அண்டங்காக்கையும் அமாவாசையும்

நம் நாட்டில் பிரபலமான கேலிச்சித்திரக்காரர் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண். அவர் காக்கைகளை விதம்விதமாக வரைந்துள்ளார். அவரது மனைவி கமலா,  “அவருக்கு என்னை விட காக்காயைதான் ரொம்பப் பிடிக்கும்” என்று கிண்டலாகச் சொல்லி உள்ளார். லஷ்மணனுக்கு காக்கையை மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான். காக்கை இவருக்கு 'பொன்' குஞ்சு.

பாரதியும் கணபதியும்

பிள்ளையார் என்ற பெயரே கள்ளமிள்ளாத குழந்தைத்தனமான வெள்ளை மனதைத்தான் குறிக்கிறது. அளவில் சிறிதாக இருந்தாலும் பெருமையிலும் ஞானத்திலும் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. எவ்வளவு பெரியவரானாலும் அவரிடம் அந்தக் குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் பெரியவர் எல்லாருக்குமே பிள்ளையாரைப் பிடித்திருக்கிறது.