பஞ்ச கோணக்‌ கோட்டை

‘பஞ்சகோணக்‌ கோட்டை’ என்ற தத்துவார்த்தமான இந்தக்‌ கதை திரு. வ.ரா. புதுவையில்‌ நடத்திவந்த ‘சுதந்திரம்‌’ என்ற மாதப்‌ பத்திரிகையில்‌ வெளிவந்தது; பிறகு, 1945 செப்டம்பர்‌ 9-ஆம்‌ தேதி இது சென்னை ‘ஹநுமான்’ வாரப்‌ பதிப்பிலும்‌ வெளியாயிற்று. உண்மையில், சமுதாயத்திற்கு அறிவுரை கூற வந்த மகாகவி பாரதியின் அற்புதமான கட்டுரை இது...

ரஸத் திரட்டு

எல்லா மனிதரும் சமமென்ற கொள்கையை ஸமூஹ வாழ்க்கையில் ஸ்தாபனம் செய்யும்வரை மானிடருள்ளே இகல், பொறாமை, வஞ்சனை, போர் முதலிய ஏற்பாடுகள் நீங்க மாட்டாவாதலால் அக்கொள்கையை எப்படியேனும் அனுஷ்டானத்துக்குக் கொணர்ந்து விடவேண்டுமென்று ஐரோப்பிய ஞானிகள் பேராவல் கொண்டிருக்கின்றனர். இந்தியா ராஜாங்க விடுதலை பெற்றுவிடுமானால் தன் அனுஷ்டானத்தாலே உலகத்தாருக்கு இக்கொள்கையின் நலங்களை விளக்கிக் காட்டி உலகமுழுவதும் இதனைப் பரவச் செய்தல் ஸாத்யப்படும்.

பறையரும் பஞ்சமரும்

என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே! பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள். எல்லாரையும் அடிக்கப் பறையரால் முடியுமா? பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா? எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா?

பிராமண எதிர்ப்பு மூடத்தனம்!

1959-இல், திருச்சியில் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு, தேவர் ஹாலில் நடைபெற்றது. அதன் திறப்பாளரான ஈ.வெ.ராமசாமி மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது வழக்கமான தோரணையில் நமது இதிகாச புராணங்களையும், இந்து மதத்தையும், பிராமணர்களையும் கடுமையாகக் கண்டனம் செய்தும்,  ‘நான் பார்ப்பனனின் எதிரியா? நான் பார்ப்பனீயத்தையே எதிர்க்கிறேன்!’ என்றெல்லாம் அவர் தனது வாழ்நாளில் கைக்கொண்டிருக்கிற கொள்கைகளை விளக்கி முக்கால் மணி நேரம் பேசி முடித்து அமர்ந்தார். அடுத்துப் பேசிய இளம் எழுத்தாளர் (அப்போது அவருக்கு வயது 25!) திரு. ஜெயகாந்தன் பேசியதன் சுருக்கம் இது...

இரக்கமற்ற இளஞ்சிவப்புப் புரட்சி!

‘கோமாதா எங்க குலமாதா’ என்று பாடினால் போதாது. வயதான காலத்தில் அதைப் பேணுவதும் நமது கடமை. உழவனின் தோழனான காளையையும் அவ்வாறே நாம் காக்க வேண்டும். இந்த நன்றி உணர்ச்சியை மறக்க மறக்க, நாம் மரத்துப் போன சமுதாயம் ஆவோம். அதன் தொடர் விளைவுகளாக முதியோர் இல்லங்கள் பெருகும். பிறகு நமக்கு என்றும் மீட்பில்லை.

பிரிவினை மனநிலைகள் : ஒரு தீர்வு

கோவையைச் சார்ந்த இளைஞர் திரு. ராதாகிருஷ்ணன், 'கொழும்பு முதல் அல்மோரா வரை' நூலைப் படித்ததன் பின்புலத்தில் இக்கட்டுரையை எழுதி இருக்கிறார். வேற்றுமைகளை ஒழிப்பது வேதாந்தம் என்கிறார்....

ஒரு வேலையை செய்யத் தெரிவதும், செய்வதும் ஒன்றல்ல!

பெண் சாதனையாளர், தொழிலதிபர், எழுத்தாளர், தொழில்நுட்ப வல்லுநர் எனப் பன்முகம் கொண்ட செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி கூறும் வெற்றி மந்திரம் இக்கட்டுரை....

புஸ்தகத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க!

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான திரு. முரளி சீதாராமன், நகைச்சுவை பொங்க எழுதுவதில் மன்னர். அதேசமயம், விஷயமில்லாமல் இருக்காது. புத்தகக் கண்காட்சி குறித்த இவரது நையாண்டிக் கட்டுரை இது…. சென்னை புத்தகத் திரு விழா தொடங்கி இருக்கிறது, போவோமா ஊர்கோலம்?

உங்க பேர் என்ன? எந்த சேனல்?

பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் திரு. ச.சண்முகநாதன், கம்ப ராமாயணத்திலும் இளையராஜாவின் இசையிலும் தோய்ந்தவர். அவரது முகநூல் பதிவே இக்கட்டுரை….

அக இருள் நீக்கும் ஜோதிடக் கலை

‘விஜயபாரதம்’ வார இதழின் முன்னாள் ஆசிரியரான திரு. குரு.சிவகுமார், ஜோதிட வல்லுநரும் கூட. ஜோதிடத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளை கடுமையாகக் கண்டிக்கும் இவர், ஜோதிடம், கணிதமும் வானியலும் அனுபவ ஞானமும் இணைந்த ஒரு கலை என்கிறார். இவரது அறிவுரைக் கட்டுரை இது.

வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்!

முன்னோடி பெண் தொழில் முனைவோரும், நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி, சென்னையில் உள்ள, மென்பொருள் தயாரிக்கும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் இயக்குநருமாவார். அவர் எழுதி, காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘இலக்கில் கரையுங்கள்’ என்ற இ-புத்தகத்தில் (EBook) இருந்து சில பகுதிகள் இங்கே நமக்காக...