பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 3)

ஞானத்தைக் கடைப்பிடி. அதனையே தவமாகக் கொண்டொழுகு. சினத்தை விடு. என்னையே சரணமாகக் கொண்டு என்னுடன் லயித்திரு. நீ எனது தன்மை பெறுவாய் என்று கடவுள் சொல்லுகிறார்.

பகவத்கீதை- மொழிபெயர்ப்பு (முன்னுரை-2)

எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. ...

பகவத் கீதை – மொழிபெயர்ப்பு (முன்னுரை 1)

மகாகவி பாரதி வாழ்ந்த காலத்தில் அரசியல் அரங்கிலும் ஆன்மிக அரங்கிலும் நவீன இந்தியாவிற்கான எழுச்சியை பகவத்கீதையிலிருந்தே பலரும் பெற்றார்கள். குறிப்பாக, சுவாமி விவேகானந்தர், பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, மகரிஷி அரவிந்தர் ஆகியோருக்கும் கீதையே ஆற்றல் மிக்க வழிகாட்டியாக இருந்தது. இவர்கள் அனைவரும் கீதைக்கு உரை எழுதினர். மகாகவி பாரதியும் இதில் விதிவிலக்கல்ல. மகாகவி பாரதி 1912-ஆம் ஆண்டில் பகவத் கீதையை மொழிபெயர்த்தார். 1924 -25 காலகட்டத்தில் பகவத் கீதை முன்னுரை, பகவத்கீதை மூலமும் உரையும் ஆகிய நூல்களை  பாரதி பிரசுராலயத்தார் முதன்முதலில் பதிப்பித்தனர். தனது முன்னுரையைத் தொடர்ந்து, பகவத் கீதை சுலோகங்கள் அனைத்தையும் நேரடி மொழிபெயர்ப்பில் 18 அத்தியாயங்களாக மகாகவி பாரதி வழங்கி இருக்கிறார். அவை அனைத்தும் இங்கே...

அடங்கி நட

வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரின் ஐம்பெரும் கட்டுரைகளை (பஞ்ச வியாசங்கள்), மகாகவி பாரதி தமிழில் வழங்கி இருக்கிறார். அவற்றுள் ஒன்று இது. வங்க பாஷையில் தாகூரால் எழுதப்பெற்று, அவரது சகோதரர் சுரேந்திரநாத் தாகூரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘மாடர்ன் ரிவியூ’ பத்திரிகையில் வெளியான கட்டுரை (Modern Review – 1917 September - Thau Shalt Obey), பின்னர் மகாகவி பாரதியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தாகூரின் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், சுய பகடிகள் நிறைந்த, கவித்துவம் மிகுந்த நடையை, இயன்ற வரை அக்காலத் தமிழில் வழங்கி இருக்கிறார் பாரதி.

ஜாதி-II

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘ஐம்பெருங் கட்டுரைகள்’ என்ற நூலிலுள்ள ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமே இது.