பீமனும் பார்த்தனும் சபதம் செய்தவுடன், காப்பிய நாயகி பாஞ்சாலி சபதம் செய்கிறாள். அவைக்களத்தே தனது பெண்மையை அவமதிக்கத் துடித்த கயவர்களைத் தண்டிக்க வெஞ்சினம் கூறுகிறாள், மாகாளி வடிவில் நின்ற பாஞ்சாலி. “பாவிதுச் சாதனன் செந்நீர், - அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம், மேவி இரண்டுங் கலந்து - குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல்முடிப் பேன்யான் - இது செய்யுமுன்னே முடியேன்” என்று ஆனையிடுகிறாள். இதுகேட்டு ‘ஓம் ஓம்’ என்று உறுமியது வானம். பூமியில் நடுக்கம் நிகழ்ந்தது. புயல் வீசியது. தருமன் பக்கமே தர்மம் என்பதை ஐம்பூதங்கள் சாட்சியாக உரைத்தன. “நாமும் கதையை முடித்தோம் - நானிலம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க!” என்று நிறைவு செய்கிறார் மகாகவி பாரதி...
Tag: பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி சபதம் – 2.3.12
மன்னரவையில் தங்கள் மனையாளை அவமதித்த துரியனின் தொடையைப் பிளந்துயிர் மாய்பேன் என்று பீமன் சபதம் செய்தவுடன், இளையவனான பார்த்தன் எழுந்து சபதம் செய்கிறான். தங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழ்லின் மீதும், ”கார்த்தடங் கண்ணிஎந்தேவி - அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை” என்கிறான்; “பாஞ்சாலியின் துகிலுரியச் சொன்ன பாதகக் கர்ணனைப் போரினில் மாய்ப்பேன்... போர்க்களத்தில் போர்த்தொழில் வித்தைகளை பூதலமே அறிக” என்கிறான்...
பாஞ்சாலி சபதம் – 2.3.11
பாஞ்சாலியை அவமதிக்க எண்ணிய கௌரவர் சோர்ந்து விழுந்ததைக் கண்டு அவை அமைதி காத்தது. அப்போது, பீமன் எழுந்து வெஞ்சினம் உரைக்கிறான். “கண்ணன் பதம் மீதும் கண்களின் கழலால் மதனனை எரித்த சிவனின் கழலடி மீதும் ஆணையிட்டு உரைக்கிறேன்” என்று சொல்லும் அவன், எங்கள் தேவியைத் தனது தொடை மீது அமரச் சொன்ன நாய்மகன் துரியோதனனை யுத்தக் களத்தில் தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்; துச்சாதனைன் தோள்களைப் பிய்ப்பேன். இது நான் சொல்லும் வார்த்தை அல்ல, தெய்வத்தின் வார்த்தை!” என்று சபதம் செய்கிறான்.
பாஞ்சாலி சபதம் – 2.3.10
அவையில் பாஞ்சாலியைச் சிறுமை செய்யும் நோக்கில் துச்சாதனன் அவளது சீலையைப் பற்றி இழுக்கிறான். அப்போது வேறு வழியின்றி கண்ணனைச் சரண் புகுகிறாள் துருபதன் மகள். “ஆதிமூலமே என்றழைத்த யானைக்காக முதலையை மாய்த்தவன்; காளிங்கன் மீது களி நடனம் புரிந்தவன்; சக்கரமும் சார்ங்கமும் ஏந்தியவன்; தூணைப் பிளந்து நரசிம்மமாக அவதரித்து அகந்தை கொண்ட அசுரனை மாய்த்தவன்; முனிவர் அகத்தில் மிளிர்பவன்; அறிவினைக் கடந்த விண்ணகப் பொருளான கண்ணா, என் மானத்தைக் காப்பாயாக!” என்று மனமுருகி வேண்டி இருகரம் கூப்பினாள். அப்போது ஆங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. “பொய்யர்தந் துயரினைப்போல், - நல்ல புண்ணிய வாணர்தம் புகழினைப்போல், தையலர் கருணையைப் போல்…” பாஞ்சாலியின் ஆடை வளர்ந்த்து. துச்சாதனன் துகிலுரிக்க உரிக்க, பாண்டவர் ஐவரின் தேவியின் சீலை, புதிது புதிதாய், வண்ணப் பொற்சேலைகளாக வளர்ந்தது. கரம் சோர்ந்து வீழ்ந்தான் கீழ்மகன்…
பாஞ்சாலி சபதம் – 2.3.9
