கங்கை – காவிரி சங்கமம்

மத்திய கல்வி அமைச்சகத்தின் ஏற்பாட்டில் வாராணசியில், நவம்பர் 17-இல் தொடங்கி  ‘காசி தமிழ் சங்கமம்’  டிசம்பர் 16 வரை தொடர்ந்து கலாச்சார பரிமாற்ற விழாவாக நடைபெற்றது. காசியையும் தமிழகத்தையும் இணைக்கும் பாரம்பரிய வேர்களை நினைவுறுத்தும் இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்க தமிழகத்திலிருந்து எழுத்தாளர்கள் பலர் சென்று வந்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற  ‘விஜயபாரதம்’ வார இதழின் முன்னாள் ஆசிரியரும், ஜோதிட வல்லுநருமான திரு. ஸ்ரீதரம் கு.சிவகுமார் அவர்களின் அனுபவப் பகிர்தல் இது….

அக இருள் நீக்கும் ஜோதிடக் கலை

‘விஜயபாரதம்’ வார இதழின் முன்னாள் ஆசிரியரான திரு. குரு.சிவகுமார், ஜோதிட வல்லுநரும் கூட. ஜோதிடத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளை கடுமையாகக் கண்டிக்கும் இவர், ஜோதிடம், கணிதமும் வானியலும் அனுபவ ஞானமும் இணைந்த ஒரு கலை என்கிறார். இவரது அறிவுரைக் கட்டுரை இது.