ஐயர் எழுதிய கட்டுரைகளுக்குத் தலைப்பிடுவதே அழகாக இருக்கும். ஒருமுறை திருநெல்வேலிப் பக்கம் ஏடு தேடச் சென்றிருந்தார். இரவு நேரம். நிலவு காய்ந்து கொண்டிருந்தது. ஒருவர் ஓர் ஏட்டுச் சுவடியைக் கொண்டுவந்து ஐயரிடம் தந்தார். அந்த நிலவொளியில் அதைப் பிரித்துப் பார்த்தார். அது ‘பத்துப்பாட்டு’ என்னும் சங்க நூல் தொகுதி எழுதியிருந்த சுவடி. அந்தப் பத்துப் பாடல்களில் ‘முல்லைப்பாட்டு’ என்பது ஒன்று. நிலவில் சுவடியைப் பிரித்துப் பார்த்தபோது முல்லைப்பாட்டு கண்ணில் பட்டது. அதைப்பற்றி எழுதும்போது 'நிலவில் மலர்ந்த முல்லை' என்று தலைப்பிட்டுக் கட்டுரை எழுதினார். எவ்வளவு பொருத்தமான தலைப்பு! (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் இறுதிப் பகுதி...)
Tag: கி.வா.ஜகந்நாதன்
தமிழ்த் தாத்தா (61-64)
தமிழ்நாடு பாக்கியம் செய்தமையால் ஆசிரியப் பெருமான் திரு அவதாரம் செய்தார். இறைவன் இவருக்கு 87 ஆண்டு நீண்ட ஆயுளைக் கொடுத்தான். இவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் தமிழுக்காகவே பாடுபட்டார். தமிழ் அன்னையை மீண்டும் பழைய நிலையில் இருக்கச் செய்தார். பழைய அணிகளைச் செப்பம் செய்து அணிந்ததோடு புதிய உரைநடையினாலும் அவளை எழில் கொழிக்கச் செய்தார். தமிழ் உலகம் தம் ஆசிரியரை நன்கு அறிந்து கொள்ளும்படி அவரது வரலாற்றை வெளியிட்டார். பல புலவர் பெருமக்களின் வரலாற்றை வெளியிட்டார். பழைய சங்க இலக்கியங்கள் எல்லாம் இன்றைக்கு மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றன என்றால், இதற்கெல்லாம் மூலகாரணம் இந்தத் தமிழ்ப் பெருமகனார் செய்த தொண்டுதான். இன்று உலகம் முழுவதும் தமிழ்மொழியைப் பற்றிப் பேசி, தமிழ்மொழியை ஆராய்ந்து வருகிறது என்றால், தமிழ் மாநாடுகள் நடைபெறுகின்றன என்றால், அதற்கு முக்கியமான காரணம் இந்தப் பெருமகனார் செய்துள்ள தமிழ்ப் பணியே என்பதை யாரும் மறக்கமாட்டார்கள்... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 61-64 அத்தியாயங்கள்...
தமிழ்த் தாத்தா (56-60)
ஆசிரியப் பெருமானின் எண்பதாவது ஆண்டு நிறைவு நெருங்கிக் கொண்டிருந்தது. சஷ்டியப்த பூர்த்தியைச் சரியாக நடத்தவில்லை, இந்த விழாவையாவது சிறப்பாக நடத்த வேண்டுமென்று அட்வகேட்டாக இருந்த கே.வி.கிருஷ்ணசாமி ஐயர் எண்ணினார். அதற்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டார். இந்த விழா மிகச் சிறப்பாகப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது. ஸர் முகமது உஸ்மான் தலைமை தாங்கினார். ஆசிரியப் பெருமானின் திருவுருவப் படம் ஒன்றை பல்கலைக்கழக மண்டபத்தில் திறந்து வைத்தார்கள். தலைநகரில் மட்டுமன்றித் தமிழ்நாட்டின் பல பாகங்களிலும், பர்மா, இலங்கை ஆகிய இடங்களிலும்கூட ஆசிரியப் பெருமானுடைய சதாபிஷேக விழா நடைபெற்றது....
