அகமும் புறமும் – 7

நாட்டை ஆளும் மன்னன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று வரையறுத்த நம் முன்னோர், மன்னனுக்கு உறுதுணை புரியும் அமைச்சனுக்கும் உயர் இலக்கணம் வரைந்துள்ளனர். ஒரு நல்லமைச்சன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான இயல்புகளை தமிழின் பழமையான இலக்கியங்கள் வழியே இங்கு முன்வைக்கிறார் அமரர் பேரா. அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள்.

அகமும் புறமும் – 6இ

பழந்தமிழ் மன்னர்கள் புகழுக்காக போர் தொடுப்பதை ஒரு கடமையாகவே கொண்டிருந்தனர். அவர்களது புகழாசையால் தமிழ்நாட்டில் தமிழர்தம் குருதியே ஆறாய்ப் பாய்ந்தது என்பதைச் சுட்டிக்காட்டும், பேரா. அ.ச.ஞானசமபந்தன், போரால் அடையும் புகழை விட, வள்ளன்மையால் அடையும் புகழே மிகச் சிறப்பானது என்று இந்த அத்தியாயத்தில் நிறுவுகிறார். கரிகால்பெருவளத்தானை விட வள்ளல் பாரியே புகழ் மிக்கோங்கியவர் என்பது இவர்தம் தீர்ப்பு.

அகமும் புறமும் – 6ஆ

ஒருவனுடைய வாழ்க்கையில் கொள்ள வேண்டிய குறிக்கோள் எத்தகையதாய் இருத்தல் வேண்டும்? அது மிக உயர்ந்ததாய் இருத்தல் வேண்டுமாம். அவ்வாறாயின், அது கைகூடாததாகவும் இருக்கலாமோ எனில், இருந்தாலும் கவலை இல்லை என்கிறார் வள்ளுவர். இத்தகைய உயர்ந்த குறிக்கோளுடைய ஒருவன் தன்னால் ஆளப்படும் நாட்டிற்குப் பெருநன்மை செய்ய வேண்டும் என்று விழைகிறான். நாட்டுக்கு நலன் விளைக்க வேண்டும் என்று நினைக்கும் அவனே ஆள்பவனாகவும் இருந்து விட்டால், அவனை யார் தடை செய்யமுடியும்? அவன் வேண்டுமானவரை நலம் புரியலாமே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

அகமும் புறமும் – 6அ

பழந்தமிழகத்தில் அரசன் எனப்பட்டவன் எவ்வாறு உருவானான்? அவன் ஏன் போர்களை நாடினான்? அவனே உலகின் அனைத்து இன்பங்களையும் சுவைக்கும் சுவைஞனாக எவ்வாறு ஆனான்? அரசனது தகுதிகள் என்ன? முடியாட்சி வழிவழியாக கைமாறியது எப்படி? அவனது அரண்மனை எவ்வாறு சிறப்புறக் கட்டப்பட்டது? அவனது தந்தக் கால் கட்டிலின் சிறப்புகள் என்ன? மன்னரைப் புலவர் பாடியதும் பாடாமல் ஒழிந்ததும் ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் புறநானூற்றுப் பாடல்களின் உதவியுடன் பதி அளிக்கிறார் பேரா. அ.ச.ஞா.

அகமும் புறமும் – 5

பாரியை ஒத்த வள்ளல்கள் தோன்றி வளர்ந்த நாடாகும் இது. இத்தகைய வள்ளல்கள் செல்வத்தின் பயன் எது என்பதை வாழ்ந்து காட்டினர். இரண்டு பிரிவாரும் மன அமைதியோடு வாழ்ந்தமையால் நாடு நல்ல நிலையில் இருந்தது. முதலாளி வர்க்கம் - தொழிலாளி வர்க்கம் என்ற பிரிவினையும், அப்பிரிவினையால் ஏற்படும் துன்பங்களும் இருக்கவில்லை.

