ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல்

ஜப்பானில் உள்ள மக்கள் பாரம்பரிய மதங்களைக் கைவிட்டு ‘கிறிஸ்தவ மார்க்கத்திலும் சிலர் மகமதிய மார்க்கத்திலும் சார்பு காட்டி வருகின்றார்கள்’ என்று மனம் வருந்தும் மகாகவி பாரதி, அந்நாட்டிற்கு, ‘ஹிந்து மார்க்க உண்மைகளை உபதேசிக்க யாரேனும் பெரியோர்கள் செல்வார்களானால் மிகவும் சிறப்பாக இருக்கும். ராமகிருஷ்ண மடத்து சந்நியாசிகள் இவ்விஷயத்தில் சிரத்தையெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்’ என்கிறார், இக்கட்டுரையில்...

பூகோள மஹா யுத்தம்

லண்டன் “டைம்ஸ்’’ பத்திரிகை பொறுப்புத் தன்மை யுடையதாகத் தன்னை மிகவும் கணித்துக் கொள்ளுகிறது. இங்கிலாந்து தேசத்து மந்திரிகளைக் காட்டிலும் தனக்கு ப்ரிட்டிஷ் பரிபாலன விஷயத்தில் ஆயிரம் பங்கு அதிகப் பொறுப்புணர்ச்சி யிருப்பதாக நடிக்கிறது, அந்தப் பத்திரிகை -மகாகவி பாரதியின் இதழியல் பார்வை எத்துணை உயரத்திலிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது இக்கட்டுரை…

நேசக் கக்ஷியாரின் “மூட பக்தி’’

மகாகவி பாரதி உலகப் பத்திரிகைகள் பலவற்றை தினந்தோறும் வாசித்தவர். அவற்றில் உள்ள செய்திகளை தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த தமிழாக்கி வழங்கியவர். கீழுள்ள செய்தி, அவ்வாறு சுதேசமித்திரனில் இதழாளர் பாரதி அளித்த செய்தி. ஐரோப்பியக் கண்டத்தில் நேசக்கட்சியாரின் ஆதிக்கத்தில் ஜெர்மனி நாட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்த செய்தி இது. இச்செய்தியில் பாரதியின் உலக அரசியல் அறிவையும், அதிலும் இந்தியா தொடர்பான அவரது மன ஏக்கத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். “மனுஷ்ய ஸஹோதரத்வம், ஸமத்வம் இவை ஐர்லாந்துக்குண்டா, இல்லையா? அரபியாவுக்கும் மெஸ்பொடோமியாவுக்கும், இந்தியாவுக்கும், எகிப்துக்கும் அவை உண்டா, இல்லையா? இல்லை யெனில், ஏன் இல்லை?” என்ற கேள்வியில் ஜொலிக்கும் உரிமைக்குரல், மகாகவி பாரதிக்கே உரித்தான இதழாளனின் நெஞ்சக்கனல்.

அமிர்தம் தேடுதல்

“நம்மைச்சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவனுக்கும் இருக்கின்றது. மகத்தான அறிவு வேண்டும். அழியாத நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்திகள் வேண்டும். செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊரார் தேசத்தார் உலகத்தார் எல்லோரும் இன்பத்துடன் வாழும்படி நான் செய்யவேண்டும். நல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், பலமான அடிப்படை போட்டு மெல்ல மெல்லக் கட்டிக்கொண்டு வர வேண்டும் ” - இதனைச் சொல்பவர் மகாகவி பாரதி. இதற்கான வழிமுறையையும் சொல்கிறார்...

வாசக ஞானம்

“கண்ணைத் திறந்துகொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது. இதற்கு என்ன நிவாரணம் செய்வோம்? தைரியந்தான் மருந்து! தற்கால அசெளகர்யங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். அங்ஙனம் தைரியத்துடன் உண்மை நெறி பற்றி நடப்போரை மற்றவர்கள் புகழ்ச்சியாலும் சம்மானங்களாலும் ஊக்கப்படுத்த வேண்டும்.” - மகாகவி பாரதியின் இனிய அறிவுரை இது....

பழைய உலகம்

“அடுத்த ஜன்மத்தில் நான் மற்றொரு மனிதனாகப் பிறந்து வாழ்கையிலே செல்வமுண்டானால், இப்போதுள்ள எனக்கு எவ்விதமான லாபமும் இல்லை. அதைப்பற்றி எனக்கு அதிக சிரத்தை யில்லை. இந்த ஜன்மத்தில் பணம் தேடுவதுதான் நியாயம். வரும் ஜன்மத்து ரூபாய்க்கு இப்போது சீட்டுக் கட்டுவது புத்திக் குறைவு” - மகாகவி பாரதியின் யதார்த்தமான சிந்தனையும் லாகவமான எழுத்து நடையும் பிணைந்த கட்டுரை இது...

செல்வம் – II

மக்களிடையே உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுக்குக் காரணம் என்ன? ஏழைகளின் துயரை அகற்றுவது எப்படி? ரஷ்யாவில் உதித்துள்ள பொது உடைமை சித்தாந்தம் நல்லதா? அது நீண்ட நாட்கள் நிலைக்குமா? ஆயுதத்தாலும் வன்முறையாலும் சமத்துவத்தை நிலைநாட்ட முடியுமா? கம்யூனிஸம் நீடிக்குமா? இதுபோன்ற கேள்விகள் அனைத்திற்கும், சுதேசமித்திரனில் 1917-இல் எழுதிய கட்டுரையில் பதில் அளிக்கிறார் மகாகவி பாரதி....

