-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபத்து மூன்றாம் திருப்பதி...

63. பீமன் புனர்நிர்மாணம் செய்த திருப்புலியூர்
அட்டமா சித்தியும் வேண்டாம்… பட்டமோடு நாடும் வேண்டாம்… கட்டி ஆள செல்வமும் வேண்டாம் – திருப்புலியூர் குட்ட நாடு மாயபிரானின் – விழி பட்டால் போதும் விடிமோட்சம் ஆகுமே!
வ்ருஷாதர்பி அரசவைக்கு வந்த சப்தரிஷிகள் அரசனிடம் தானம் வாங்க மறுத்ததால் கோபம் கொண்ட அரசன் பிசாசை ஏவினான். அதனை இந்திரன் புலி உருவில் வந்து கொன்றான். எனவே இந்த்த் தலம் புலியூர் என்று பெயர் பெற்றது. அதையடுத்து சப்தரிஷிகளுக்கும் இந்திரனுக்கும் பெருமாள் மாயபிரானாக தரிசனம் அளித்தார். இத்தலம் பீமசேனனால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது என்று தல புராணம் கூறுகிறது. இங்கு சிவன் சன்னிதியும் அமைந்துள்ளது.
மூலவர்: மாயபிரான் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: பொற்கொடி நாச்சியார்
விமானம்: புருஷோத்தம விமானம்
தீர்த்தம்: பிரக்ஞா சரஸ், பூஞ்சுனை தீர்த்தம்
மங்களா சாசனம்: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 08.00 மணி வரை
எப்படிச் செல்வது?
இத்தலம் கேரள மாநிலம், செங்கன்னூரிலிருந்து மேற்கு திசையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது (புலியூர்).
சேவிப்பதன் பலன்கள்:
எல்லாவித நல்ல பலன்கள் கொடுக்கக் கூடிய தலமாகும். 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.
$$$