அவதாரம்

அவதாரம் என்றால் மேலிருந்து கீழிறங்குதல் என்று பொருள். இக்கதையில், ஒருவன் கீழிருந்து மேலே செல்கிறான். மனித வாழ்வின் புரிபடாத சிக்கல்களையும் தவிப்புகளையும் பூடகமாகச் சொல்லிச் செல்லும் எழுத்தாளர், இங்கே இசக்கிமுத்துவின் மனமும் உருவமும் சிறிது சிறிதாக மாறி வருவதை அவதாரத்திற்கு முந்தைய கணங்களாக முன்வைக்கிறார். ஆன்மிக வேட்கை கொண்ட இக்கதையை புதுமைப்பித்தன் எழுதிய ஆண்டு 1947...

ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்

மானிடப் பிறப்பில் உயர்வு- தாழ்வு இல்லை. அது அவனது குனத்தில் தான் இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக நிறுவுகிறது சிறுகதை வேந்தர் ஜெயகாந்தன் அவர்களின் இக்கதை. எல்லோரும் அம்மாசியாகிவிட முடியாது தான். ஆனால், மனிதம் என்ற கனவை நோக்கிய பயணத்தில் பாசஞ்சர் வண்டிகள் வந்துகொண்டே இருக்கும்.

கடிதம்

நல்ல எழுத்துகளைப் பாராட்டுவது அதனை மேலும் வளர்க்கும். இல்லாவிடில், இக்கதையில் வரும் எழுத்தாளர் சிங்காரவேலு போல வெறுமையில் தான் வாட வேண்டி இருக்கும். இக்கதையில் வரும் எழுத்தாளர் யார், புதுமைப்பித்தனே தானா, அல்லது இதனை இங்கு பதிவேற்றும் நானா?

பிரயாணம்

1969-இல் எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய திகிலூட்டும் அற்புதமான புனைகதை இது. அபத்தத்தின் எல்லையில், மானுட எல்லையைத் தாண்டிய ஒரு சக்தி இங்கே தரிசனமாகிறது....

இலக்கியாசிரியரின் மனைவி

1955-ஆம் ஆண்டு க.நா.சு. எழுதிய இச்சிறுகதை, ‘இல்லறம் அல்லது நல்லறமன்று’ என்பதை எளிதாக நிலைநாட்டுகிறது. இலக்கியாசிரியையின் கணவன் என்ற பெருமிதத்தை விட, இலக்கியாசிரியன் என்பது சற்று மாற்றுக் குறைவு தானே? இக்கதையைப் படித்து முடிக்கையில் உங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தால், அதுவே இலக்கியாசிரியனின் பேறு!

ஒரு பிரமுகர்

கட்டெறும்பை கதாநாயகனாகக் கொண்ட இந்தச் சிறுகதை ஒரு நையாண்டிக் கதை என்பது கதையின் தலைப்பைப் பார்க்கும்போதே தெரிந்திருக்கும். நேரடிக் கதை சொல்வதில் மட்டுமல்ல, உருவகக் கதையிலும் ஜெயகாந்தன் தனது சமூகப் பார்வையை முன்வைக்கிறார்...

சிட்டுக்குருவி

1955-இல் க.நா.சு. எழுதிய சிறுகதை இது... கொல்லையில் குருவி கட்டிய கூடு ஒரு சிறுகதையை மட்டும் உருவாக்கவில்லை, உறவுகளிடையிலான பந்ததையும் போகிற போக்கில் வெளிப்படுத்தி இருக்கிறது...

தர்மம்

நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் அமரர் க.நா.சுப்ரமணியம் (1912- 1988). தமிழ் நவீன இலக்கியத்தின் பார்வையை, போக்கைத் தீர்மானித்த ஆளுமைகளில் முதன்மையானவர். இதனை தனது இடையறாத, சுயநலமற்ற இலக்கியப் பணிகளால் அவர் சாதித்தார். தமிழ் காத்த நல்லோரான அவர் 1944-இல் எழுதிய ‘சிறு’ சிறுகதை இது. சிறுகதை என்பது, சமூகத்துக்கு நீட்டி முழக்கும் உபதேசமாக அல்ல, போகிற போக்கில் வருடிச் செல்லும் தென்றல் போல இருக்க வேண்டும் என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்...

பாண்டிபஜார் பீடா

தமிழின் நவீன எழுத்தாளர்களுள் முதன்மையானவர் அமரர் திரு. அசோகமித்திரன் (1931- 2017). வாழ்க்கையின் வெறுமையை பூடகமான அங்கதத்துடன், குறைந்த சொற்களில் வீரியமாக உரைத்தவர். தனது திரையுலக அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதிய சிறுகதை இது. இதில் வரும் சிட்டிபாபு யார்? அவர்தான் அசோகமித்திரனா?

படபடப்பு

போர்க்களச் சூழலை ஓர் எழுத்தாளர் எப்படிப் பார்க்கிறார்? 1946-இல் புதுமைப்பித்தன் எழுதிய இந்த சிறுகதையே இக்கேள்விக்கு விடை....

அக்ரஹாரத்துப் பூனை

இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு எனக்குத் தெரிஞ்ச ஒரு பூனையைப் பற்றி எழுதப் போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ சலிப்போ பயமோ சங்கடமோ வராது. பூனைகள் கதை படிக்கிறதோ, கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத் தான் ‘ஆஷாடபூதி’ மாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரி குணமெல்லாம் நிச்சயம் கிடையாது.

தனி ஒருவனுக்கு

தீண்டாமையையும் பசிக் கொடுமையையும் போலித்தனங்களும் கண்டு வெட்கி, ஆவேசம் கொள்ளும் புதுமைப்பித்தனின் அக்கால நடையிலான சிறுகதை இது…

சட்டை

எழுத்தாளர் ஜெயகாந்தனின் அற்புதமான சிறுகதைகளுள் ஒன்று இது. ராணுவவீரனும் ஒரு துறவி தான் என்று ஒரு வித்தியாசமான சிந்தனையை இக்கதையில் விதைத்திருக்கிறார். படியுங்கள். வீரர்களை ஆராதியுங்கள்!

விநாயக சதுர்த்தி

புதுமைப்பித்தனின் ஆரம்பகாலக் கதைகளுள் ஒன்று இது. இதில் செவிவழிக் கதை ஒன்றை சிறுகதைக்குள் நுழைக்கும் புதுமைப்பித்தன், நாத்திகவாதம் செய்யும் கதாபாத்திரமாக தன்னையே இருத்திக் கொள்கிறார். தமிழக வழக்கப்படி கதையில் வரும் மனைவி பக்திமான் தான் வேறென்ன?

குறைப் பிறவி

மனிதன் வெளிப்புற உடல் அழகில் லயிக்கிறான். அதேசமயம், அதே தோற்றம் குரூரமாக இருந்தால் குமைகிறான். இவையெல்லாம், அறிவு முதிர்ந்த மனிதர்களுக்குத் தான்; பச்சிளம் குழந்தைகளுக்கும், விலங்குகளுக்கும் அழகு- குரூரம் என்ற பேதம் இருப்பதில்லை. அதன் காரணம், ஒருவேளை அவற்றின் அறிவு முதிர்ச்சி வழக்கமான மனிதர் போல இல்லாததால் தானோ என்னவோ? இச்சிறுகதையில், கோர சொரூபத்தால் விலக்கி வைக்கப்பட்ட வீட்டு வேலைக்காரி செல்லியின் தியாகம் மூலமாக, ஜெயகாந்தன் எந்த உபதேசமும் செய்யாமலே, மனிதத்தன்மை என்னவென்று புரிய வைக்கிறார்….