செல்வம்-I

ரஷ்யாவில் நிகழ்ந்த பொதுவுடைமைப் புரட்சி குறித்த மகாகவி பாரதியின் அதியற்புதமான கட்டுரை இது. ரஷ்யாவில் வென்ற கம்யூனிஸ்ட் கட்சியால் இந்தியாவில் ஏன் வளர முடியவில்லை என்பதையும் கேள்வியாகக் கேட்டு 105 ஆண்டுகளுக்கு முன்னர் (1907) அவர் எழுதிய கட்டுரை இது...

ஜாதி-II

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘ஐம்பெருங் கட்டுரைகள்’ என்ற நூலிலுள்ள ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமே இது.

ஸ்ரீ ரவீந்திரர் திக்விஜயம்

கீர்த்தியடைந்தால், மஹான் ரவீந்திரரைப் போலே அடைய வேண்டும். ஜெர்மனி தேசம் இன்றைக்கும் ஐரோப்பாக் கண்டத்தின் வித்யா ராஜதானியாக விளங்குகிறது. ஜெர்மனியில் நமது பாரத கவீந்திரராகிய ரவீந்திரருக்கு நடத்தப்பட்ட உபசாரங்களெல்லாம் அவருக்குச் சேரமாட்டா. பாரத மாதாவின் பாத கமலங்களுக்கே சேரும்.

லோகோபகாரம்

தெய்வம் உண்டு. ‘’நலஞ் செய்வோன் என்றும் கெட்ட வழி சேரமாட்டான்’’ என்று கீதை சொல்லுகிறது. அவனுக்குக் கெடுதி நேரிடாதபடி அவனுடைய யோக க்ஷேமத்தைத் தான் சுமப்பதாகத் தெய்வம் வாக்களித்திருக்கிறது. ஆனால், ஆரம்பத்திலே சோதனைகள் நேரிடும். மனம் தளராமல் லோகோபகாரம் செய்துகொண்டே போனால் பிறகு சோதனைகள் நின்றுபோய் நன்மை உதயமாகும்....

சுதேசமித்திரன் பத்திரிகையும் தமிழ்நாடும்

1920-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஒரு விபரீத முடிவை எடுத்தது. அதாவது, பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்ப்பதற்காக, சட்டசபைத் தேர்தல்களைப் புறக்கணிப்பதாக அக்கட்சி அறிவித்தது. இதன் பின்புலத்தில் மகாத்மா காந்தி இருந்தார். இதனை காங்கிரஸ் கட்சியிலிருந்த தீவிரவாத கோஷ்டியினர் (பிபின் சந்திர பால், சித்தரஞ்சன் தாஸ் உள்ளிட்டோர்) ஏற்கவில்லை. அவர்களை ஆதரித்த சுதேசமித்திரன் பத்திரிகையும் மகாத்மா காந்தியின் முடிவை எதிர்த்தது. அதுகண்டு காந்தி அபிமானிகள் பலர் மகாகவி பாரதிக்கு தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் சுதேசமித்திரன் பத்திரிகையில் நீங்கள் எப்படி வேலை செய்யலாம்? என்று அவர்கள் கேட்டனர். அதற்கு சுதேசமித்திரன் பத்திரிகையிலேயே மகாகவி எழுதிய பதில் தான் இக்கட்டுரை… இதில் பாரதியின் அரசியல் ஞானமும், தேசபக்தியும் மிளிர்கின்றன.

கடல் கண்ணிகள்- கவிதைக்கு முன்னுரை

மகரிஷி அரவிந்தர் எழுதிய ‘கடலுக்கு’ என்ற ஆங்கிலக் கவிதையை தமிழில் மொழியாக்கம் செய்த மகாகவி பாரதி (கடல் கண்ணிகள்), அதற்கு எழுதிய முன்னுரை இது.

தேசியக் கல்வி – 2

தேசியக் கல்வி ஏன் அவசியம் என்பதையும் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும்  ‘தேசியக் கல்வி’ என்ற கட்டுரையில் எழுதிய மகாகவி பாரதி, அது தொடர்பான சில தனிப்பட்ட குறிப்புகளையும் எழுதி இருக்கிறார், அவை இங்கே  ‘தேசியக் கல்வி- 2’ என்ற தலைப்பில் அளிக்கப்படுகின்றன. கூடவே, தொகுப்பாசிரியர் திரு. பெ.தூரனின் விளக்கமும் இடம் பெறுகிறது…

செத்தவரைப் பிழைப்பிக்கும் ஸஞ்சீவி

மூன்றே பத்திகள் தான்; இதில் காணப்படும் ஆவேசம், மகாகவி பாரதியின் மற்றொரு முகமான அரசியலாளரை முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. மிதவாதிகள் மீதான காட்டமான விமர்சனத்தை முன்வைக்கும் திலகரின் சீடராக இங்கேபாரதி மிளிர்கிறார்....