பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும் – நூல் மதிப்புரை

இந்திய சமூக வாழ்வில் பசுக்களுக்கு பிரதான இடமுண்டு. அந்நியர் ஆட்சிக்காலத்தில் இந்த அடிப்படை ஆதாரத்தின் மீது கொடூரத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராக சமுதாயம் கடுமையாகவும், துணிச்சலாகவும் தொடர்ந்து போராடியிருக்கிறது. அதற்கான சான்றாவணமே  ‘பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்’ என்னும் இந்நூல்.

இரக்கமற்ற இளஞ்சிவப்புப் புரட்சி!

‘கோமாதா எங்க குலமாதா’ என்று பாடினால் போதாது. வயதான காலத்தில் அதைப் பேணுவதும் நமது கடமை. உழவனின் தோழனான காளையையும் அவ்வாறே நாம் காக்க வேண்டும். இந்த நன்றி உணர்ச்சியை மறக்க மறக்க, நாம் மரத்துப் போன சமுதாயம் ஆவோம். அதன் தொடர் விளைவுகளாக முதியோர் இல்லங்கள் பெருகும். பிறகு நமக்கு என்றும் மீட்பில்லை.