மோடியின் தமிழகம் – நூல் அறிமுகம்

முன்னாள் பத்திரிகையாளரும் திரைப்பட இணை இயக்குநருமான திரு. சின்னப்பா கணேசன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் மோடி எதிர்ப்பு மாய பிம்பத்தை சுக்குநூறாக உடைக்கிறது. தமிழகத்திற்கு மோடி அளிக்கும் முக்கியத்துவத்தையும், தமிழின்பால் அவருக்குள்ள அன்பையும் பிரமாதமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கவியரசு கண்ணதாசனின் எழுத்துநடையை ஒட்டிய சின்ன வாக்கியங்கள், சிறிய பத்திகள்; சுற்றி வளைக்காத சாதாரணமான எளிய உரையாடல் விளக்கங்கள்; பலரும் அறியாத முக்கியமான அடிப்படைத் தரவுகள்; படிக்கத் தூண்டும் சரித்திர நிகழ்வுகள்; நரேந்திர மோடியின் தமிழ் தொடர்பான மேற்கோள்கள் - இவை அனைத்தையும் பக்குவமாக இணைத்திருக்கும் பாங்கு என நல்ல அறுசுவை உணவு போலப் படைக்கப்பட்டிருகிறது இந்நூல்.

நாட்டை இணைக்கும் தீபாவளி

நமது நாடு பண்பாடுகளின் சங்கமம்; நாகரிகங்களின் விளைநிலம். என்று தோன்றியது எனக் கூற இயலாத் தொன்மைச் சிறப்பும், ஆன்மிகமும் சமயமும் இணைந்த வாழ்வியலும், மானுடம் வியக்கும் உன்னதமான கலைச்சிறப்பும், பல மொழிகளில் எழுந்த இலக்கிய வளமும் சேர்த்துச் சமைத்த நாடு இது. இந்த நாட்டை அமைத்த பல காரணிகளுள் பண்டிகைகள் தலையாயவை. அவற்றுள் முதன்மை பெறுவது தீபாவளி. இதுகுறித்து, பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் எழுதிய கட்டுரை இது....

ஆன்மநேயம் கண்ட அருளாளர்

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய ஆன்மநேய அருளாளர், வடலூர் திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார். கடும் பஞ்சத்தில் தமிழகம் துயருற்றபோது, அன்னசாலையைத் துவங்கி லட்சக் கணக்கான மக்களின் பசிப்பிணி தீர்த்தவர் வள்ளலார். அவரது பிறந்த தின இருநூற்றாண்டு இன்று (அக். 5) தொடங்குகிறது.

எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…

ஆறாம் வகுப்பு படித்தபோது மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ துணைப்பாட நூலாக இருந்தது. அதை இரண்டே நாளில் படித்து முடித்துவிட்டேன். தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மோகன்தாஸின் கதையைப் படித்தபோது என்னை அறியாமல் கண்ணீர் உகுத்தேன். காந்தி என்பவர் சாதாரணமானவர் அல்ல என்று மனதில் பதிந்தது. ஆனால், தனது பலவீனங்களையும் அவர் சொல்லிச் செல்வது அந்த வயதில் எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.

வையத் தலைமை கொள்!- 7

ஔவையின் ஆத்திசூடி, தமிழ்ப் பேரரசுகளின் வீழ்ச்சிக் காலத்தில் எழுதப்பட்டது. சமுதாயத்தில் ஒரு கட்டமைப்பையும் ஒழுங்கையும் உருவாக்கவே நீதிநூல்கள் எழுதப்பட்டன. அக்காலத்தில் அதனை ஆத்திசூடி முழுமையாக செய்தது. பாரதியின் காலம், தாய்நாடு மிலேச்சர்தம் கொடுங்கரங்களில் சிக்கித் தவித்த காலம். எனவே, சில இடங்களில் அவர் முந்தைய கட்டுக்களைத் தகர்க்கத் துணிகிறார். இதுவே பாரதி சில இடங்களில் ஔவையுடன் மாறுபடக் காரணம். இது அவரது புதிய பார்வை. அதனால் தமிழ் இலக்கியத்தில் விளைந்தது புதிய பாதை....

