இந்தியாவை எழுச்சி பெறச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்

பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண  மடத்தின் துறவி. மதுரையில் உள்ள  ஸ்ரீ ராமகிருஷ்ண  மடத்தின்  தலைவர்; ‘ராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழின் முன்னாள் ஆசிரியர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இரண்டாவது கட்டுரை இது...

இந்திய மக்களை தலைநிமிரச் செய்தவர்!

இந்தியாவில் ஆதிசங்கரர்,  ராமானுஜர்,   மத்வர்,  சைதன்யர்,  குருநானக்,  புத்தர்,  மகாவீரர்  போன்ற  மதச்சாரியர்கள்  மகத்தான ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினார்கள்; மகத்தான ஆன்மிக மறுமலர்ச்சியை  ஏற்படுத்தினார்கள். அந்த வரிசையில் 19-ஆம் நூற்றாண்டில், இந்து மதத்தில் ஒரு மாபெரும்  மறுமலர்ச்சியை,  மகத்தான நல்ல ஒரு தாக்கத்தை  ஏற்படுத்திய மாமனிதர், மகரிஷி சுவாமி விவேகானந்தர்..... மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மகராஜின் இனிய கட்டுரை.....