கொன்றைவேந்தன் (86-91)

ஒரு செயலில் உற்சாகமாக இறங்குதல், செயலில் சந்திக்கும் இடையூறுகளை மனவலிமையோடு தாங்கிக் கொள்ளுதல், தோல்விகள் வந்தாலும் சோர்ந்து போய்விடாமல் தொடர்ந்து முயற்சி செய்தல், இலக்கை அடையும் வரை தொய்வின்றி உழைத்தல், வெற்றிக்குப் பின்னரும் ஓய்ந்து விடாமல் புதுப் புது முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுதல் ஆகியவை ஊக்கம் உடைமை ஆகும்.

கொன்றைவேந்தன் (81-85)

திதி என்றால் நாள். பிரதமை, துவிதியை முதல் அமாவாசை, பௌர்ணமி வரையாக கிருஷ்ணபட்சம், சுக்லபட்சம் என இரு 15 தினங்களாக இத் திதிகள் குறிக்கப்படும். அதிதி என்றால், இதுபோன்ற நாள், கிழமையற்ற எனப் பொருள். குறிப்பிட்ட தினத்தில்தான் வருவார்கள் என்று குறிப்பிட இயலாமல், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய புதியவர்களே அதிதிகள். அவர்களைத்தான் ‘விருந்து’ என்கிறது நம் பைந்தமிழ்.

கொன்றைவேந்தன் (76-80)

மௌன நிலையே ஞானத்தின் உச்சம் என்று போதிக்கிறார் ஔவையார். மோனம் என்பது மௌனம் ஆகும். இது பேசாப் பெருநிலை. அமைதியை மட்டும் இது குறிக்கவில்லை. மனத்தை ஒருநிலைப்படுத்தி ஆழ்ந்து சிந்திப்பதையும் குறிக்கிறது.

கொன்றைவேந்தன் (71-75)

நமது வினையே நமது விதியாகி நமக்கான விளைவைத் தீர்மானிக்கிறது. நாம் செய்யும் நன்மைகள், புண்ணியங்கள் அதற்கான சிறந்த பலன்களை நமக்குத் தருகின்றன. அதேபோல, தீமைகளும் பாவங்களும் தீய பலன்களை நமக்குக் கொடுக்கின்றன. நன்மை செய்ய இயலாவிட்டாலும் தீமை செய்யாமல் தவிர்க்கலாம். இதன்மூலம் பிறருக்கு மட்டுமல்ல, நமக்கு வரக்கூடிய தீமையையும் நாம் தடுக்கிறோம்.

கொன்றைவேந்தன் (66-70)

‘போனகம்’ என்பதற்கு உணவு, உணவு வகை எனப் பொருள். உழவு என்பது வேளாண் தொழிலை முக்கியமாகக் குறித்தாலும், வேறு எல்லா வகை கடின உழைப்புப் பணிகளையும் குறிக்கும். உழை என்பதற்கு வருந்தி முயற்சி மேற்கொள்ளல், கடினமாகப் பணியாற்றல் என்று பொருள். மற்ற எல்லாத் தொழில்களையும் விட விவசாயத்துக்கே அதிக உடல் உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால் ‘உழை’ என்பதை வேர்ச் சொல்லாகக் கொண்ட உழவு என்ற சிறப்புச் சொல், விவசாயத்துக்கு அமையப் பெற்றது.

கொன்றைவேந்தன் (61-65)

பெற்றோர் என்றதும் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்- தந்தையர் நினைவுக்கு வருவர். பிள்ளைப் பேறு பெற்றவர் என்பதால் அவர்களுக்கு பெற்றோர் எனப் பெயர். ஆயினும் பேறுகளில் பெரிய பேறு, மெய்யான பேறு, மெய்ஞானத்தைப் பெறுவதுதான். ஆகையால் அத்தகைய உண்மையான உயர் ஞானத்தைப் பெற்றவர்களையே பெற்றோர் எனக் குறிப்பிடுகிறார் ஔவையார்.

கொன்றைவேந்தன் (56-60)

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். விதை ஒன்று போட சுளை வேறு விளையாது. இவையெல்லாம் முன்னோர்தம் அனுபவ உரைகள். தீமை செய்தவன் நன்கு வாழ்வதைப் போல காட்சி தருவான். ஆனால் திகைத்திட வீழ்ச்சி அடைவான். நல்லவன் துயருறுவதைப் போலத் தோன்றும். ஆனால் அவனது தர்மம் தலைகாக்கும், தலைமுறைகளையும் காக்கும். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்றார் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார்.

கொன்றைவேந்தன் (51-55)

நோன்புக்கு மனத்தூய்மையும் மனபலமும் மிகவும் அவசியம். நோன்பின் போது ஏற்படும் இடையூறுகளையும் கஷ்டங்களையும் வென்றெடுத்து, மேற்கொண்ட நோன்பை சிறப்புடன் நிறைவு செய்ய வேண்டும். அதற்கு அந்த நோன்போடு நாம் நேர்ப்பட வேண்டும். முறையாக அதற்கு உடன்பட வேண்டும்.

