திரையுலகம்: மாறுகிறது நெஞ்சம்… மாற்றுவது யாரோ?

இடதுசாரிகள், ஹவாலா கும்பல்கள், லிபரல்களால் கைப்பற்றப்பட்ட இந்திய சினிமாவும், திராவிட, நாத்திகக் கும்பல்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்த் திரையுலகும் மீட்சி பெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன என்கிறார், தமிழ்த் திரைப்பட உதவி இயக்குநர் திரு. சின்னப்பா கணேசன். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தையும் அதையொட்டி வெளியான சில படங்களையும் முன்வைத்து, இந்த அவதானிப்பை இவர் முன்வைக்கிறார்….

தமிழ் சினிமாவின் தடுமாற்றம்

தமிழ்த் திரையுலகில் ஏதோ ஒரு நாசசக்தி புகுந்துவிட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. ஒருகாலத்தில் உச்சத்தில் இருந்த தமிழ் சினிமா தற்போது, பிரிவினைவாதம், அரசு எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு எனத் தடம் புரண்டு விட்டது. இதன் பின்னணி என்ன? அத்துறையிலேயே தனது இருப்பை நிலைநாட்டப் போராடிக் கொண்டிருக்கும் உதவி இயக்குநரான திரு. சின்னப்பா கணேசன் காரணங்களை அலசுகிறார்….