலைநகர் லக்னோவிலிருந்து சீதாப்பூர் செல்லும் சாலையில் 90கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
எல்லாவித தோஷங்களையும், தடங்கல்களையும் போக்கக் கூடிய தலம் ஆகும். 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$