மகாகவியின் மறுபக்கம்

பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி, ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இது....

மகாகவி பாரதியின் இறுதி நாட்கள்

பாரதி ஆய்வாளரான ரா.அ.பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து,  ‘சித்திர பாரதி’ என்ற நூலை வெளியிட்டார். 1957ல் முதலில் வெளியான இந்த நூலில், பாரதியாரின் கடைசி சில தினங்கள் எப்படியிருந்தன என்ற தகவல்களை மிக நுணுக்கமாகத் தொகுத்திருக்கிறார் அவர். அதிலிருந்து சில பகுதிகள்:

மக்கள் கவி பாரதி

தமிழக முன்னாள் முதல்வர் திரு. சி.என்.அண்ணாதுரை, பிற திராவிட அறிஞர்களைப் போல மகாகவி பாரதியை மூடி மறைக்க விரும்பாதவர். பாரதியை தேசியகவி என்று சொல்வதில் அவருக்கு சற்றே சங்கடம் இருந்தாலும், மக்களுக்கான கவிஞர் என்று அவரைக் கொண்டாடினார். இது திரு. அண்ணாதுரை அவர்களின் கட்டுரை.

பாரதியாரும் கோவில் யானையும்

பாரதியியல் ஆய்வாளரும், சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவருமான பேரா. திரு. ய.மணிகண்டன், ‘தினமணி’ நாளிதழில் எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. நன்றியுடன் மீள்பதிவாகிறது...

பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?

பாரதியாரின் தரிசனங்களை முழுமையான கருத்தாக்கங்களாக நாம் பார்க்க வேண்டுமே அல்லாது ஏதோ ஒரு கவிதையில் இருந்து ஒன்றிரண்டு வரிகளை மேற்கோள் காட்டி அவர் “நாத்திகர்” என்றெல்லாம் பேசுவது பகுத்தறிவின்மையையே காட்டுகிறது. குறிப்பாக எதையுமே உருப்படியாகவும், ஆழமாகவும் ஆராயாமல் கருத்துக் கூறும் திராவிட இயக்க அறியாமையை.

மகாகவி புதுவைக்குப் போன சூழ்நிலை

 மகாகவி பாரதியின் புகழ் பரப்பிய அமரர் தஞ்சை வெ.கோபாலன்  ‘தினமணி’யில் பத்தாண்டுகளுக்கு முன், பாரதி நினைவுநாளில் எழுதிய கட்டுரை இது. பாரதியின் பிறந்த நாளை ஒட்டி இன்று மீள்பதிவாகிறது…

என் தந்தை

மகாகவி பாரதியின் இளைய மகள் சகுந்தலா. இவரை மகாகவி  ‘பாப்பா’ என்றுதான் அழைப்பார். பாரதியாரின் அன்பு மகள் தன் தந்தையைப் பற்றி  ‘என் தந்தை’ எனும் தலைப்பில் ஒரு நூலை இயற்றி பாரதியார் பற்றிய பல அரிய செய்திகளைக் கொடுத்திருக்கிறார். அதிலிருந்து சில சுவையான பகுதிகளை, மகாகவி பாரதியின்  பிறந்த நாளை ஒட்டி, இங்கே காண்போம்.

பாரதியை வடிவமைத்த காசி

பாரதியின் காசி வாசம் மொத்தம் ஐந்தே ஆண்டுகள் தான், 1898 முதல் 1903 வரை. ஆயினும், அவரது வாழ்க்கைப் பாதையையே காசி தான் நிர்ணயித்தது என்றால் மிகையில்லை. தனது 16 முதல் 21 வயது வரையிலான காசி வாசத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும், திறப்புகளும், தரிசனங்களுமே எட்டையபுரத்தில் ‘இளசைச் சுப்பிரமணியன்’ என்று சம்பிரதாயமாக தமிழ்ப் பண்டித நடையில் கவிதை எழுதிக் கொண்டிருந்த சுப்பையாவை, மகத்தான இலட்சியங்களும், தேசிய உணர்வும், சுதந்திர சிந்தனைகளும் கொண்ட சுப்பிரமணிய பாரதி என்ற நவீனத் தமிழ்க் கவிஞராகவும், எழுத்தாளராகவும், படைப்பாளியாகவும் மாற்றின....

மகாகவி பாரதியின் புனித நினைவில்…

பாரதி அமரர் ஆகி 101 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அந்த மகா புருஷனின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.  ஒரு முறை அவரே தன் சீடனான குவளை கிருஷ்ணமாச்சாரியாரிடம் சொன்னார்: “கிருஷ்ணா நான் இருநூறு ஆண்டுகள் முன்னதாகப் பிறந்து விட்டேன். என்னைப் பற்றி இவ்வுலகம் புரிந்து கொள்ள பல காலம் ஆகும். ஆங்கிலப் புலவர் ஷேக்ஸ்பியருடைய புகழ்கூட அவர் காலமான பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பரவத் தொடங்கியது”. அந்த மகாகவியின் வாக்கு சத்திய வாக்கு....

அவன் ஒரு தொடர்கதைதான்…

“கண்ணா! நான் நானூறு வருடங்கள் கழித்துப் பிறந்திருக்க வேண்டியவனடா!” என்று குவளை கிருஷ்ணமாச்சாரியாரிடம் சொன்னான். தவறு பாரதி! நவமியில் இராமனும், அஷ்டமியில் கண்ணனும் பிறந்தது போலத்தான், ஒரு துயரமான காலகட்டத்தில், அதைத் தமிழ்க் கவிதையால் துடைக்கும் அருட்கரமாக, சரியான நேரத்தில்தான் பிறந்தாய் நீ. “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்,” என்பதே உனக்கு விதிக்கப்பட்ட கடமைகள் என்று நீ கருதியதும் சரிதான். நாற்பது கூட ஆவதற்கு முன்னே பறந்துவிட்டாயே என்று நாங்கள் இன்றைக்கும் வருந்தினாலும், நீ மறைந்ததும் சரியான நேரத்தில்தான். அதற்குப் பிறகு நீ வாழ்ந்திருந்தால், தாங்கியிருக்க மாட்டாய். உன் உடம்பும், உயிரின் கெடுவும் அத்தனைக்குத்தான்....