வையத் தலைமை கொள்!- 6

இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்; அவர்கள் தங்கள் குணத்தை, வலிமையை, அறிவை, சமூக உணர்வை, நடையழகை, எண்ணத்தை எவ்வாறு வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொன்ன பாரதி, அவற்றின் மூலமாக செய்ய வேண்டிய கடமைகளையும் பட்டியலிட்டுள்ளார். தனி மனித வளர்ச்சியானது அவனது குடும்பத்துக்கும், ஊருக்கும், அவன் பிறந்த நாட்டுக்கும், அதனால் இந்த உலகிற்கும் நன்மை தருவதாக அமைய வேண்டும். இதுவே பாரத பாரம்பரியம்....

வையத் தலைமை கொள்!- 5

ஒருவர் அடிப்படையாகப் பெற வேண்டிய குணநலன்கள், உடல் வலிமை, கல்வித் திறம் ஆகியவற்றைப் பெற்றிருந்தாலும், அவனது நடையழகும், நல்லெண்ணமும், சமுதாய உணர்வும்தான் அவனை அவையத்து முந்தி இருக்கச் செய்கின்றன; இலக்கை நோக்கி அவனை உந்தித் தள்ளுகின்றன. தனது ‘நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும், வருகின்ற ஹிந்துஸ்தானமும்’ என்ற கவிதையில், எப்படிப்பட்ட இளைஞர்கள் நாட்டில் இருக்க வேண்டும், எப்படிப்பட்டவர்கள் இருக்கக் கூடாது என்பதை அறுதியிட்டு உரைத்திருக்கிறார் பாரதி.

வையத் தலைமை கொள்!- 4

‘குணநலம் சான்றோர் நலனே’ என்பார் திருவள்ளுவர் (திருக்குறள்- 982). நாட்டின் குடிமகன் சான்றோனாக இருக்க வேண்டும் என்று விழையும் பாரதி, அதற்கான பண்பு நலங்களைக் கூறிச் சென்றிருக்கிறார். அச்சமே மனிதனை கீழ்நிலைக்குத் தள்ளுகிறது என்பதால்தான் ‘அச்சம் தவிர்’ என்று தனது புதிய ஆத்திசூடியைத் துவக்குகிறார் பாரதி.  ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்ற திருக்குறளை (1075) இங்கு நினைவு கூரலாம்....

வையத் தலைமை கொள்!- 3

நாம் ‘புதிய ஆத்திசூடி’யை 7 அம்சங்களாகத் தொகுத்துக் கொள்ளலாம். அதாவது, பண்பு நலம், உடல்நலம், அறிவுநலம், நடைநலம், எண்ணநலம், சமூகநலம் ஆகியவற்றை வளர்ப்பதன் வாயிலாக, கடமைநலத்தை நிறைவேற்ற மகாகவி பாரதி வலியுறுத்துகிறார் எனலாம்....

வையத் தலைமை கொள்!- 2

குழந்தைகள் மனனம் செய்ய எளிதாக இருக்க வேண்டும்; அதன்மூலம் மொழியின் கட்டுமானத்தையும் இயல்பாக உணர வேண்டும் என்பதற்காகவே பண்டைய திண்ணைப்பள்ளிகளுக்கான நீதிநூல்களை இம்முறையில் நமது முன்னோர் இயற்றினர். அவர்களின் அடியொற்றி, மகாகவி பாரதியும் இதே நடையில் ‘புதிய ஆத்திசூடி’யை இயற்றி உள்ளார். மேலும், தனது உபதேசங்களில் தான் விரும்பும் பல அம்சங்களை வலியுறுத்திச் செல்கிறார். அவரது புதிய ஆதிச்சூடியை ஏழு அம்சங்கள் கொண்டவையாகப் பிரிக்கலாம்.....