ஸ்வதந்திர கர்ஜனை – 2(12)

முந்தைய ஆண்டில் (1928) கல்கத்தாவில் நடந்த காங்கிரசுக்கு மோதிலால் தலைவர், அடுத்த ஆண்டின் (1929) தலைவர் அவர் திருமகனார் ஜவஹர்லால் நேரு. அதுவரை காங்கிரசுக்குத் தலைமை தாங்கியவருள் ஜவஹர்லால் தான் வயதில் மிகவும் இளையவர். லாகூர் காங்கிரசில் தந்தையிடமிருந்து தலைமைப் பொறுப்பை அவர் மகன் ஜவஹர் வாங்கிக் கொண்ட காட்சியை பொதுமக்கள் அதிகம் விரும்பி ரசித்தனர்.

ஸ்வதந்திர கர்ஜனை – 2(11)

வயதில் முதியவரும் கூட்டத்தின் தலைவரும் பஞ்சாப் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவருமான லாலாஜியை சார்ஜண்ட் சாண்டர்ஸ் என்பான் தடிகொண்டு பலம் கொண்டமட்டும் தாக்கினான். அவன் அடித்த அடிகள் அவர் மார்பில் விழுந்தன. தொண்டர்கள் லாலாவை தடியடியிலிருந்து காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. மிருக வெறியோடு சார்ஜண்ட் சாண்டர்ஸ் அடித்த அடியில் லாலா நினைவை இழந்தார். தொண்டர்கள் அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சில நாள்களில் லாலாஜி உயிரிழந்தார்...

ஸ்வதந்திர கர்ஜனை- 2(10)

இந்தியர்களின் ஒரே கோரிக்கை ‘பரிபூரண சுதந்திரம்’, இதற்கு மாற்றாக எந்தவித சீர்திருத்தங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே சைமன் கமிஷனை இந்தியா முழுவதும் எதிர்ப்போம் என்றது சென்னை காங்கிரஸ். அதற்குப் பிறகு இந்திய அரசியலில் ஒரு பரபரப்பு நிலவியது. இங்கிலாந்திலிருந்து வரும் சைமன் கமிஷனை எதிர்ப்போம் என்று இந்தியாவில் இருந்த எல்லா கட்சிகளும், தமிழ்நாட்டில் இருந்த ஜஸ்டிஸ் கட்சி என்ற ஒன்றைத் தவிர, மற்ற அனைவரும் ஒரே குரலில் ‘எங்கள் கோரிக்கை பரிபூரண சுயராஜ்யமே தவிர சீர்திருத்தங்கள் அல்ல, ஆகவே சைமனை எதிர்ப்போம் என்று உரக்கக் கூவினர்.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(9)

நம்மில் பலர் ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’ என்று ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்வதையும், பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கரை  ‘வைக்கம் வீரர்’ என்ற அடைமொழியோடு குறிப்பிடுவதையும் கேட்டிருக்கிறோம். இல்லையா? அந்த வைக்கம் சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும் என்று  தெரியவில்லை. ஆர்வம் உள்ளவர்களுக்காக அந்த சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி சிறிது இப்போது பார்க்கலாம்....

ஸ்வதந்திர கர்ஜனை- 2(8)

1923-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாகபுரியில்  ‘கொடிப் போராட்டம்’  எனும் ஒரு போராட்டம் தொடங்கியது. அது என்ன கொடிப் போராட்டம்? நாகபுரி நகரத்தில் கண்டோன்மெண்ட் என வழங்கப்படும் ஆங்கிலேயர் வசிக்கும் பகுதிக்குள் இந்திய தேசபக்தர்கள் தங்கள் கொடியைப் பிடித்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்படி அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் மூவண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு இந்தியர்கள் போவதா? கூடாது என்று அதற்கு வெள்ளைக்காரர்கள் தடை விதித்தனர். நாகபுரியில் தொடங்கிய அந்த சிறு தீப்பொறி நாடு முழுதும் பரவி எங்கெங்கும் கொடிப் போராட்டம் நடக்கலாயிற்று.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(7)

