சிவகளிப் பேரலை- நிறைவு

இந்த ‘சிவானந்தலஹரீ’ நூல், நமக்கு இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் அனைத்துவித சங்கடங்களையும் போக்குகின்ற மேலான சத்தியத்தை, நன்மையைப் போதிக்கின்ற பொக்கிஷமாகும். இதனை என்னால் இயன்றவரையில் தித்திக்கும் தீந்தமிழில் செய்யுளாக, கவிதையாக மொழிமாற்றித் தந்துள்ளேன். இதனைப் படிப்பவர்க்கும், கேட்பவர்க்கும், அனைவருக்குமே தீமைகள் எல்லாம் நீங்கிடுமாறு அந்தப் பரமேஸ்வரன் அருளட்டும்.....

சிவகளிப் பேரலை- 100

     எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அதனை முழுமையாகச்  சொல்வதற்கு ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனாலும் இயலாது என்பது ஆன்றோர் வாக்கு. ஆகையினால், எம்மால் முழுமையாகக்கூற இயலாது காரணத்தால், இந்த நூலுக்கு ஒரு நிறைவு வேண்டி, சிவபெருமானே, இதனோடு உம்மைப் பற்றிய துதிகளை நிறைவு செய்து கொள்கிறேன் என்று கூறுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.....

சிவகளிப் பேரலை- 99

  முன்பு 23-வது ஸ்லோகத்தில், எல்லாம் வல்ல எம்பிரானை நோக்கி, சிவபெருமானே பக்தனாகிய எனக்கு விரைவில் தரிசனம் கொடுத்து ஆட்கொள்வீராகுக! என்று இறைஞ்சிய சங்கராச்சார்யார், இந்த ஸ்லோகத்தில் அவரது திருக்காட்சியை கண்ணுற்று புளகாங்கிதமுற்று அந்த பரமானுபவத்தை மொழிந்துள்ளார். ....

சிவகளிப் பேரலை- 98

சிவானந்த லஹரி என்ற திருப்பெயரில் அமைந்த, 100 கவிதைகள் கொண்ட, சிவானுபூதி நல்கும் அற்புதமான இந்த பக்தி இலக்கிய நூலைப் படைத்திட்ட ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர், இந்த 98-வது கவிதையிலே, மிகச் சிறந்த இந்த கவிப் பொக்கிஷத்தை, தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டையும் தமது உடுக்கை ஒலியின் மூலமே மொழிந்து, மொழிகளுக்கும் அதிபதியாக விளங்கும் பசுபதிக்கே அர்ப்பணம் செய்கிறார். ....

சிவகளிப் பேரலை- 97

     முந்தைய ஸ்லோகம் போலவே இந்த ஸ்லோகத்திலும், மனத்தை மதம் பிடித்த யானையாக உவமானம் செய்துள்ள ஸ்ரீ ஆதிசங்கரர், அந்த மனவேழத்தைக் கட்டுப்படுத்த இறைவன் மீதான பக்தியே சிறந்த கயிறு என்பதையும், அவரது அருளே அந்தக் கயிறு அவிழ்ந்துவிடாமல் இறுகக் கட்டிவைக்கப் பயன்படும் நிலைத்தூண் என்பதையும் விளக்குகின்றார். ...

சிவகளிப் பேரலை- 96

முன்பு 20-வது ஸ்லோகத்தில், மனத்தை அலைபாயும் குரங்காக வர்ணித்து அதனைக் கட்டிவைக்கும் கயிறாக சிவபெருமான் மீதான பக்தியை உவமைப்படுத்திய ஸ்ரீ ஆதிசங்கரர், இந்தச் செய்யுளிலும் இதற்கு அடுத்த செய்யுளிலும் மனத்தைக் கட்டுக்கடங்காத மதயானைக்கு ஒப்புமைப்படுத்துகிறார். ....