தமிழ்த் தாத்தா (51-55)
‘தமிழ்விடு தூது’ என்னும் நூலை ஆசிரியர் ஆராய்ந்து வந்தார். தமிழின் பெருமையை மிகச் சிறப்பாகச் சொல்கிற நூல் அது. அதை வெளியிட வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தது. அதில் பல திருவிளக்குகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் மாயூரநாதர் கும்பாபிஷேகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த சிவசாரியார்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்தத் தமிழ்விடு தூதில் இருந்த ஒரு கண்ணி ஆசிரியப் பெருமான் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது... (கி.வா.ஜ. எழுதிய ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 51- 55 அத்தியாயங்கள்)....
தமிழ்த் தாத்தா (46-50)
சென்னைக்கு வந்தவுடன் பல்கலைக் கழகத்திலிருந்து பத்து நாட்கள் பழைய நூல்களைப் பற்றிப் பேசவேண்டுமென்று ஆசிரியருக்கு அழைப்பு வந்தது. 1827-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் ஐந்து நாட்களும், டிசம்பர் மாதம் 6-ஆம் தேதியிலிருந்து ஐந்து நாட்களும் அந்தச் சொற்பொழிவுகள் பல்கலைக் கழகச் செனட் மண்டபத்தில் நடைபெற்றன. அந்தச் சொற்பொழிவுக்காகப் பல்கலைக் கழகத்தார் 500 ரூபாய் வழங்கினர். அதுவரைக்கும் மண்ணெண்ணெய் விளக்கில் பணி செய்து கொண்டிருந்த ஆசிரியர் அந்தப் பணத்தைக் கொண்டு தியாகராச விலாசத்திற்கு மின்சார விளக்குப் போடச் செய்தார். கார்த்திகைத் தினத்தன்று மின்சாரத் தொடர்பு கிடைத்தது நல்ல சகுனமாக ஆசிரியப் பெருமானுக்குத் தோன்றியது.... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 46-50 அத்தியாயங்கள்...)
தமிழ்த் தாத்தா (41-45)
ஆசிரியப் பெருமான் தேடித் தொகுத்திருந்த சுவடிகளில் ‘பெருங்கதை’ என்ற ஒன்று இருந்தது. கொங்குவேள் மாக்கதை என்றும் அது வழங்கும். அது முதலும் முடிவும் இல்லாமல் இருந்தது. பல இடங்களுக்குச் சென்று தேடியும் முழு நூலும் கிடைக்கவில்லை. கிடைத்ததை ஒருவாறு செப்பம் செய்து பதிப்பிக்க வேண்டுமென்று ஆசிரியர் எண்ணினார். ...வடமொழியில் ‘பிரகத்சம்கிதா’ என்றிருந்த நூலை வடமொழி வல்லுநர்களைக் கொண்டு ஆராயச் சொல்லி, கருத்துக்களை அறிந்து கொண்டு, அவற்றிலிருந்த செய்திகளைத் தொடர்புபடுத்திக்கொண்டு, முழுவதுமாக இல்லாமல் இருந்த அந்த நூலை அச்சுக்குக் கொடுத்தார். அந்தப் பெருங்கதைப் பதிப்பு 1924-ஆம் ஆண்டு வெளியாயிற்று. அதன் பதிப்பு வேலை ஐந்து ஆண்டுகள் நடந்தது. இவ்வளவு நீண்ட காலம் எந்தப் புத்தகத்திற்கும் ஆசிரியர் செலவழித்தது இல்லை.... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 41- 45 அத்தியாயங்கள்...)