அந்த மாநாடு தொடங்கும் வரை காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்த சி.ஆர்.தாசும், லாலா லஜபதி ராயும்,  மாநாடு தொடங்கியதும் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து முன்மொழியவும், வழிமொழியவும் ஒப்புக் கொண்டார்கள். இந்த மாநாட்டில் காந்திஜிக்கு பலத்த ஆதரவு காணப்பட்டது.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(6)

ராஜ துவேஷ குற்றச்சாட்டின் பேரில் திலகருக்கு 6 ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டு இவர் பர்மாவில் இருந்த மாண்டலே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். மாண்டலே சிறைக்கு இவரை ‘ஹார்டிஞ்ச்’ எனும் பெயருடைய கப்பலில் கொண்டு சென்றனர். அதே காலகட்டத்தில் இவருடைய தீவிரவாத காங்கிரசில் அங்கம் வகித்த அரவிந்த கோஷ், வ.உ.சி. ஆகியோரும் சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது....

ஸ்வதந்திர கர்ஜனை – 2(5)

இந்த காங்கிரசில் காரியக் கமிட்டிக்கு நடந்த தேர்தலில் தோற்ற பின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அதிசயம் நடந்தது. காரியக் கமிட்டிக்கு அந்தந்த மாகாணப் பிரதிநிதிகள் கூடித் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பார்கள். பம்பாய் மாகாண உறுப்பினர்கள் கூடித் தங்களுடைய இரண்டு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்காக மிதவாதி ஒருவரையும் தீவிர காங்கிரஸ்காரர் ஒருவரையும் முன்மொழிந்தனர். திலகர் ஆதரவு பெற்ற ஒரு பிரதிநிதியும் காந்திஜியின் பெயரும் முன்மொழியப்பட, அதில் காந்தி தோற்றுவிட்டதாகத் தெரிந்த நிலையில், திலகர் உடனடியாக காந்தி வெற்றி பெற்றார் என்று அறிவித்து விட்டார்....

ஸ்வதந்திர கர்ஜனை- 2(4)

காங்கிரஸ் மெல்லத் தன் வழியிலிருந்து மாறி தீவிர அரசியல் இயக்கமாக மாறி வரும் சூழ்நிலையை ஹியூம் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். தான் எந்தப் பின்னணியில் என்ன காரணத்துக்காக காங்கிரசைத் தொடங்கினாரோ, அந்த நோக்கம் திசைமாறி இப்போது இந்திய சுதந்திரம் எனும் கோஷத்துடன் புத்துணர்வு பெற்று பயணிப்பதை அவர் புரிந்துகொண்டு தன் வேலை இங்கு முடிந்துவிட்டது என்று மூட்டை முடிச்சுக்களுடன் இங்கிலாந்துக்குப் பயணமானார்....

ஸ்வதந்திர கர்ஜனை- 2(3)

இது சம்பந்தமாக ஹியூம் பல இந்தியத் தலைவர்களுடனும்,  அப்போதைய வைஸ்ராய் டப்ரின் பிரபுவிடமும் விவாதித்தார். இதில் ஆங்கிலேயர்களும் ஆர்வம் காட்ட முக்கிய காரணம் இருந்தது. படித்த இந்தியர்களையும் இந்திய அரசு நிர்வாகத்தில் ஈடுபடுத்தினால், அவர்கள் பிரச்னைகளைக் கண்டறிந்து சரிசெய்யவும், மக்களை சமாதானப் படுத்தவும் முடியும் என்று -  சிப்பாய்க் கலகம் கொடுத்த பாடம் காரணமாக - ஆங்கிலேயர்கள் நினைத்தனர். அப்படி உருவாகும் அமைப்பு சமூக, அரசியல் நோக்கமுடையதாக இருத்தல் அவசியம் என்பதையும் அவர்கள் உணர்ந்ததால் வைஸ்ராயும் இதில் ஆர்வம் காட்டினார்.