திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -51

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐம்பத்தொன்றாம் திருப்பதி...

51.  பூமா தேவி தவமிருந்த ஸ்ரீவரமங்கை  

ஒன்று - ஆதிமூலமாக ஒன்றானவன்!
இரண்டு - இரு இதிகாசங்களுக்கு மூலமானவன்!
மூன்று - மும்மூர்த்திகளில் முதன்மையானவன்!
நான்கு - யுகம் நான்கிலும் நான்கு வர்ணமானவன்!
ஐந்து - பாண்டவர் ஐவரைக் காத்தவன்!
ஆறு - ஆறுமுகத்துக்கு மாமனானவன்!
ஏழு - அந்த ஏழுமலையின் ஆண்டவன்!
எட்டு - கஞ்சியின் அஷ்டபுஜங்கள் ஆனவன்!
ஒன்பது - நவசயனங்கள் கொண்டவன்!
பத்து - தசாவதாரமானவன் ஐயனே!
ஸ்ரீவரமங்கை தோதாதரிநாதனே!
எத்தனைதான் நான் எண்ணுவேன்?
உன் லீலைகளைச் சொல்ல நான் அறிகிலேனே!

இத்தலம் நாட்டிலுள்ள 7 சுயம்புப் பெருமாள் தலங்களுள் ஒன்று. நான்கு ஏரிகள் சூழ்ந்த நான்குனேரியில் உள்ள கோயில். வானமாமலை என்றும், தோதாத்ரி என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் இறைவியின் பெயரில் இத்தலம் ஸ்ரீவரமங்கை என்றும் அழைக்கப்படுகிறது. ரோமச முனிவருக்கு காட்சி அளித்த திருத்தலம். பூமாதேவி தவம் இருந்து பெருமாளின் அருளைப் பெற்ற தலம்.

மூலவர்: தோதாத்ரிநாதன் (அமர்ந்த திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: ஸ்ரீவரமங்கை
உற்சவர்: தெய்வநாயகன்
விமானம்: நந்தவர்த்தன விமானம்
தீர்த்தம்: இந்திர புஷ்கரிணி, சேற்றுத்தாமரைக் குளம்
தல விருட்சம்: மாமரம்
மங்களா சாசனம்: நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 4.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 07.15 மணி வரை

எப்படிச் செல்வது?

திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி வரும் வழியில் நான்குனேரியில் இறங்கினால் இப் புண்ணிய தலத்தை (வானமாமலை) அடையலாம்.

சேவிப்பதன் பலன்கள்:

சரும நோய்கள் விலகவும், கஷ்டங்கள் தீரவும், மாணவர்கள் நன்கு படிக்கவும், குடும்பத்தில் சந்தோஷம் நிலவவும் வந்து வணங்க வேண்டிய தலம்.  7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment