பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?

பாரதியாரின் தரிசனங்களை முழுமையான கருத்தாக்கங்களாக நாம் பார்க்க வேண்டுமே அல்லாது ஏதோ ஒரு கவிதையில் இருந்து ஒன்றிரண்டு வரிகளை மேற்கோள் காட்டி அவர் “நாத்திகர்” என்றெல்லாம் பேசுவது பகுத்தறிவின்மையையே காட்டுகிறது. குறிப்பாக எதையுமே உருப்படியாகவும், ஆழமாகவும் ஆராயாமல் கருத்துக் கூறும் திராவிட இயக்க அறியாமையை.

விழித்தெழும் பாரதமே!

இது சுவாமி விவேகானந்தரே எழுதிய கவிதை. எழுத்தாளர் திரு. ஜடாயு இதனை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.இவர், பெங்களூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்; இலக்கிய ஆர்வலர்.

பாரதியை வடிவமைத்த காசி

பாரதியின் காசி வாசம் மொத்தம் ஐந்தே ஆண்டுகள் தான், 1898 முதல் 1903 வரை. ஆயினும், அவரது வாழ்க்கைப் பாதையையே காசி தான் நிர்ணயித்தது என்றால் மிகையில்லை. தனது 16 முதல் 21 வயது வரையிலான காசி வாசத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும், திறப்புகளும், தரிசனங்களுமே எட்டையபுரத்தில் ‘இளசைச் சுப்பிரமணியன்’ என்று சம்பிரதாயமாக தமிழ்ப் பண்டித நடையில் கவிதை எழுதிக் கொண்டிருந்த சுப்பையாவை, மகத்தான இலட்சியங்களும், தேசிய உணர்வும், சுதந்திர சிந்தனைகளும் கொண்ட சுப்பிரமணிய பாரதி என்ற நவீனத் தமிழ்க் கவிஞராகவும், எழுத்தாளராகவும், படைப்பாளியாகவும் மாற்றின....

கம்பன் பாடிய ‘குறள்’

பெங்களூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப நிபுணரான திரு. ஜடாயு, இலக்கிய ஆர்வலர்; ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்; கம்பனில் தோய்ந்தவர். வாமனாவதாரம் குறித்த கம்ப ராமாயணச் செய்யுள்களை விளக்கி, தமிழ் ஹிந்து இணையதளத்தில் இவர் எழுதிய அற்புதமான ஆய்வுக் கட்டுரை இங்கே...

பாரதியும் கணபதியும்

பிள்ளையார் என்ற பெயரே கள்ளமிள்ளாத குழந்தைத்தனமான வெள்ளை மனதைத்தான் குறிக்கிறது. அளவில் சிறிதாக இருந்தாலும் பெருமையிலும் ஞானத்திலும் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. எவ்வளவு பெரியவரானாலும் அவரிடம் அந்தக் குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் பெரியவர் எல்லாருக்குமே பிள்ளையாரைப் பிடித்திருக்கிறது.