பாரதியின் ஞானப்பாடல் – 25

கற்பனை நகரமென்பது சித்தத்தில் குழந்தை நிலை பெறுவதை இங்கு குறிப்பிடுகிறது. ‘யோவான்’ என்பது குமார தேவனுடைய பெயர். ‘அக்கடவுள் மனிதனுக்குள்ளே நிலைபெற்று, மனிதன் மோக்‌ஷ நிலையை அடைவதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தை அடைய வேண்டும்’ என்று யேசு கிறிஸ்து நாதர் சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது. கவலைகளை முற்றுந் துறந்துவிட்டு உலகத்தை வெறுமே லீலையாகக் கருதி னாலன்றி மோக்ஷம் எய்தப் படாது.....

பாரதியின் ஞானப்பாடல்- 24

மகாகவி பாரதியின் ஞானப்பாடல்களில் 24வது கவிதை இது...வெள்ள மெனப் பொழியும் தண்ணருளில் ஆழ்ந்தபின் வேதனை உண்டோ?

பாரதியின் ஞானப்பாடல் – 23

ஒருமையுணர்வின் (அத்வைதம்) உச்சநிலை இப்பாடல். பகைவனுக்கு அருள்பவர்க்கு எதிரிகளே இருக்க முடியாது. ஏனெனில் அவர் இறைவனை அறிந்தவர் ஆகிறார்...

பாரதியின் ஞானப்பாடல்- 22

மனதைக் கட்டுப்படுத்துதல் முனிவர்க்கும் அரிது. அந்த மனம் செய்யும் கொடுமைகளை இங்கு பட்டியலிடுகிறார் மகாகவி பாரதி.

பாரதியின் ஞானப்பாடல்- 21

மகாகவி பாரதியின் ஞானப்பாடல்களில் 20வது கவிதை இது... பேயாய் உழலும் சிறுமனதுக்கு அறிவுரை இது...

பாரதியின் ஞானப்பாடல்- 20

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற அற்புதமான வாசகத்தைக் கொண்ட இனிய கவிதை இது... கவலைகளால் குமையாமல், களிப்புடன் வாழ நமக்கு வழிகாட்டுகிறார் மகாகவி.

பாரதியின் ஞானப்பாடல் – 19

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற வகையிலான ஞானப்பாடல் இது...

பாரதியின் ஞானப்பாடல்- 18

கடமை கடமை என்று ஓடிக் கொண்டிருக்க வேண்டாம், கட்டற்று, கடமை நினைவே இன்றி வாழ்வோம் - என்ற மகாகவி பாரதியின் வித்யாசமான சிந்தனை இக்கவிதையில் ஒலிக்கிறது....

பாரதியின் ஞானப்பாடல் – 17

மகாகவி பாரதியின் ஞானப்பாடல்களில் எளியவர்களின் பக்தியும் மெச்சப்படுகிறது... இக்கவிதை அதற்குச் சான்று.

பாரதியின் ஞானப்பாடல் – 16

எளிய வரிகள்... அரிய அனுபவ ஞானப் பதிவுகள்... மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 16வது கவிதை இது...

பாரதியின் ஞானப்பாடல் – 15

பக்தியினால் இந்த உலகில் எய்தும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? சித்தம் தெளியும்; செய்கைகள் செம்மையாகும்; வித்தைகள் சேரும்; வீரர் உறவு வாய்க்கும்; நெஞ்சில் சஞ்சலம் நீங்கும்... தொடர்ந்து பட்டியலிடுகிறார் மகாகவி பாரதி... படியுங்கள்... பக்தியில் திளையுங்கள்!

பாரதியின் ஞானப்பாடல்- 14

மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 14வது கவிதை இது...தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது       தோற்ற முறுஞ் சுடராம்!

பாரதியின் ஞானப்பாடல் – 13

“நானெனும் பொய்யை நடத்துவோன் நான்”- மாயையான இந்த உலகை இதைவிட எளிதாக ஒரு வரியில் விளக்கிவிட முடியாது. மகாகவி பாரதியின் அறிவுச் சமநிலை இயைபின் (ஞானயோகம்) அற்புதமான வெளிப்பாடு இக்கவிதை....

பாரதியின் ஞானப்பாடல் – 12

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம் சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம் அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

பாரதியின் ஞானப்பாடல் – 11

ஈசனும் தானும் ஒன்று என்ற அத்வைதப் பேரனுபவத்தை வெளிப்படுத்தும் அற்புதமான கவிதை இது. சிவோஹம்- நானே சிவம் என்பதை உணர்ந்தவர் ஈசனை அறிகிறார். ஈசன் வேறு எங்கும் இல்லை. ஒவ்வொரு உயிரிலும் உறைந்திருக்கிறார்.