தமிழ்த் தாத்தா (36-40)
ஆசிரியப் பெருமானுக்கு எட்டுத்தொகையில் ஒன்றாகிய அகநானூற்றைப் பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அதை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது வேறு சிலர் அதைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அதைப் பதிப்பிக்க முயன்றார். ஆனால் கடைசியில் ரா.இராகவையங்காருடைய உதவியினால் வேறு ஒருவர் அதைப் பதிப்பித்துவிட்டார். மற்றவர் பதிப்பித்த நூலைப் பதிப்பிப்பது ஆசிரியர் வழக்கமன்று. ஆதலால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார்.... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 35-40 அத்தியாயங்கள்...)
தமிழ்த் தாத்தா (31- 35)
1906-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியப் பெருமான் மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றதைப் பாராட்டி ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பாரதியார் வந்திருந்தார். அக்காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். இந்த விழாவுக்கு வந்திருந்த அவர் மூன்று பாடல்களை எழுதி வாசித்தார். அங்கேயே ஒரு தாளில் அந்த மூன்று பாடல்களையும் ஒரு பென்சிலினால் எழுதினார்; அந்தத் தாளை நான் பார்த்திருக்கிறேன், அந்தப் பாடல்கள் வருமாறு: (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 31- 35 அத்தியாயங்கள்)...
தமிழ்த் தாத்தா (26-30)
"காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகியவற்றில் பெண்களின் வருணனைகள் இருப்பது உண்மைதான். அவற்றை மட்டும் படிப்பதோடு நிறுத்திவிடக் கூடாது. பாட்டு முழுவதையும் படித்தால், அவ்வாறு ஈடுபடுவது தவறு என்று சொல்லியிருப்பதைக் காணலாம். ஒன்பது சுவைகளில் சிருங்காரம் என்பது ஒன்று. வடமொழி நூல்களிலும் அந்தச் சுவை உண்டு. பெண்களின் வருணனை கூடாது என்றால் எத்தகைய இலக்கியங்களும் இருக்க முடியாது. நான் மிகப் பழைய இலக்கியங்களாகிய சங்க நூல்களை முதல் முதலாக வெளியிட்டிருக்கிறேன். அதனால் தான் தமிழ்நாடு என்னிடத்தில் கொஞ்சம் மதிப்பு வைத்திருக்கிறது. அவற்றில் கூடப் பெண்களின் வருணனை வருகிறது. அவற்றைப் படிக்கும் போது இலக்கியச் சுவையே தெரிகிறது. நீங்கள் அவற்றை எல்லாம் பொசுக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். வடமொழியில் உள்ள நூல்களும் அப்படித் தான். இவ்வாறு பார்த்தால் தமிழிலும், வடமொழியிலும் படிப்பதற்கு வேறு ஒன்றும் கிடைக்காது" என்றார்.....
தமிழ்த் தாத்தா (21- 25)
"ஒரு நூல் அல்ல, பல நூல்களை நீங்கள் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே உங்கள் பெயரில் எழுதிவைக்க மகாராஜா நினைக்கிறார்" என்றார் பாண்டித்துரைத் தேவர். "நான் இன்று அரண்மனை போயிருந்தேன். பாஸ்கர சேதுபதி அவர்கள் இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள்" என்று சொன்னார். இந்நாள் வரை தங்களுக்கு எந்தவிதமான உதவியும் அவர் செய்யாமல் இருந்தது பெரிய தவறு என்று நினைக்கிறார்கள். ஆகவே தம் ஜமீனிலுள்ள ஒரு கிராமத்தையே தங்களுக்கு வழங்க எண்ணுகிறார். இந்தச் செய்தியைத் தங்களிடம் தெரிவிக்கும்படி என்னிடம் சொன்னார்' என்றார். இதைக் கேட்டவுடன் பாண்டித்துரைத் தேவர் எதிர்பார்த்தபடி ஆசிரியருக்கு மகிழ்ச்சி அதிகமாக உண்டாகவில்லை. அவரிடம், "மகாராஜா அவர்களுடைய எல்லையற்ற அன்பை நான் இதனால் உணர்ந்து கொள்கிறேன். என்னுடைய கருத்தை நான் அவர்களிடமே நேரில் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டார்....
