சாந்திக்கு மார்க்கம் – 7

-வ.உ.சிதம்பரம் பிள்ளை 7. பூரண சாந்தியை அடைதல் புறப் பிரபஞ்சத்தில் இடைவிடாத குழப்பமும், மாறுதலும், அமைதியின்மையும் இருக்கின்றன; எல்லாப் பொருள்களின் அகத்திலும் கலைக்கப்படாத சாந்தி இருக்கின்றது; இவ்வாழ்ந்த மௌனத்தில் மெய்ப்பொருள் வசிக்கின்றது. மனிதன் இவ்விரட்டைத் தன்மையைக் கொண்டிருக்கிறான். புற அமைதியின்மையும் ஆழ்ந்த நித்திய சாந்தியும் ஆகிய இரண்டும் மனிதனுள் இருக்கின்றன. மிக மிகக் கொடிய புயல்காற்றும் செல்ல முடியாத மௌன ஆழங்கள் சமுத்திரத்தில் இருப்பதுபோல, பாவமும் துக்கமுமாகிய புயல் காற்றுக்கள் ஒருபோதும் கலைக்க முடியாத தூய மௌன … Continue reading சாந்திக்கு மார்க்கம் – 7

சாந்திக்கு மார்க்கம் – 6

விவசாயம் செய்வோன் தனது நிலத்தில் உழுது, உரம் போட்டு, விதை விதைத்தபொழுது, அவன் தான் செய்யக் கூடியவற்றையெல்லாம் செய்து விட்டானென்றும், தான் பஞ்சபூதங்களை நம்பியிருக்க வேண்டுமென்றும், தான் மகசூல் வருங்காலம் வரையில் பொறுமையாயிருக்க வேண்டுமென்றும், தான் எவ்வளவு ஆத்திரப்பட்டாலும் அது விளைவை எவ்வகையிலும் பாதிக்காதென்றும் அறிவான். அதே மாதிரியாக, மெய்ப்பொருளை உணர்ந்தவன் பலன்களை எதிர்பாராமல் நன்மை, தூய்மை, அன்பு, சாந்தி, என்னும் வித்துக்களை விதைத்துக்கொண்டே போகிறான்; உரிய காலத்தில் பலனைக் கொடுப்பதும் ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் மூலமாகிய அடக்கியாளும் பெரிய சக்தி இருக்கிறதென்பது அவனுக்குத் தெரியும்....

சாந்திக்கு மார்க்கம்- 5

மனிதனுடைய ஆத்மா கடவுளிடத்தினின்று பிரிக்கப்பட முடியாதது; கடவுள் தவிர வேறு எஃதாலும் திருப்தியடைய மாட்டாதது; மனிதன் இந்த ஸ்தூல உலகைப் பற்றி அலைந்து கொண்டிருத்தலை நிறுத்தி, நித்தியப் பொருளின் உண்மைத் தன்மையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிவரும் வரையில், துன்பத்தின் சுமை அவனுடைய ஹிருதயத்தை அமுக்கிக் கொண்டேயிருக்கும்; துக்கத்தின் நிழல்கள் அவனுடைய வழியை இருட்படுத்திக் கொண்டேயிருக்கும்....

சாந்திக்கு மார்க்கம் – 4

எளியவரை இகழ்தலை வலியவர் நிறுத்தட்டும்! வலியவரை நிந்தித்தலை எளியவர் நிறுத்தட்டும்! பேராசைக்காரர் எப்படி ஈவது என்றும், காமிகள் எப்படித் தூயர் ஆகலாம் என்றும் அறியட்டும்! கட்சிக்காரர் சண்டையிடுவரை நிறுத்தட்டும்; கருணையில்லாதவர் மன்னிக்கத் தொடங்கட்டும்! பொறாமைக்காரர் மற்றவரோடு சேர்ந்து சந்தோஷிக்க முயற்சிக்கட்டும்! பிறரை நிந்திப்போர் தமது நடத்தையைப் பின்பற்றி நாணம் அடையட்டும்! ஆடவர்களும் மகளிர்களும் இந்த வழியைப் பற்றட்டும்! நல்ல காலம் இதோ வந்துவிட்டது. ஆதலால், எவன் தனது அகத்தைச் சுத்தப்படுத்துகிறானோ, அவனே உலக உபகாரி.

சாந்திக்கு மார்க்கம் – 3

உண்மையான வலிமையையும் செல்வாக்கையுமுடைய ஆடவரும் மகளிரும் சிலரே; ஏனெனில், வலிமையை அடைவதற்கு அவசியமான தியாகத்தைச் செய்தற்குச் சிலரே தயாராயிருக்கின்றனர்; பொறுமையோடு ஒழுக்கத்தை வளர்ப்பதற்குத் தயாராயிருப்பவர் அவரினும் சிலரே.....

சாந்திக்கு மார்க்கம் – 2

மனித ஆன்மாவின் அமர்க்களத்தில் அகத்தின் ஆள்கைக்காகவும், அரசுக்காகவும், ஆதிபத்திய கிரீடத்திற்காகவும் இரண்டு தலைவர் அமர் புரிகின்றனர். அவரில் ஒருவன் 'யான்' என்னும் தலைவன்; 'இவ்வுலக அரசன்' என்றும் சொல்லப்படுபவன்; மற்றொருவன் மெய்ப்பொருள் என்னும் தலைவன்; தந்தையாகிய கடவுள் என்றும் சொல்லப்படுவான். 'யான்' என்னும் தலைவன்; காமம், கர்வம், பேராசை, வீண் பெருமை, பிடிவாதம் என்னும் இருட் கருவிகளைக் கைக்கொண்டு கலகம் விளைப்பவன். மெய்ப்பொருள் என்னும் தலைவன் இனிமை, பொறுமை, தியாகம், பணிவு, அன்பு என்னும் ஒளிக்கருவிகளைக் கொண்டு அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பவன்......

சாந்திக்கு மார்க்கம்- 1

ஜேம்ஸ் ஆலன் எழுதிய  ‘From Poverty to Power’ என்ற நூலின் இரண்டாம் பகுதி  ‘The way to peace’ ஆகும். அதனை வ.உ.சி.  ‘சாந்திக்கு மார்க்கம்’ என்று மொழிபெயர்த்தார்.

“சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கேற்ப, ஆங்கிலத்தில் புகழ் பெற்ற இந்த நூலை தமிழ்கூறு நல்லுலகம் அறிவதற்காக மொழிபெயர்த்திருக்கிறார் வ.உ.சி. இந்நூல் பல பகுதிகளாக இங்கே பதிவாகிறது…