விகர்ணனின் நல்லுரை கேட்டுச் சினந்த கர்ணன், அவனை ஏசுகிறான். பாஞ்சாலியின் அழகால் மயங்கி இவ்வாறு சிறுவன் பிதற்றுவதாகக் கூறி கண்டிக்கும் கர்ணன், “மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கங் கீழடியார்க் கில்லை” என்று கூறி,பாண்டவர்களின் மேலாடைகளையும் பாஞ்சாலியின் சீலையையும் களையுமாறு சேவகனுக்கு உத்தரவிடுகிறான். இதைக் கேட்டு திகைத்த பாஞ்சாலி என்ன செய்வதென்று அறியாமல், இரு கரங்களையும் இணைத்து இறுகப் பற்றிக் கொண்டாள் என்கிறார் மகாகவி பாரதி…
பாஞ்சாலி சபதம்- 2.3.8
சினம் கொண்ட பீமன், விஜயனின் பேச்சைக்கேட்டு அமர்ந்தான். அப்போது கௌரவர் பக்கம் இருக்கும் ஒரே நியாயவானான விகர்ணன், ‘தமையன்கள் செய்வது அதர்மம்’ என்று அவையில் எழுந்து சொல்கிறான். “தன்னையிவன் இழந்தடிமை யான பின்னர்த் தாரமெது? வீடேது?” என்று பெண்ணரசு கேட்பது நிட்யாயம் தானே? என்கிறான். அப்போது அவையில் சிறு சலசலப்பு ஏற்படுகிறது...
பாஞ்சாலி சபதம்- 2.3.7
அண்ணன் கையை எரித்திடுவோம் என்று கோபத்தில் பேசிய பீமனைக் கண்டு வில்விஜயன் வருந்துகிறான். ‘இதனை நீ மனமாரத் தான் சொன்னாயா?’ என்று கேட்கிறான். மேலும் “தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம்மறு படிவெல்லும்” என்ற முக்கால உண்மையை அவையில் சொல்கிறான் அர்ஜுனன். “இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்” என்று கர்ஜிக்கிறான்...
பாஞ்சாலி சபதம் – 2.3.6
அவையில் பாஞ்சாலியின் கதறல் கேட்டு பீமன் பொங்கி எழுகிறான். தனது அன்னண் தருமனைப் பார்த்து, “மாதர் குல விளக்கை, பாஞ்சாலன் மகளை, திருஷ்டத்துய்மன் சகோதரியை, போரில் வென்று கைத்தலம் பற்றிவந்த காரிகையை சூதில் பணயம் வைத்தது ஏன்?” என்று சினத்துடன் வினவுகிறான். இறுதியாக, “இது பொறுப்பதில்லை - தம்பி! எரிதழல் கொண்டுவா. கதிரை வைத்திழந்தான் - அண்ணன் கையை எரித்திடுவோம்” என்று கர்ஜிக்கிறான் என்கிறார் மகாகவி பாரதி.
பாஞ்சாலி சபதம் – 2.3.5
நியாயம் சொல்ல வந்த பீஷ்மரும் துரியன் பக்கம் நிற்பது பாஞ்சாலிக்குத் தெளிவாகிறது. “சீதையைக் கடத்தி வந்த ராவணனை அவனது அவையில் இருந்தோர் பாரட்டினார்களாம். அதுபோலிருக்கிறது உங்கள் செய்கை” என்கிறாள். மண்டபம் கட்டி அழைத்து வந்தது எங்கள் அரசாட்சியைப் பிடுங்கத் தானா என்று கேட்கிறாள். ‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்று ஒரு வேறொரு பாடலில் பாரதி பாடுவது உண்மைதான் என்பதை அவையில் பாஞ்சாலியின் தர்க்கம் காட்டுகிறது. “பெண்டிர் தமையுடையீர்! பெண்களுடன் பிறந்தீர்! பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ? கண்பார்க்க வேண்டும்!” என்று கையெடுத்துக் கும்பிடுகிறாள். கொடுமை கண்டு எதிர்க்கத் திறமில்லா, நாணமற்ற அவையினரைப் பார்த்து.
பாஞ்சாலி சபதம் – 2.3.4
பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் பாட்டனாரான பீஷ்மர் பாஞ்சாலியின் கேள்விக்கு பதில் அளிக்கிறார். “முன்னாளில் ஆணும் பெண்ணும் சமம் என்று இருந்த நிலை மாறிவிட்டது. இப்போது மனைவியை அடிமையாக விற்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. உன்னை சூதில் பணயம் வைத்து உன் கணவன் தருமன் தோற்றுவிட்டான். நான் என்ன செவது?” என்கிறார் அவர். “தீங்கு தடுக்குந் திறமிலேன்’ என்றந்த மேலோன் தலைகவிழ்ந்தான்” என்கிறார் மகாகவி பாரதி...
