யேசுவும் அல்லாவும்

அதிதீவிர ஹிந்துவான மகாகவி பாரதி, பிற சமயத் தெய்வங்களையும் மதித்துப் போற்றியவர். அதுவே ஹிந்துவின் இயல்பும்கூட. கிறிஸ்தவ சமயத்தினரின் யேசு கிறிஸ்துவையும், இஸ்லாமிய சமயத்தவரின் அல்லாவையும், பாரதி பாடிய கவிதைகள் இவை...

கிளிப்பாட்டு

மகாகவி பாரதியின் 76வது பக்திப்பாடல், ‘கிளிப்பாட்டு’ என்னும் இச்சிறு கவிதை...

வேள்வித் தீ பாடல்கள்

மகாகவி பாரதி, யாகம் வளர்க்கும் தீ மீதான இப்பாடல்களில் பழங்கால முனிவர்களின் வேள்விப் பண்பாட்டை மிகவும் சிறப்பாகப் பதிவு செய்கிறார். வேதப் பாடல்களில் பாரதிக்கு இருந்த ஞானம் இப்பாடல்களில் வெளிப்படுகிறது....

சந்திரன் மீதான பாடல்கள்

நிலவைப் பாடாத கவிஞர் இல்லை. மகாகவி பாரதியோ நிலவினை பக்திப் பெருக்குடன் பாடி மகிழ்கிறார். அவரது 72, 73 வது பக்திப் பாடல்கள் வேறு தனிச்சுவையும் தருபவை...

சூரியன் மீதான பாடல்கள்

மகாகவி பாரதி சூரியக் கடவுள் மீது அளப்பரிய பக்தி கொண்டிருந்தவர். அவரது இந்தப் பற்றுதலுக்கு சூரியன் மீதான வேதப் பாடல்களும் காரணமாக இருக்கலாம். சூரியனைப் போற்றும் காயத்ரி மந்திரத்தை தமிழில் வழங்கியவர்; வசன கவிதைகளில் ஞாயிற்றின் புகழை ஓங்கி ஒலித்தவர் பாரதி. அவரது பக்திப் பாடல்களில் மூன்று (69, 70,71) சூரிய வணக்கப் பாடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...

ஆரிய தரிசனம்

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 68வது கவிதை, ‘ஆரிய தரிசனம்’ என்ற கவிதை.

இரு விடுதலைப் பாடல்கள்

“விட்டு விடுதலையாகி நிற்பாய்- அந்த சிட்டுக்குருவியைப் போலே’’ என்று பாடிய மகாகவி பாரதியின் மனம் முழுவதும் ஏதவதொரு வகையில் விடுதலையுணர்ச்சி பொங்கிப் பிரவஹித்துக் கொண்டே இருந்தது. அவரது பக்திப் பாடல்களிலும் இங்கே அந்த விடுதலைப் பேருணர்வை தரிசிக்கலாம்…

ஆறு துணை

இக்கவிதை, கூட்டுப் பிரார்த்தனைக்கான அற்புதமானதொரு பாடல்.

மூன்று காதல்

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 64வது கவிதை, வித்தியாசமானது. பெண்மையை கலைமகளாகவும் அலைமகளாகவும் மலைமகளாகவும் புனைந்து அவள் மீது மையல் கொண்ட காதலனாக இப்பாடலை எழுதி இருக்கிறார் பாரதி. மூன்றையும் வெவ்வேறு ராகங்களில், ஒரே தாள கதியில் படும் வகையில், பாரதியே மெட்டு அமைத்திருக்கிறார்...

நவராத்திரிப் பாட்டு (2)

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 63வது கவிதை, நவ ராத்திரிக் கவிதை...

கலைமகள் மீதான பாடல்கள்

மகாகவி பாரதியில் பக்திப் பாடல்களில் இரு கவிதைகள் (61, 62) கலைமகள் மீதானவை... “ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்     நல்ல பாரத நாட்டிடை வந்தீர்’’ என்று அழைத்து நமக்கு பாரதி இடும் கட்டளைகள் அவரது கல்வி மீதான தாபத்தைக் காட்டுகின்றன...

ராதைப் பாட்டு

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 60வது கவிதை, ’ராதைப் பாட்டு’ இது சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் எழுதப்பட்ட இருமொழிக் கவிதை....

திருமகள் மீதான பாடல்கள்

மகாகவி பாரதியின் பக்திப்பாடல்களில் திருமகள் மீதான நான்கு பாடல்கள் (56- 59) இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. செல்வத்தின் மகிமையை வெளிப்படுத்தும் கவிதைகள் இவை...

கண்ணம்மா மீதான பக்திப்பாடல்கள்

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் கண்ணம்மா மீதானவை (52- 55) இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில், “நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி” மிகப் புகழ் பெற்ற பாடல். ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பிலும் கண்ணம்மா - என்ற காதலி’ என்ற தலைப்பில் ஆறு கவிதைகள் உண்டு என்பது இங்கு கவனிக்க வேண்டிய கருத்து. கடவுளை தனது இணையாக வர்ணிக்கும் பாரதியின் பக்திப் பிரவாஹம், படிக்கப் படிக்க, பாடப் பாட இன்பமளிக்கிறது. “துயர் போயின, போயின துன்பங்கள் நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே” என்று ஒரு கவிதையில் போற்றும் பாரதி, “எண்ணத் திதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!’’ என்று மற்றொரு கவிதையில் விம்முகிறார். இன்னொரு கவிதையில், “எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ” என்று வரையும் பாரதி, “திங்களை மூடிய பாம்பினைப் போலே செறிகுழல், இவள் நாசி எட் பூ” என்று எழுதுகையில் அகப்பாடலின் முழுத்வணியில் லயித்திருப்பதை உணர முடிகிறது. இறைவனை மனையாளின் அன்புருவாகக் கருதும் தூய ‘அகப்பாடல்கள்’ இவை...

கண்ணன் மீதான பக்திப் பாடல்கள்

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் கண்ணன் மீதான பாடல்கள் (45- 51) இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ பாடல் மிகப் புகழ் பெற்ற இசைப்பாடல்.