-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது மூன்றாம் திருப்பதி...

3. மூன்று கோயில்கள் இணைந்த திருதஞ்சை மாமணிக் கோயில்
தஞ்சை மாமணியில் அமர்ந்தவனே! வஞ்சக தஞ்சனை வதைத்தவனே! நஞ்சு முலை உண்டவனே, நரசிங்கப் பெருமானே - நான் தஞ்சமே என உனை சரணடைந்தேனே!
தஞ்சாவூரில் உள்ள இக்கோயில் மூன்று மூலவர்களைக் கொண்டது. மூன்று கோயில்களும் ஒரே திவ்யதேசமாகக் கருதப்படுகின்றன. வெண்ணாற்றங்கரையில் இக்கோயில் உள்ளது.
மூலவர்:
1. நீலமேகப் பெருமாள் (அமர்ந்த கோலம்)
2. மணிகுன்றப் பெருமாள்
3. நரசிம்மப் பெருமாள் (வீற்றிருந்த திருக்கோலம்)
தாயார்:
1. செங்கமல வல்லி.
2. அம்புஜவல்லி
3. தஞ்சைநாயகி
ஆகமம்: வைகானஸம்
விமானம்: 1. சௌந்தர்ய விமானம், 2. மணிக்கூட விமானம், 3. வேதசுந்தர விமானம்.
தீர்த்தம்: அம்ருத நதி, ஸ்ரீராம தீர்த்தம், சூரிய புஷ்கரிணி
தல விருட்சம்: மகிழம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்.
திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை

எப்படிச் செல்வது?
திருவாரூருக்கு மேற்கே 58 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது இத்திருத்தலம்.
சேவிப்பதன் பலன்கள்:
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற துர் தேவதைகளால் பாதிக்கப்பட்டவர்களும், மனவளர்ச்சி குன்றியவர்களும், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தக் கோயில் வந்து முறைபடி தரிசனம் செய்து வர குணமாகும் என்பது ஐதீகம்.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களும் 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களும் இத்தலத்தில் தரிசிக்க நலம் பெறுவார்கள்.
$$$