‘சக்கரவர்த்தினி’ 1906 பிப்ரவரி மாத இதழில் வெளிவந்த ‘துளஸிபாயி என்ற ராஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற கதையின் இரண்டாம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது இப்பாடல்.
Tag: பாரதி கவிதை
வெய்ய இடி
இந்தியா 27.09.1909 இதழில் வெளியான ‘ஞானரதம்’ கதையில் இடம் பெறும் காதலைப் பற்றிய கவிதை இது.
வந்திலரேல்…
11.09.1909 ‘இந்தியா’ இதழில், ‘வி.ஓ.சிதம்பரமும் கோயமுத்தூர் ஜெயிலும்’ என்ற கட்டுரையின் துவக்கத்தில் காணப்படும் பாடல் இது. தலைப்பு, தமிழ்ப்பல்கலைக் கழகப் பதிப்பில் கண்டவண்ணம் தரப்பட்டுள்ளது.
சுதந்திரம்
1.11.1908ம் தேதி ‘இந்தியா’ பத்திரிகையில் தாம் எழுதிய ‘முதற்பிரயத்தனம்’ என்ற கட்டுரையின் இடையே ‘பைரன்’ என்ற ஆங்கிலக் கவிஞரின் பாடலை மொழிபெயர்த்துப் பாரதி அளித்துள்ளார்.அதுவே இக்கவிதை...
சந்திரிகை
சுதேசமித்திரன் இதழில் (1906) வெளியான மகாகவி பாரதியின் ஆரம்பக்காலக் கவிதைகளுள் ஒன்று இது...
யான்
முற்றுப் பெறாததாகக் காட்சியளிக்கும் இக்கவிதை, பாரதியின் கவிதைத் தொகுப்புகளில் காணப் பெறாதாது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை இது...
செட்டிமக்கள் குலவிளக்கு
செட்டிநாடு பகுதியில் உள்ள கானாடுகாத்தானில் வாழ்ந்த திரு. வை.சு.சண்முகன் செட்டியார், மகாகவி பாரதி மீது மிகுந்த பக்தி கொண்டவர். இவரதுஅழைப்பை ஏற்றுத்தான் காரைக்குடியில் செயல்பட்ட ஹிந்து மதாபிமான சங்கத்தாரின் நிகழ்ச்சியில் மகாகவி பாரதி பங்கேற்றார். அங்கு 9.11.1919 இல் சொற்பொழிவு நிகழ்த்தினார் மகாகவி பாரதி. தற்போது நமக்குக் கிடைக்கும் பாரதியின் கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள், அப்போது அங்கு எடுக்கப்பட்டனவே. மகாகவி பாரதியின் முழு உருவத்தையும் புகைப்படத்தில் பதிவு செய்து பெருமை பெற்ற காரைக்குடி ‘ஹிந்து மதாபிமான சங்கம்’, பாரதியால் வாழ்த்துக் கவிதையும் பெற்று பெரும்பேறு அடைந்தது. தன்னை ஆதரிக்க முன்வந்த திரு.வை.சு.ச.வின் வள்ளல் தன்மையால் மகிழ்ந்த மகாகவி பாரதி அவர்மீது பாடிய பாடல்கள் இவை. இக்கவிதை எப்படிக் கிடைத்தது, ஏன் பலரால் அறியப்படாமல் இருந்தது என்பன போன்ற விவரங்களை பேராசிரியரும் பாரதி அன்பருமான பேராசிரியர் திரு. கிருங்கை சேதுபதி ‘தினமணி’ நாளிதழ்க் கட்டுரையில் தெளிவுபடுத்தி இருக்கிறார். அக்கட்டுரை கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது...
உயிர் பெற்ற தமிழர் பாட்டு
மகாகவி பாரதியின் புரட்சிகரமான கருத்துகள் மிகுந்த இப்பாடல், பெரும்பாலான பாரதியார் கவிதைகள் தொகுப்புகளில் காணப்படுவதில்லை. “நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்- இந்த நாட்டினில் இல்லை”, “உண்மையின் பேர்தெய்வம் என்போம்- அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்”, “சூத்திர னுக்கொரு நீதி- தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி; சாத்திரம் சொல்லிடு மாயின்- அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”, “தோன்றி அழிவது வாழ்க்கை” - என்பது போன்ற அமரத்துவம் வாய்ந்த வைர வரிகள் மிகுந்த கவிதை இது...
தனிமை இரக்கம்
மதுரையிலிருந்து வெளியான ‘விவேகபாநு’ இதழில் 1904-இல் வெளிவந்த மகாகவி பாரதியின் ஆரம்பகாலக் கவிதை இது.
சுதந்திர தேவியிடம் முறையீடு
புதுவையில் மகாகவி பாரதி நடத்திய ‘இந்தியா’ இதழில் 1909-இல் வெளியான இக்கவிதை, பெரும்பாலான பாரதி கவிதைத் தொகுப்புகளில் காணப்படுவதில்லை.
என்னே கொடுமை!
சுதேசமித்திரன் இதழில் 1906-இல் வெளியான கவிதை இது. இக்கவிதை எழுதியதற்கான குறிப்பையும் முதலிலேயே குறிப்பிடுகிறார் மகாகவி பாரதி.
இளசை ஒருபா ஒருபஃது
‘ஒருபா ஒருபஃது’ என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இஃது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றினால், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும். இங்கு மகாகவி பாரதி, வெண்பாவில் அந்தாதியாகப் பாடி இருக்கிறார். இப்பாடல்களில் காப்பு, பத்துப்பாடல்கள் ஆகியவை, இளசை எனப்படும் எட்டையபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஈசனைக் குறித்துப் பாடியவையாக உள்ளன. இறுதியாக தனிப் பாடல் ஒன்றும் எட்டப்ப ராஜாவைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.
வந்தேமாதரம்
இக்கவிதை பெரும்பாலான பாரதி கவிதைத் தொகுதிகளில் காணப்படாதது. ‘சக்கரவர்த்தினி’ மகளிர் மாத இதழிலும், ‘சுதேசமித்திரன்’ நாளிதழிலும் வெளியான பாரதி பாடல் இது…
வங்கமே வாழிய!
14-9-1905-இல் சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் மகாகவி பாரதி பாடிய பாடல் இது; மறுநாள் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியாகி உள்ளது.
இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்
மகாகவி பாரதியின் மூத்த மகள் தங்கம்மாள் ருதுவான நாளன்று பாடிய பாடல் இது என யதுகிரி அம்மாள் குறிப்பிடுகிறார்.