பாரதி கடிதங்கள்- தொகுப்பு – 4

பெண்களின் இளம்வயது திருமணத்தை கடுமையாகக் கண்டித்த மகாகவி பாரதி, ஸ்ரீமான் ஸ்ரீநிவாச சாஸ்திரியாரின் முன்னுதாரணமான செய்கையைப் பாராட்டி ‘சுதேச மித்திரன்’ இதழின் ஆசிரியருக்கு எழுதிய வாசகர் கடிதம் இது...

பாரதியின் கடிதங்கள்- தொகுப்பு-3

பிரிட்டனில் தொழிலாளர் கட்சித் தலைவராக இருந்தவர் ராம்சே மெக்டொனால்ட்; 1929- 1935இல் அந்நாட்டுப் பிரதமர் ஆனவர். 1914-இல் அவர் எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவராக இருந்தபோது,  இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு மககவி பாரதி எழுதிய கடிதம் இது. இக்கடிதம்  ‘தி ஹிண்டு’ பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. பிரிட்டீஷ் இந்தியாவிலிருந்து தப்பி பாண்டிச்சேரி செல்ல வேண்டிய கட்டாயம் தனக்கு ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும், தன்னை பொய்வழக்குகளில் கைது செய்யத் துடிக்கும் பிரிட்டீஷ் இந்திய அரசு குறித்தும் இக்கடிதத்தில் பாரதி குறிப்பிட்டிருக்கிறார். ஆங்கிலேய அரசுக்கு கடிவாளமாக இருக்கக் கூடிய தொழிலாளர் கட்சித் தலைவரின் கவனத்துக்கு இந்த விஷயங்கள் செல்லுமானால் நற்பயன் கிடைக்கும் என்று மகாகவி பாரதி நம்பியிருப்பதை, கடித வாசகங்கள் காட்டுகின்றன. அந்நிய ஆட்சியை எதிர்த்து, பிரிட்டீஷார் தலையிட இயலாத பாண்டிச்சேரியில் அரசியல் அடைக்கலம் புகுந்த நிலையிலும், பாரதி சுதந்திர தாகத்துடன் தனது எழுத்து வன்மையுடன் போராடியதற்கான சான்றே இக்கடிதம்...

பாரதியின் கடிதங்கள்- தொகுப்பு-2

மகாகவி பாரதி தனது அரசியல் குருநாதர் திலகருக்கு எழுதிய கடிதம், நியூ இண்டியா, தி ஹிண்டு பத்திரிகைகளுக்கு எழுதிய கடிதங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன....

பாரதியின் கடிதங்கள்- தொகுப்பு-1

மகாகவி பாரதி தனது மனவி செல்லம்மாளுக்கு எழுதிய கடிதம், அவரது தன்னிலை விளக்கம். தவிர, தமிழறிஞர் மு.ராகவையங்காரைப் பாராட்டி எழுதிய கடிதம், தம்பி விசுவநாதனுக்கும், அன்புத் தோழன் நெல்லையப்பருக்கும், எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்கும் எழுதிய கடிதங்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...