தமிழ்த் தாத்தா (15-20)
புறநானூற்றுக்குப் பிறகு மணிமேகலையை ஆராயத் தொடங்கினார். மணிமேகலை பெளத்த காவியம், ஜைன காவியமாகிய சீவக சிந்தாமணியில் ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்குவதற்கு ஜைனர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் பெளத்தர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. மணிமேகலை பெளத்த சமயக்கொள்கை நிரம்பின நூல். ஆகவே அதைப் படித்தபோது பல செய்திகள் தெரியவில்லை. ‘வீரசோழியம்’ என்ற இலக்கண நூல் ஒரு பௌத்தரால் இயற்றப்பட்டது. அதில் பௌத்த சமயக் கருத்துக்கள் காணப்பட்டன. அவற்றைப் படித்தும் பல செய்திகளை அறிந்துகொண்டார். சென்னையில் மளூர் ரங்காசாரியார் என்ற பேராசிரியர் இருந்தார். அவர் பெளத்த நூல்களை நன்றாகக் கற்றவர். அவர் வாயிலாகப் பல செய்திகளை இவர் அறிந்து கொண்டார். பெளத்த சமய சம்பந்தமான நூல்கள் பல ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றையெல்லாம் தருவித்து ரங்காசாரியாரிடம் கொடுத்தார். அவர் அவற்றைப் படித்து, பௌத்த மதக் கருத்துக்களை எல்லாம் சொன்னார். அவற்றையெல்லாம் மிக்க ஆர்வத்தோடு ஒரு மாணாக்கனைப் போலத் தொகுத்துக்கொண்டார்.... 1896-ஆம் வருடம் ஜூன் மாதம் மணிமேகலையை சென்னையில் கொண்டுவந்து அச்சிடக் கொடுத்தார். பெளத்த சமய சம்பந்தமாகத் தாம் தெரிந்து கொண்டவற்றை எல்லாம் புத்தர், பெளத்த தருமம், பெளத்த சங்கம் என்னும் தலைப்பில் எழுதி அவற்றை மணிமேகலைப் பதிப்பின் முன் அமைத்தார். அகராதி, அரும்பதவுரை ஆகியவை எல்லாம் இணைக்கப் பெற்றன. 1898-ஆம் வருடம் ஜூலை மாதத்தில் மணிமேகலை நிறைவேறியது. அதில் 59 தமிழ் நூல்களிலிருந்தும், 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டியிருந்தார். அரும்பதவுரையில் கண்ட சொற்களுக்கு விளக்கங்களையும் கொடுத்திருந்தார். மணிமேகலை கதைச் சுருக்கத்தையும் சேர்த்திருந்தார்.... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 15-20 அத்தியாயங்கள்)...
தமிழ்த் தாத்தா (11, 12, 13, 14)
1876-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஆசிரியப் பெருமானுடைய ஆசிரியரும், பெரும்புலவர் பெருமானுமாகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை இறைவன் திருவடியை அடைந்தார். கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் அந்தப் புலவர் பெருமானுக்குத் தமிழே நினைவாக இருந்தது. அந்தக் கடைசிக் காலத்தில் கூடத் திருவாசகத்தை வாசித்துக் கொண்டிருந்த இவருக்கு ஏற்பட்ட ஒரு சிறு ஐயத்தைத் தீர்த்து வைத்தார். பிள்ளையின் மறைவினால் ஆசிரியர் துன்பக் கடலில் ஆழ்ந்தார். சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்கும் போது விம்மி விம்மி அழுதார். "பிரிவதற்கரிய பொருளை இழந்து விட்டோம். இனி நாம் என்ன செய்வோம்? உம்மிடத்தில் பிள்ளையவர்களுக்கு எத்தனையோ அன்பு இருந்தது. இனியும் நீர் இந்த மடத்துப் பிள்ளையாகவே நம்மிடம் பாடம் கேட்டுக் கொண்டு இங்கு இருந்து வரலாம்” என்று சுப்பிரமணிய தேசிகர் ஆறுதல் கூறினார்... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 11-14 அத்தியாயங்கள்)...
