பிற நாடுகள் குறித்த பாரதியின் பாடல்கள்

எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை வேண்டும் என்ற உலகளாவிய நோக்கம் கொண்டதாக இருந்தது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற புலவனின் வழிவந்தவர் அல்லவா? அவரது உலகம் தழுவிய பார்வைக்கு, பிற நாடுகள் மீது அவர் பாடிய இந்த நான்கு கவிதைகளும் உதாரணம். அந்த நாடுகள்: 1 இத்தாலி, 2 பெல்ஜியம், 3. ரஷ்யா, 4. பிஜி தீவுகள். சுதந்திர இத்தாலியை நிறுவப் போராடிய மாவீரர் மாஜினியின் சபதம், ஜெர்மனியிடம் வீழ்ந்தாலும் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய பெல்ஜியத்துக்கு வாழ்த்து, கொடுங்கோலன் ஜாரின் அரசை வீழ்த்திய ரஷ்யப் புரட்சியால் பெருமிதம், பிஜித் தீவுகளில் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக அவதிப்படும் ஹிந்து ஸ்திரீகளுக்காகக் கண்ணீர் என்று - இக்கவிதைகளில் மகாகவி பாரதியின் அதியுயர் மானுடம் வெளிப்படுகிறது.

பாரதியின் தேசியத் தலைவர்கள் மீதான பாடல்கள்

மகாகவி பாரதி தமது அரசியல் குருவாக மதித்த பெருந்தலைவர்களை வாழ்த்திப் பாடிய பாடல்கள் இவை. ‘தேசிய கீதங்கள்’ பகுப்பில், ‘தேசீயத் தலைவர்கள்’ என்ற் உள்பகுப்பில் இடம் பெற்றுள்ள 9 கவிதைகள் இவை. அந்நாளில் தமது நலன் கருதாமல் வாழ்வையே நாட்டுக்கு அர்ப்பணித்த பெரியோரை மட்டுமே மகாகவி பாரதி பாடி இருப்பது, அவர்தம் எண்ணத் துணிவையும் கொள்கைப் பற்றையும் வெளிப்படுத்துகிறது. இதோ அக்கவிதைகள்....

பாரதியின் தேசிய இயக்கப் பாடல்கள்

மகாகவி பாரதி எழுத்தாளர் மட்டுமல்ல; அரசியல் செயற்பாட்டாளரும் கூட. பாலகங்காதர திலகர் தலைமையிலான காங்கிரஸ் தீவிரவாதிகள் பிரிவில் தீவிரமாக இயங்கியவர்; அதற்காக, மிதவாதிகளை (நிதானக் கட்சியார் என்று பாரதி சுட்டுவார்) கடுமையாக விமர்சித்தவர்; தமிழகத்தில் வ.உ.சி.யுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியவர். தமது அரசியல் இயக்கத்துக்காக, அவர் இயற்றிய பாடல்கள் ‘தேசிய இயக்கப் பாடல்கள்’ என்ற தலைப்பில் பகுக்கப்பட்டுள்ளன. பாரதியின் தேசிய கீதங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள இக்கவிதைகளின் எண்ணிக்கை 9. இவை அவரது தேசபக்திக் கனலை வெளிப்படுத்தும் தூய கவிதைகளாக விளங்குகின்றன.

பாரதியின் சுதந்திர கீதங்கள்

மகாகவி பாரதியின் பாடல்களில் தேசிய கீதங்கள் பகுப்பில் இடம்பெற்றுள்ள - சுதந்திர உணர்வைப் பறைசாற்றும் 7 கவிதைகள் இங்கு தனியே தொகுக்கப்பட்டுள்ளன.

தேசிய கீதங்கள் – பாரதி

மகாகவி பாரதியின் தேசியப் பெருமிதம் விம்மும் பாடல்கள் இவை. அவரது ‘தேசிய கீதங்கள் என்ற தொகுப்பில், இந்த முதல் பகுப்பில் 19 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

வாழ்க தமிழ் மொழி! – பாரதி

தமிழ்மொழி குறித்த மகாகவி பாரதியின் பெருமிதப் பாடல்கள் இவை. மகாகவி பாரதியின் கவிதைகளில், தேசபக்திப் பாடல்கள் தொகுப்பில், தமிழ்நாடு என்ற இரண்டாம் பகுப்பில் அடங்கியுள்ள 6 தமிழ் மொழி வாழ்த்துப் பாடல்கள் மட்டும் இங்கே தனித்து வழங்கப்பட்டுள்ளன....