மகர சங்கராந்தியே  பொங்கல்!

தமிழர் திருநாள் என்ற பெயரில் இந்துக்களின் பண்டிகையான பொங்கல் திருவிழாவை மடைமாற்றும் முயற்சி, இந்த ஆண்டு மாநில அரசாலும், இந்து விரோதிகளாலும் முனைப்பாக முன்னெடுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை மதச்சார்பற்றதாக மாற்ற பெரும் வேகத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படன. இதற்கு ஆங்காங்கே அறிவுலகினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து மதத்தினரும் பொங்கல் விழா கொண்டாடுவதில் நமக்கு- தமிழ் பேசும் இந்துக்களுக்கு- எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், பாரம்பரிய வேர்களை வெட்டி வீழ்த்தும் வெறியுடன் இது ஒரு பின்புலத் திட்டத்துடன் இது மேற்கொள்ளப்படுகையில் விமர்சித்தாக வேண்டி இருக்கிறது. ... இங்கே உள்ளவை, மார்க்சிய அறிஞர் திரு. இளங்கோ பிச்சாண்டி, மருத்துவ சமூகவியலாளர் திரு. அ.போ.இருங்கோவேள் ஆகியோரின் பதிவுகள்...

சர்க்கரை இல்லாத பொங்கலா?

பச்சரிசியை மட்டும் பானையிலிட்டுக் கிண்டினால் பொங்கலாகி விடுமா? சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய், முந்திரி, திராட்சை, ஏலம் இல்லாமல் பொங்கலா? அப்படித்தான் தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக திராவிட மாடல் ஆட்சியை நடத்துபவரின் ஆதரவாளர்களும், அவரை ஆட்சியில் அமர்த்திய மாற்று மதத்தவர்களும் ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்றி வருகிறார்கள். அதாவது தைப் பொங்கல் இந்துக்களின் பண்டிகை அல்லவாம்… தமிழர்களின் பண்டிகையாம்… அதற்காக பொங்கலின் வடிவத்தை மாற்ற - அதன்  ஆன்மிக உணர்வையே மழுங்கடிக்க - முயல்கிறார்கள் மடையர்கள். அவர்களுக்கான பதிலே இக் கட்டுரைகள்…