கொன்றைவேந்தன் (46-50)

நாடு முழுவதும் வாழ என்று சொல்லும்போது நாட்டுமக்கள் அனைவருமே நலமுடன் வாழுதல் என்ற பொருளும் அடங்கியுள்ளது. இதைத்தான் இன்றைய மத்தியஅரசு ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்று கூறி செயல்படுத்த முனைப்புக் காட்டுகிறது. நாட்டு வளர்ச்சியின் பயன், கடையருக்கும் மடைமாற்றமின்றி போய்ச்சேர வேண்டும். அப்போதுதான் நாடு முழுவதும் வாழும்.

கொன்றைவேந்தன் (41-45)

கைதவம் என்றால் வஞ்சனை, கபடம், சூது என்று பொருள். தெய்வம் கருணைக்கடல், மிகவும் பொறுமையானது. ஆயினும் உலகில் வஞ்சகக் கொடுமை மிகுந்துகொண்டே வந்தால், அந்த அசுரத்தனத்துக்கு முடிவுகட்ட தெய்வம் அறச்சீற்றத்தோடு பேரச்சம் தரும் உருவில் தோன்றும். அப்போது வஞ்சனை அழியும்.

கொன்றைவேந்தன் (36-40)

தாயின் பாதங்களே கோபுரங்கள். சீவனைச் சுமக்கும் தாயின் கருவறையே தெய்வம் குடியிருக்கும் கர்ப்பக்ருஹம். கோயில்கள் ஆன்மிகத்தோடு பாரம்பரியக்கலைகளையும் பாதுகாக்கும் பொக்கிஷங்கள். தாயும் அதுபோல நமக்கு ஜீவன் கொடுப்பதோடு பாரம்பரியக் கலைகள், அறிவையும் நமக்கு ஊட்டுகிறார்.

கொன்றைவேந்தன் (31-35)

சேமம் என்றால் பாதுகாவல், காவல், அரண், சிறைச்சாலை, சேமிப்பு, நலம் எனப் பலபொருள் உள்ளது. அபாயங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் அரண், கோட்டை அல்லது கட்டுக்காவல் மிகுதியான இடத்தில் சென்று இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டபோதிலும் தூக்கத்துக்குரிய நள்ளிரவு நேரத்தில் கவலைகளை மறந்து அல்லது சற்றுநேரம் ஒத்திவைத்துவிட்டு நிம்மதியாக உறங்க வேண்டும். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு வழங்கும் உறக்கம் என்பது ஊக்கம் தரும் மருந்து போன்றது. உரியநேரம் உறங்காவிடில் உடலியல், உளவியல் பிரச்னைகள் தோன்றும். கவலைகளை மறக்க தூக்கம் சரியாக இருக்க வேண்டும்.

கொன்றைவேந்தன் (26-30)

பத்து மாதம் வயிற்றிலே சுமந்து வலிதாங்கி பிள்ளைகளைப் பெற்றெடுப்பதோடு அதன்பின் பல மாதங்கள் பாராட்டிச் சீராட்டியும் இன்னல்களைத் தாங்கிக்கொண்டும் வளர்த்து ஆளாக்குபவள் தாய் தானே! ஆகையால் தம் மக்களைச் சான்றோர் எனக் கேட்பதில் தாய்க்கே பெருமை அதிகம்.

கொன்றைவேந்தன் (21-25)

குரு என்றால் வழிகாட்டி. ஆச்சார்யர் என்றால் வழிநடத்துபவர். ஆசிரியர் என்றால் ஆசுகளை அதாவது குறைகளைக் களைபவர். ஆகவே தகுந்த ஆசான் மூலம் பெறுகின்ற அறிவும், பயிற்சியுமே கல்வி ஆகும். அந்தக் கல்வியே நம்மை வழிநடத்துகின்ற மெய்ப்பொருளாகும் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் ஔவையார்.....

கொன்றைவேந்தன் (16-20)

கடுகளவுகூட குறைஇல்லாதவர் என உலகிலே யாருமே இருக்க முடியாது. ஒருகோணத்தில் நிறையாகவோ, சரியாகவோ படுவதுகூட மறுகோணத்தில் குறையாகத் தெரியும். நிறைகுறைகளை அலசுவது முறையானது. ஆயினும் குறைகளை மட்டுமே நோண்டி, நுணுகிப் பார்த்துக் கொண்டிருப்பது முறையன்று. அப்படிப் பார்க்கத் தொடங்கினால் எல்லோருமே குற்றவாளிகளாகத் தென்படுவார்கள். அந்த நினைப்போடு பழகுவோரை யாரும் நெருங்கத் தயங்குவார்கள். அத்தகையோருக்கு நட்பு, சுற்றம் என எதுவும் அமையாது.