விவேகானந்தப் பேரொளி

தவத்திரு குன்றக்குடி அடிகளார் (1925- 1995) என்று அழைக்கப்பட்ட அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி திருமடத்தின் 45வது குருமகா சந்நிதானமாக விளங்கியவர். ‘அருள்நெறித் திருக்கூட்டம்’ என்ற அமைப்பை நிறுவி ஆன்மிகப் பயிர் வளர்த்தவர்; தமிழ் ஆர்வலர்; 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். சுவாமி விவேகானந்தர் மீதான அடிகளாரின் கவிதை இது…

விவேகானந்தரின் அடிச்சுவட்டில்….

இன்று விரிந்த பார்வையே இல்லாமல் போய்விட்டது.  சமுதாயச் சீர்த்திருத்தங்கள்கூட எல்லைகள் – சாதிகளுக்குள்ளேயே முடங்கிவிட்டன. இந்தச் சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தரின் அடிச்சுவட்டில் இந்த பாரதம் நடைபோட வேண்டும். சுவாமிஜியின் சிந்தனைகளுக்குச் செயலாக்கம் கொடுத்தால் புதிய பாரதம் – வலிவும் வளமும் உடைய பாரதம் தோன்றும் - தவத்திரு குன்றக்குடி அடிகளார் .