அகமும் புறமும் -4

‘பழங்கதைகள் பேசுவதிற் பயனில்லை’ எனச் சிலர் கூறக் கேட்கிறோம். அதுவுண்மையே. ஆனால், பழமை பேசுவதால், ஓர் ஊக்கம் பிறக்குமேல், சோம்பர் ஒழியுமேல், ஆண்மை விளங்குமேல் புதிய வாழ்வு தோன்றுமேல், பழமை பேசுவதால் இழுக்கொன்றுமில்லை. நாம் இருக்கும் நாடு நமதென்று அறியவும், இது நமக்கே உரிமையாம் என்பதுணரவும், பழங்கதைகள் வேண்டத்தான் வேண்டும். அதுவும் தமிழரைப் பொறுத்த வரை மிகுதியாக வேண்டும்.

அகமும் புறமும் – 3இ

நெய்தல் நிலக் கருப்பொருள் என்று கூறத்தக்கவை பனை, புன்னை முதலிய மரங்களும், நாரை, சுறா முதலிய பறவை விலங்குகளும், மீன் முதலிய உணவுகளும் ஆகும். இந்நிலத்தில் வாழும் மக்கள் ‘பரதவர்’ என்று குறிக்கப் படுவர். தலைவன் ‘துறைவன்’ என்றும் ‘சேர்ப்பன்’ என்றும் வழங்கப்படுவான். உரிப் பொருள் என்று கூறத்தக்கது, தலைவி தலைவனைப் பிரிந்து ஆற்றாமையால் அரற்றும் நிலைமைதான்....

அகமும் புறமும்- 3ஆ

தலைவியை நினைத்துக்கொண்டு தேரை விரைவாகச் செலுத்தக் கட்டளை இடுகின்ற காலத்திலும் தலைவன் தன் உயர்ந்த பண்பாட்டிலிருந்து நீங்கவில்லை. திடீரென்று தலைவனுடைய தேர் வேகமாகப் போகத் தொடங்கினால் உடன் வருகின்ற வீரர்கள் ஓடும்படி நேரிடுமன்றோ? அவர்கள் அவ்வாறு ஓடிப் பின்தொடர வேண்டிய இன்றியமையாமை போர்க்காலத்தில் உண்டு. ஆனால், வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்களை ஓடவைப்பது முறையன்று. எனவே, தலைவன் அவர்கள் வேண்டுமளவு தங்கி இளைப்பாறிவிட்டுப் பின்னர் வரட்டும் என்கிறான்.

அகமும் புறமும்- 3அ

சமுதாயத்தை அறிய தலைவன், தலைவி, தோழி முதலியோரை வைத்து நூற்றுக்கணக்கான அகப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன. குறிப்பிட்ட ஒரு தலைவன் அல்லது ஒரு தலைவி என்போரின் பெயரை வெளிப்படுத்தும் பாடல் ஒன்றுகூட இல்லை. அகத்துறை பற்றி எழுந்த பாடல்களில் தலைவன் பெயர் அல்லது தலைவி பெயர் காணப்பெற்றால் அதனை அகத்துள் சேர்க்காமல் புறத்தில் சேர்த்துள்ளனர். அகத்தினைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம், 'சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறா' (அகத் திணை:57) என்று ஆணையிடுகிறதாகலின் அகப்பாடல்கள் அனைத்திலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்பெறவில்லை

அகமும் புறமும் -2

வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தின் இறுதிக் குறள் நன்கு சிந்திக்கற்பாலதாகும். வழக்கம் போலப் பின்னர் வரும் அதிகாரத்திற்குத் தோற்றுவாயாக மட்டும் இக்குறள் அமையவில்லை. மனித வாழ்க்கையில் அனைத்தையும் பெறுவதற்கோ, அன்றி இழப்பதற்கோ காரணமாக இருப்பது மனை வாழ்க்கைதான். மனையாள் நற்பண்புடையவளாயின், வாழ்க்கை பயன் பெறலாம்; அன்றேல், அனைத்தும் இழந்ததாகவே கருதப்படும். இது கருதியே 'மங்கலம் என்ப மனைமாட்சி' என்றார். இனி இவ் இல்வாழ்க்கையின் பயன் மக்கட்பேறு என்றார். அதுவும் நன்மக்கள் பெற்றால் ஒழியப் பயனாகக் கருதப் படுவதில்லை. ...