சிவகளிப் பேரலை- 95

என் பாதங்களோ மிக மென்மையானவை, பக்தா உனது மனதோ மிகவும் கடினமானது என்று சிவபெருமானே உன்னகத்துள் எனது உய்வுக்கு முரணான சந்தேகம் எழுந்தால், அதனை உடனடியாக நீக்கிவிடு. பவானியின் மணாளனாகிய சிவபெருமானே, அவ்வாறு நீர் உண்மையிலேயே கருதுவீராயின், மிகவும் கரடுமுரடான இமயமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களிலே நீர் எப்படி உழன்று திரிகின்றீர்? என்று நமக்காகக் கேட்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...

சிவகளிப்பேரலை- 94

முன்பு 7-ம் ஸ்லோகத்தில், சிந்தையெல்லாம் சிவமயமாகிவிட வேண்டும் என்பதை எடுத்துரைத்த பகவத்பாதர், இந்த ஸ்லோகத்தில் அதனையை மீண்டும் வலியுறுத்துகிறார். அனைத்துமாகி நிற்கும் பரம்பொருளான அந்தப் பரமசிவத்தைப் பற்றினால், பற்றுகள் தீர்ந்துபோய் வாழ்க்கைப் பயன் பூர்த்தியாகிவிடும் என்கிறார்.

சிவகளிப் பேரலை- 93

ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், பக்தர்களாகிய நமது இதயங்களில் அந்த நீலகண்டப் பெருமானே, நமக்குக் காப்பாக (ரட்சையாக) நீங்காது நிலைபெற்றிருக்க வேண்டும் என்று நமக்காக இறைஞ்சுகிறார்.....

சிவகளிப் பேரலை- 92

சிவபெருமானின் திருவடித் தாமரைகளை தியானிப்பதால் அறியாமை அகன்று, ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் மொழிந்த ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பரமஸே்வரரின் திருவிளையாடல் புராணங்களைக் கேட்பதால் பாவங்கள், தீமைகள் அனைத்தும் நம்மைவிட்டு விலகியோடும் என்பதை விண்டுரைக்கிறார்.  ...

சிவகளிப் பேரலை- 91

   சிவபெருமானை மனோ வாக்கு காயம் ஆகிய மூன்றினாலும் பக்தன் சிரத்தையுடன் வணங்க வேண்டும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் வலியுறுத்திய ஜகத்குரு, இந்த ஸ்லோகத்தில் அதனால் பக்தனுக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய நன்மை என்ன என்பதை உரைக்கின்றார்.....

சிவகளிப் பேரலை- 90

பரமேஸ்வரனாகிய சிவபெருமான் உலகின் நலனுக்காகவே பல்வேறு திருவிளையாடல்களைப் புரிகின்றார். அவரது அந்தத் திருவிளையாடல்களை, புராணச் சம்பவங்களை வாக்கினாலே பக்தன் உரைக்க வேண்டும்....

சிவகளிப் பேரலை- 89

     சிவபெருமான் விசித்திரமானவர். பெரிய பெரிய மகான்களும், தவசீலர்களும் அவரைக்  காண முடியாமல் தவிக்கின்ற நிலையில், எளிய பக்தனுக்கு அவர் இர(ற)ங்கி வந்து காட்சி தருகிறார். பக்தர்களோடு விளையாடுவதற்காக திருவிளையாடல் செய்யும் சிவபெருமான், அந்தத் தருணங்களிலே அறியாமையால் பக்தர்கள் அடித்தாலும், திட்டினாலும்கூட சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். இதனைத்தான் நிந்தாஸ்துதியாக (வஞ்சப்புகழ்ச்சியாக) இங்கே வர்ணிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.....

சிவகளிப் பேரலை- 88

  சிவபெருமானின் பெருமைகளை வியந்து கூறி, அவருக்கு எப்படி நிறைவான பூஜை செய்வது? என்று ஸ்ரீ ஆதிசங்கரர் மலைத்து நின்று வினவும் அற்புதம், இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறது....

சிவகளிப்பேரலை- 87

இறைவனிடம் தன்னை ஒப்படைத்து, அவரையே பெற்றுவிடுகின்ற சாமர்த்தியம், மெய் பக்தி ஒன்றினால் மட்டுமே சாத்தியம். அதைத்தான் இந்த ஸ்லோகத்தில் சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...