மகாகவி பாரதியின் இறுதி நாட்கள்

பாரதி ஆய்வாளரான ரா.அ.பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து,  ‘சித்திர பாரதி’ என்ற நூலை வெளியிட்டார். 1957ல் முதலில் வெளியான இந்த நூலில், பாரதியாரின் கடைசி சில தினங்கள் எப்படியிருந்தன என்ற தகவல்களை மிக நுணுக்கமாகத் தொகுத்திருக்கிறார் அவர். அதிலிருந்து சில பகுதிகள்:

குருவிப் பாட்டு

மகாகவி பாரதியின் கவிதைகள் பல இன்னமும் கண்டறியப்படாமல் உள்ளதை இப்பாடல் காட்டுகிறது. பாரதி ஆய்வாளர் திரு. ரா.அ.பத்மநாபன்  ‘பாரதி புதையல்’ எனும் நூலில் வெளியிட்டிருக்கிற கட்டுரையுடன் கூடிய மகாகவியின் இனிய கவிதை இது… இந்தப் பாட்டு புதுச்சேரியில் ‘சரஸ்வதி விலாச சபை’ என்ற இளைஞர் சங்கத்தில் 1909இல் பாரதியாரே பாடியது.