மகாகவி பாரதி தாம் எழுதிய கவிதை, கட்டுரை, கதைகளை நூலாக்க வேண்டுமென்ற அதீத தாபம் கொண்டிருந்தார். ஆனால், அடிமை இந்தியாவில் அதற்கான சூழல் அவருக்கு வாய்க்கவில்லை. அவரது நிலையோ அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடும் நிலை. எனவே, தமிழ் வளர்ப்புப் பண்ணை என்ற பெயரில் தமது நூல்களை வெளியிட முன்பதிவுத் திட்டம் போன்ற ஒரு நிதி முதலீட்டுத் திட்டத்தை நடத்த விழைந்தார். அந்த தமிழ் வளர்ப்புப் பண்ணை சார்பில் வெளியான விளம்பரம் இது. இந்த விளம்பரச் செய்தியை மகாகவி பாரதியே எழுதினாரா என்பது உறுதியாகாத தகவல். அதேசமயம், அக்காலத்தில் பாரதியின் துடிப்பு மிகு எழுத்தார்வத்துக்கு அற்புதமான ஆதார ஆவணம் இது…
Tag: பாரதி அறிவிப்புகள்
பாரதியின் பத்திரிகை அறிவிப்புகள்- 2
தமிழின் முன்னோடி இதழாளரான மகாகவி பாரதி, பத்திரிகைத் துறையில் பல முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டவர். ஆங்கில பத்திரிகையை தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்காகவே ஒரு பத்திரிகையை நடத்தியவர் என்பது கீழ்க்கண்ட விளம்பரத்திலிருந்து தெரிகிறது. பாரதி ஆசிரியராக இருந்த ‘விஜயா’ பத்திரிகையில் வெளிவந்த விளம்பரம் இது (கீழே...).
பாரதியின் பத்திரிகை அறிவிப்புகள் – 1
மகாகவி பாரதி தான் பணியாற்றிய / நடத்திய பத்திரிகைகளில் வெளியிட்ட அறிவிப்புகள் அவரது விஸ்வரூபத்தை வெளிப்படுத்துபவை. அவற்றில் மூன்று அறிவிப்புகள் இங்கே...