பாரதி-அறுபத்தாறு- (57-66)

“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா” என்று துவங்கும் பாரதி- அறுபத்தாறு சுயசரிதைக் கவிதையில், புதுவையில் தனக்கு வழிகாட்டிய ஆன்மிகப் பெருமக்களைப் பதிவு செய்திருக்கிறார் மகாகவி பாரதி. குரு கோவிந்தசாமியின் புகழை ஏற்கனவே மூன்று பாடல்களில் (37-39) பாடிய அவர், கோவிந்தசாமியுடன் உரையாடல் என்ற தலைப்பில் கூறி இருக்கும் பாடல்கள் (57-66) அடங்கிய இக்கவிதை, ஆன்மநேய ஒருமைப்பாட்டை விரும்புவோர்க்கு லட்சியக் கவிதையாகும். “பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!” என்ற வரியில் அவரது சிந்தனை தெள்ளென வெளிப்படுகிறது. அதேசமயம், “சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே; தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்” என்ற நிறைவு வரிகளில் பாரத ஆன்மிக ஞானத்தின் செறிவை பாரதியிடம் காண்கிறோம்....

பாரதி- அறுபத்தாறு- (54-56)

காதலின் புகழை சென்ற கவிதையில் பாடிய மகாகவி பாரதி, இக்கவிதையில், காதல் என்ற பெயரில் ஏமாற்றி பெண்மைநலம் உண்ணும் காமுகர்களின் தீய நெஞ்சை சுட்டிக்காட்டி, பொய்மைக்காதலைச் சாடுகிறார். ”ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,  அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?” என்ற அவரது கேள்வி, “கற்புநிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்ற முந்தைய ஒரு கவிதையின் (பெண்கள் விடுதலைக் கும்மி) நீட்சியே.

பாரதி-அறுபத்தாறு- (49-53)

காதலின் புகழைப் பாடும் மகாகவி பாரதியின் இக்கவிதை தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்றது. ஆணும் பெண்ணும் கூடிக் களித்து வாழும் இல்லறமே உலகை வாழ வைக்கிறது. அதற்கு அடிநாதம் காதலே. “காதல் செயும் மனைவியே சக்தி கண்டீர்! கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்” என்ற பாரதியின் பிரகடனம், காதலர்களுக்கு அமுத வாக்கு. இறைவனே காதலிக்கையில் மானுடர் காதலின் சுவையை இழக்கலாகுமா? என்பதே கவியின் கேள்வி. அதேசமயம், காதல் என்ற பெயரில் நிகழும் முறைகேடுகளை தனது அடுத்த (54-56) கவிதைகளில் கண்டிக்கவும் அவர் தவறவில்லை.

பாரதி- அறுபத்தாறு- (46-48)

முந்தைய பாடலில் பெண் விடுதலை குறித்துப் பாடிய மகாகவி பாரதி, இந்த மூன்று பாடல்களில், பெண் என்பவள் தாய், தாரம், தமக்கை, தங்கை, மகள் எனப் பல வடிவில் உடனுறைபவள் என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஆண்களால் பெண்மை அடிமை யுற்றால் மக்களெலாம் அடிமையுறல் வியப்படைய வேண்டியதில்லை என்றும் சொல்கிறார்....

பாரதி- அறுபத்தாறு -45

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,       மனையாளும் தெய்வமன்றோ?- என்ற தார்மிகக் கேள்வியை முன்வைக்கும் பாடல் இது....

பாரதி- அறுபத்தாறு – (42-44)

யாழ்ப்பாணத்து சுவாமிகளை தனக்கு அறிமுகம் செய்வித்த தோழர் குவளைக் கண்ணனை இப்பாடலில் பாடி மகிழ்கிறார் மகாகவி பாரதி...

பாரதி- அறுபத்தாறு (40-41)

புதுவையில் வசித்தபோது தனக்கு குருநாதர்களாக இருந்தவர்களை பாடலில் வணங்கி மகிழும் மகாகவி பாரதி, இப்பாடலில் யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழைப் பாடுகிறார்....

பாரதி- அறுபத்தாறு (37- 39)

முந்தைய பாடலில் மாங்கொட்டைச் சாமியின் புகழ் பாடிய மகாகவி பாரதி, இப்பாடலில், தனது குருவாக வரித்துக் கொண்ட கோவிந்த சுவாமியின் புகழைப் பாடுகிறார். அறிவே தெய்வம் என்ற பாரதிக்கு அன்பே தெய்வம் என்ற தரிசனம் தந்த ஞானி இவர்....

பாரதி- அறுபத்தாறு (27-36)

“சென்றதினி மீளாது; மூடரே, நீர்       எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து       குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா; இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்       எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்” -என்ற அற்புதமான உபதேசம் அடங்கிய கவிதை இது...

பாரதி- அறுபத்தாறு (23-26)

குள்ளச்சாமி குறித்த பிரலாபம் தொடர்கிறது.... மகாகவி பாரதி புதுவையில் வசிக்கையில் கிடைத்த அரிய உறவு, குள்ளச்சாமியின் நட்பு...

பாரதி- அறுபத்தாறு (19-22)

ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?       ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?- என்ற அற்புதமான வரிகள் கொண்ட மகாகவி பாரதியின் குருநாதர் குறித்த பாடல் இது....

பாரதி- அறுபத்தாறு (15-18)

அத்வைதப் பேரானந்தத்தின் உச்சநிலையை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல் இது... ‘எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்’ என்ற பாரதியின் தாரக மந்திரம் ஒலிக்கும் கவிதையும் கூட...

பாரதி- அறுபத்தாறு (11-14)

புதிய ஆத்திசூடியில் “ரௌத்திரம் பழகு” (96) என்று சொன்ன அதேபாரதி, தனது சுயசரிதைக் கவிதையான பாரதி-அறுபத்தாறில், பொறுமையின் அவசியம் குரித்து இக்கவிதையைப் படைத்திருக்கிறார். “கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான் கொல்வதற்கு வழியெனநான் குறித்திட்டேனே”- என்கிறார் இப்பாடலில்.

பாரதி- அறுபத்தாறு (7-10)

-மகாகவி பாரதி பாரதி அறுபத்தாறு (7-10) அசுரர்களின் பெயர் அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்      அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்;மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே      வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை;துக்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,      சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே.      நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.       7 சினத்தின் கேடு சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் .செத்திடுவா ரொப்பாவார்; … Continue reading பாரதி- அறுபத்தாறு (7-10)

பாரதி – அறுபத்தாறு (1-6)

-மகாகவி பாரதி முன்னுரை:மகாகவி பாரதியின் சுயசரிதை பிரிவில்  ‘பாரதி-அறுபத்தாறு’ கவிதை  இடம்பெற்றிருப்பது இதிலுள்ள சுய விளக்கங்கள் காரணமாகவே. மரணத்தை வெல்லும் வழியில் “பார் மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்!” என்று முழங்குகிறார் பாரதி (பாடல்- 6). முன்னதாக, சோக அடவியில் புகவொட்டாமல் துய்ய செழுந்தேன் போல கவிதை எழுதும் அறிவை தனக்கு பராசக்தி தந்ததாக்க் (பாடல்- 3) கூறுவார் பாரதி. எனவேதான் இக்கவிதைகள் தன்வரலாற்றுப் பிரிவில் சேர்க்கப்படுகின்றன.மானுடரை அழிக்கும் அசுரர்கள், பொறுமையின் பெருமை, ”எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் … Continue reading பாரதி – அறுபத்தாறு (1-6)