தமிழ்த் தாத்தா (7, 8, 9, 10)
குருபூஜை அன்று பிள்ளையவர்களோடு ஆசிரியர் தங்கியிருந்தார். அப்போது ஒரு புலவர் வந்து சுப்பிரமணிய தேசிகரைப் பற்றிப் புகழ்ந்து தமக்கு ஒரு பாட்டு எழுதித் தரும்படி பிள்ளையிடம் கேட்டார். பிள்ளையவர்கள் எழுதித் தந்தார். பின்னர் அதுபோலப் பலர் ஒருவர் பின் ஒருவராக வர, ஒவ்வொருவருக்கும் ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தார். அவர்கள் அந்தப் பாடல்களைத் தாமே எழுதியதாகத் தேசிகரிடம் போய்ச் சொல்லிப் பரிசு பெற்றார்கள். மறுநாள் தேசிகரை மீனாட்சிசுந்தரம் பிள்ளை சந்திக்கும்போது, 'இரவு எல்லாம் பிள்ளையவர்களுக்கு மிகவும் வேலை வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது' என்று தேசிகர் குறிப்பாகச் சொன்னார். (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 7- 10 அத்தியாயங்கள்)...
தமிழ்த் தாத்தா (3,4,5,6)
"அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி அடைந்த தோற்றமும், இளந் தொந்தியும், முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின்புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோன்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோன்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை. அலட்சியமான பார்வையும் இல்லை. தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்ல மெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வை தான் இருந்தது. அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உற்சாகம் இல்லை; சோம்பலும் இல்லை; படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது. பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப் போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத் தெய்வம் போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உற்சாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது." - கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலில் இருந்து...
தமிழ்த் தாத்தா (1, 2)
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் (1855-1942) தமிழுக்காகவே வாழ்ந்தவர். அறுபதாண்டு காலத்துக்கு மேல் தமிழ்க் கல்வி ஆசிரியராகப் பணி ஆற்றியபடியே, பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளியிட்டு, தமிழ்க் கல்வியின் எல்லையை விரிவாக்கி, பழந்தமிழ் இலக்கியங்களையும் உயர் காப்பியங்களையும் காலத்தின் அழிவினின்றும் மீட்டுத் தந்தவர். பழந்தமிழர் வாழ்க்கை உயர்வை இலக்கியச் செய்திகள் வாயிலாக உணர்த்தியவர். இலக்கியப் பதிப்புத் துறையில் பாடுபட்டு ஏடு தேடிய இவரது உழைப்பின் பயனாக புது ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. வரலாற்றுச் செய்திகளைச் சுவையான நவீன சிறுகதை போலச் சொல்ல வல்லவர். வாழ்க்கை வரலாற்றுத் துறையில் தமிழிலே ஒரு வழிகாட்டி இவர். இன்றைய தமிழர் சிந்தனைக் கருத்துக்களையும், தமிழ் எழுத்தாளர் நடையையும் ஐயரவர்கள் வெளியீடுகள் பெரிதும் பாதித்துள்ளன எனலாம். இளமையில் நீண்ட காலம் ஐயரவர்களுடன் முக்கிய மாணவராக இருந்து பழகிய நூலாசிரியர் கி.வா.ஜகந்நாதன் பண்டைத் தமிழ்க் கல்வியிலும் சிறந்தவர்; இன்றைய முன்னணி எழுத்தாளர் வரிசையிலும் மதிக்கப் பெறும் ஆசிரியர். ஐயரவர்களின் சிறந்த வாழ்வையும் உயர்ந்த தமிழ்ப் பணியையும் இந்த நூலில் தெளிவாக உணர்த்துகின்றார்....