அகமும் புறமும் -1

தமிழ் காத்த நல்லோரில் அண்மைக்காலம் வரை வாழ்ந்த பெரியார், அமரர் திரு. அ.ச.ஞானசம்பந்தன் (1916- 2002). தமிழ் இலக்கியச் சுவையை உணர்த்தும் திறனாய்வுத் துறைக்கு முன்னோடியானவர். அன்னாரது நூலான ‘அகமும் புறமும்’ இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது..

பாரதியும் பாரதிதாசனும் -4இ

சமுதாயத்திலுள்ள குறைபாடுகள், விருப்பு வெறுப்புக்கள் ஆகியவற்றில் மனத்தை உழலவிட்ட கவிஞர் தம் பாடல்களில் அம் மன உழற்சியை வெளியிட்டுப் பலவிடங்களிலும் பாடியிருப்பதைக் காண்கின்றோம். இத்தகைய சூழ்நிலைக்கு எதிராக 'அழகின் சிரிப்பு' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள 16 கவிதைத் தொகுப்புகளும் 1944 - க்கு முன்னர் வெளியிடப் பெற்றது. ஆதலின் மேலே கூறிய குழப்பங்கள் எதுவுமில்லாமல் ஒப்புயர்வற்ற கவிதைகளாக விளங்கக் காண்கின்றோம்.

பாரதியும் பாரதிதாசனும்- 4ஆ

கவியரசர் தொடக்கத்திலிருந்து இறுதி வரையில் தூய்மையானதும், ஆழமானதும், பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியாததும் ஆகிய கடவுட் பற்றுக் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். புரட்சிக் கவிஞரை 'நாத்திகர்' என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்ற வாதத்திற்கு இந்த அளவுடன் ஒருவாறாக ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, இனி அவருடைய கவிதைகளில் புகுந்து மன நிலையைக் காண முற்படலாம்.....

பாரதியும் பாரதிதாசனும்- 4அ

பாரதி, பாரதிதாசன் என்ற இருவருடைய கவிதைகளையும் ஆர அமர நினைந்து பார்ப்போமேயானால், இருவருடைய உணர்ச்சிக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதை அறிய முடியும். இருவருடைய ஆற்றலும் பேராற்றல்கள் என்பதிலும் ஐயமில்லை. பலவிடங்களில் வாழும் மக்களிடம் பழகிய காரணத்தால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் குழாய் மூலம் நீர் சொரிவது போலப் பாரதியின் கவிதைகள் வெளிப்பட்டன. தமிழர்களை அல்லாமல் பிற மக்களோடு பழகும் வாய்ப்பைப் பெறாத காரணத்தாலும் பிற இடங்களுக்கு அதிகம் சென்று தங்கி உறவு கொள்ளாத காரணத்தாலும் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் குடத்தைக் கவிழ்த்து நீரைச் சொரிவது போல உணர்ச்சியை அப்படியே கொட்டி விடுகின்றன.

பாரதியும் பாரதிதாசனும் – 3 இ

பாரதியின் நாட்டுப் பற்று - நாட்டின் நலனைக் கவனியாதவர் மாட்டு அவர் கொண்ட அலட்சியம் - நாட்டுக்குத் தீங்கிழைப்பார்மாட்டு அவர் கொள்ளும் சீற்றம் - கடமை மறக்கும் ஆட்சியாளரை அவர் சாடுகின்ற திறம் ஆகிய அனைத்தும் சிறந்த கவிதை வடிவில் அமைந்திருப்பது பாஞ்சாலி சபதம்....