அற்புதமான உருவகக் கவிதை. எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவனின் இதயமெங்கும் வீசும் சத்திய அனல் கவிதையில் தெறிக்கிறது. ‘ஜாம்பி’ என்றால் என்ன என்று புரியவில்லையா? ‘ஜாம்பி’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘மதவெறி’ என்று போட்டுக் கொள்ளுங்கள்… (எந்த மதவெறி என்று சொல்லி ஜாம்பிக் காவலர்களிடம் கடி வாங்க நான் தயாரில்லை). அப்போது, நீங்கள் வாழும் உலகின் தரையடி மெள்ள உங்கள் கால்களுக்குக் கீழே நழுவிக் கொண்டிருப்பது புரியும்.
Tag: கவிதை
புதுக்கவிஞர்களால் வளம் பெற்ற தமிழ்
யார் வேண்டுமானாலும் எதை எழுதினாலும் புதுக்கவிதை என்று சொல்லும் காலமாகிவிட்டது. ஆனால், கவிதை என்பதற்கு ஒரு தகுதி இருக்கிறது. அது என்ன? அதன் வரலாற்றை அறிந்தால், யாரும் கண்டபடி கிறுக்கி, தன்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.... இதோ பத்திரிகையாளர் திரு. சேக்கிழானின் கட்டுரை.....
புத்தாண்டு வாழ்த்துகள்! (கவிதை)
அனைவருக்கும் இனிய சோபகிருது புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் நலம் அளிக்கட்டும்! இறையருளால் தேசம் மேலும் உயரட்டும். உலகம் அமைதியை நோக்கி மீளட்டும்!
புதியன பிறக்கட்டும்! (கவிதை)
இந்த ‘சோபகிருது’ புத்தாண்டு எல்லோருக்கும் முக்கனிச் சுவை போல இனிதாகட்டும்! கவியரசரின் புத்தாண்டு வாழ்த்துடன் இந்த ஆண்டு இனிதே தொடங்கட்டும்!!
அனுமன் எழுகின்றான்! (கவிதை)
இன்று அனுமன் ஜயந்தி. பக்தி மற்றும் சக்தியின் அடையாளமான அனுமனை வணங்குவோம்! பத்திரிகையாலளர் திரு. வ.மு.முரளியின் கவிதை இங்கே...
எனது நோக்கில் சுவாமி விவேகானந்தர் (கவிதை)
பேரொலியும் புரட்சி வேகமும் பின்னிப் பிணைந்தாட சுவாமி விவேகானந்தரின் அசரீரி முடிந்து போகிறது; அது முடிகிற போது, ஒரு தேசம் ஆரம்பமாகிறது.- பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கவிதை...
சுவாமி விவேகானந்தர் திருவடி வாழ்க! (கவிதை)
திரு. இராம.வேணுகோபால், ஆசிரியர்; குடியாத்தத்தில் வசிக்கிறார். சித்த மருத்துவர்; பத்திரிகையாளர்; கவிஞர் எனப் பல பரிமாணங்களை உடையவர். ‘செந்தமிழ்க் கூத்தன்’ என்ற பெயரில் கவிதைகளை எழுதி வருகிறார். 2சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கவிதை இது…
பகலவனே வாழி!
திருமதி கீதா குமரவேலன், குடியாத்தத்தில் உள்ள அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ‘வள்ளலார் காட்டிய பெருநெறி’ என்ற நூலை எழுதி இருக்கிறார். இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன; பட்டிமண்டபப் பேச்சாளராக ஆன்மிகப் பயிர் வளர்க்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கவிதை இங்கே....
விவேகானந்தர் – குழந்தைப்பாடல்
‘பொருள் புதிது’ இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. சேக்கிழான் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த மழலைப்பாடல்...
வீர நரேந்திரா விவேகானந்தா! (கவிதை)
சென்னையில் வசிக்கும் விவேகானந்தரின் தீவிர அபிமானியான திரு. விவேகானந்ததாசன், அவரது கருத்துகளை இணையவழியாகப் பரப்பி வருபவர். அன்னாரது கவிதைப் பாடல் இது....
விவேகாநந்த வெண்பா (கவிதை)
திரு. ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன், ஆன்மிக நாட்டம் கொண்ட எழுத்தாளர், கவிஞர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் மீதான வெண்பாக்கள் இவை….
விளையும் பயிர் (கவிதை)
ரேடியோ அண்ணா என்ற பெயரில் பிரபலமாக அழைக்கப்பட்ட அமரர் திரு. ஆர்.அய்யாசாமி சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா சமயத்தில் (1963), வானொலியில் ஒலிபரப்பான சிறுவர் பாடல் இது.
விவேகாநந்தர் (கவிதை)
கவிஞர் திரு. பெ.சிதம்பரநாதன், வானம்பாடி இயக்க கவிஞர்களுள் ஒருவர்; கோவையில் வசிக்கிறார். ’ஓம் சக்தி’ ஆன்மிக, இலக்கிய மாத இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர்; ‘அரண்மனைத் திராட்சைகள், வைகறை, பொய்கை’ஆகிய கவிதை நூல்களையும், ‘சிந்திக்கத் தூண்டிய சில விவாதங்கள்’ என்ற கட்டுரை நூலையும் எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது கவிதை இது….
போற்றி! போற்றி! (கவிதை)
திருமதி சௌந்தரா கைலாசம் (1927- 2010), கரூரைச் சார்ந்தவர்; மறைந்த முன்னாள் நீதிபதி கைலாசம் அவர்களின் மனைவி; எழுத்தாளர்; இந்து அறநிலையத் துறை, திரைப்படத் தணிக்கைக் குழு, அகில இந்திய வானொலி ஆலோசனைக் குழு போன்றவற்றில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்தவர். யாப்பிலக்கணத்துடன் மரபுக் கவிதைகள் புனைவதில் வல்லவர். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது கவிதை இது…
தீபம் போதும்! (கவிதை)
மகாத்மா காந்திக்கு கவியரசரின் அஞ்சலிக் கவிதை இது...(இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்)