பாஞ்சாலி சபதம் – 2.3.3
குலைந்த நிலையில் இருந்தாலும், அழுது அரற்றினாலும், துருபதன் மகள் பாஞ்சாலியின் தீரம் குறையவில்லை. அம்மி மிதித்து, அருந்ததி காட்டி, வேள்வித்தீ முன்னர் கைத்தலம் பற்றிய தனது கணவர்களைப் பார்த்து இதற்காகவா உங்களை மனம் செய்தேன்? என்று அவையில் வினவுகிறாள் பாஞ்சாலி. இதனை “பாண்டவரை மின்செய் கதிர்விழியால் வெந்நோக்கு நோக்கினாள்.” என்று மகாகவி பாரதி குறிப்பிடுகிறார். அதாவது சுடும் பார்வை. அவளை தாதியென்று துச்சன் ஏச, கர்ணனும் சகுனியும் சிரிக்கிறார்கள். “சபையினோர்? வீற்றிருந்தார்!” என்கிறார் மகாகவி. அதாவது மனிதம் மறந்து மரத்துக் கிடந்தது அந்த அவை.
பாஞ்சாலி சபதம்- 2.3.2
பாஞ்சாலி சபதத்தில் மகாகவி பாரதி கோபத்தின் உச்சிக்குச் செல்லுமிடம் இக்கவிதை தான். தனது கணவரின் தாயாதியானாலும், துச்சனை தம்பி என்றே அழைக்கிறாள் பாஞ்சாலி. அவனுக்கு பல புத்திமதியும் கூறுகிறாள். ஆனால், அதைக் கேட்கும் நிலையில் அவன் இல்லை. ‘ஆடி விலைப்பட்ட தாதி நீ; - உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன்’ என்று கூறி அவளது மொய்ங்குழல் பற்றி இழுத்துச் செல்கிறான். இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்க ஆளே இல்லாமல் மக்கள் பரிதாபமாக வேடிக்கை பார்த்ததை நெஞ்சு கொதிக்க கவிதையாகத் தீட்டுகிறார் மகாகவி. “ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ? வீரமிலா நாய்கள்....” என்று கூறும் அவர், “நெட்டை மரங்களென நின்று புலம்பினார். பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?” என்று ஆவேசம் கொள்கிறார்...
பாஞ்சாலி சபதம்- 2.3.1
பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகத்தில், சபதச் சருக்கம் தொடங்குகிறது. அண்ணன் துரியோதனனின் ஆணையைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் செல்கிறான் துச்சாதனன். அவனை மகாகவி பாரதி “இவன் தீமையில் அண்ணனை வென்றவன்” என்று வர்ணிக்கிறார். பாஞ்சாலி இருப்பிடம் சென்று அவளை இழுத்து வர முயல்கிறான் துச்சன்.
பாஞ்சாலி சபதம்- 2.2.9
பாகன் மறுபடியும் அவையில் பாஞ்சாலியின் வாதத்தை வைத்தவுடன், துரியன் மேலும் கோபம் கொள்கிறான். பீமனுக்கு அஞ்சி பாகன் தயங்குவதாகக் கூறும் அவன், “பாஞ்சாலியை அழைத்துவர பாகனால் இயலாது. எனவே நீ சென்று அவளை இழுத்து வா?” என்று தம்பி துச்சாதனனிடம் ஆணையிடுகிறான். இரண்டாம் பாகத்தின் இரண்டாம் சருக்கம் இத்துடன் நிறைவெய்துகிறது...
பாஞ்சாலி சபதம் – 2.2.8
துரியனின் ஆணையை ஏற்று மீண்டும் தன்னிடம் வந்த பாகனிடம், ”சூதில் தருமன் தோற்ற பின்னர் என்னை மனைவி என்ற முறையில் சூதில் பணயம் வைக்க அவருக்கு உரிமை இல்லை. நான் மன்ன துருபதனின் மகள். இந்த நியாயத்தைச் சொல்ல அரசவையில் ஒருவரும் இல்லையா?” என்று வினவுகிறாள் பாஞ்சாலி. “மன்னர் சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே- அங்கு சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ?” என்று பாஞ்சாலி கேட்பதாக கவிதை புனைகிறார் மகாகவி பாரதி. இதனை மீண்டும் அரசவைக்குச் சென்று அவையினரிடம் முன்வைக்கிறான் பாகன்...