காலங்களில் அவள் வசந்தம்

காதலியை வர்ணிக்கும் காதலனின் இதயமாக கவிஞர் மாறுகையில்,  “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னதும்கூட இனிய பதிவாகிறது.  “உலகில் சிறந்தது எல்லாம் எதுவோ அது நானே” என்பார் கிருஷ்ண பரமாத்மா. இங்கு, சிறந்ததாக தான் கருதும் வசந்த காலமும், ஓவியக் கலையும், மார்கழி மாதமும், மல்லிகை மலரும் காதலியையே நினைவுபடுத்துகின்றன, தமிழ்க் காதலரான கவியரசர் கண்ணதாசனுக்கு… மடியில் விளையாடும் மழலையாகவும், தழுவும் கன்னியாகவும், கண்போல் வளர்க்கும் அன்னையாகவும் காதலியைக் காணும் ஆணை காதலனாகப் பெற்ற பெண், புண்ணியம் செய்தவள்!

கங்கை, யமுனை, இங்குதான் சங்கமம்…

கவியரசரின் உள்ளம் என்னும் நதியின் ஆழத்தில் கிடக்கும் வழவழப்பான கூழாங்கற்கள் பன்னெடுங்காலப் பாரம்பரியம் கொண்டவை. அவை அவரது திரைப்பாடல்களில் அற்புதமாக மின்னியபடி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இப்பாடல், அதற்கு மீண்டும் ஓர் உதாரணம்...

ஆறு மனமே ஆறு…

ஆறு மனமே ஆறு… அந்த ஆண்டவன் கட்டளை ஆறு! (2) சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு… தெய்வத்தின் கட்டளை ஆறு! ஆறு மனமே ஆறு… அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!

சம்சாரம் என்பது வீணை

ஒரு காதல் பாட்டிலும் கூட உயர் வாழ்க்கைத் தத்துவத்தை புகுத்த முடியும், கவியரசரால். சம்சாரம் என்னும் வாழ்க்கையில் சந்தோஷமே இனிய ராகம்- சலனங்கள் இல்லாத வரை. அற்புதமான பாடல் வரிகள்.

பாலும் பழமும் கைகளிலேந்தி…

கட்டிய மனைவி உடல்நலம் குன்றி இருக்கும்போது அவளைக் கண்ணும் கருத்துமாக காக்கும் மருத்துவர் கணவனாக சிவாஜி கணேசன் நடித்த அற்புதமான திரைப்படம் ‘பாலும் பழமும்’. இன்றைய தமிழ்த் திரையுலகம் பலநூறு முறை பார்க்க வேண்டிய (இம்போசிஷன்) திரைப்படம் அது. அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கவியரசரின் காவிய வரிகள் இவை...

இன்குலாப் ஜிந்தாபாத்… இந்துஸ்தான் ஜிந்தாபாத்!

சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, தேசபக்தி மிளிரும் கவியரசரின் அற்புதமான திரைப்படக் கவிதை இங்கு வெளியாகிறது....

கோப்பையிலே என் குடியிருப்பு

திரையிசைப் பாடல்களில் சக்கரவர்த்தியான கவியரசு கண்ணதாசன் அவர்களின் சுய வாக்குமூலமாக ‘ரத்ததிலகம்’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது...

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்…

ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக எஸ்.பி. சௌத்ரியாக, ‘தங்கப் பதக்கம்’ திரைப்படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார் சிவாஜி கணேசன். படத்தை இயக்கிய மாதவன், திரைக்கதை வசனம் எழுதிய மகேந்திரன், இசை அமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் தொழில்பக்தியையும் எடுத்துக்காட்டிய திரைப்படம் அது. காவல் பணியில் நேர்மையாக இருந்த சௌத்ரியின் கண்டிப்பு பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடும் மகன் பிற்பாடு இளம் குற்றவாளியாகி விடுகிறான். அவன் வீடு திரும்புகையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் திரைக்கதை. தந்தையின் கண்டிப்புக்கும் மகனின் வீம்புக்கும் இடையிலான தாயின் பாசப் போராட்டத்தை கே.ஆர்.விஜயா அற்புதமாகக் காட்டி இருப்பார். “ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்” என்பது போன்ற நம்ப இயலாத, முட்டாள்தனமான நாயக வசனம் பேசாத காவல் துறை அதிகாரியாக சிவாஜி இப்படத்தில் மிரட்டி இருப்பார். அதனால் தான் இப்படம் இன்றும் முன்னுதாரணமாகப் பேசப்படுகிறது. உறவுகளின் சிக்கலில் சின்னாபின்னமாகிறது சௌத்ரியின் குடும்பம். இறுதியில் மனம் திருந்தாமல் தேசத்துரோக்க் குற்றத்தில் ஈடுபடும் தனது மகனை தானே சுட்டுக் கொல்கிறார் எஸ்.பி. சௌத்ரி. அதற்காக அரசின் தங்கப் பதக்கம் அவருக்கு வழங்கப்படுகிறது. படம் பார்க்கும் நமக்கு கண்களில் நீர் திரையிடுகிறது. இத் திரைப்படத்தில், தனது மகனின் பிறந்த நாளில் அன்னையும் தந்தையும் பாடும் இனிய பாடல் இது. திரைக்கதையின் ஓட்டத்தை உணர்ந்து, விதியின் பாதையை பூடகமாகக் கூறிவரும் பாடலும் கூட. அன்னையும் தந்தையும் எத்துணை பாசத்துடன் தனது மகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கனவாகக் காண்கிறார்கள் என்பது இப்பாடலில் காட்டப்படும்போதே, பின்னாளில் நிகழ உள்ள அபத்தமான திருப்பங்கள் நமக்குப் புலப்படத் துவங்கும். கவியரசு கண்ணதாசனின் இனிய திரைப்பாடல்களுள் ஒன்று இது. 

அமைதியான நதியினிலே ஓடும்…

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது... நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது....

வீடுவரை உறவு…

பாதகாணிக்கை திரைப்படத்தில் கவியரசர் எழுதிய, சோகம் கலந்த அற்புதமான தத்துவப் பாடல்...