புதுமைக் கவிஞர் திரு. ஸ்ரீ.பக்தவத்சலம் எழுதிய மரபுக் கவிதை இது. மரபிலிருந்து கிளைப்பது தானே புதுமை?
Tag: கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்
காற்றிடைச் சாளரம்- 15
திருமுடி சூடிய மலரொன்று திருவடி பட்டுத் தெறித்தது. -கவித்துவம் தரிசனமாகும் இடம்....
காற்றிடைச் சாளரம் – 14
காற்றை ரசிக்கும் இளம் பாரதி இவர்....காற்றை இக்கவிதையில் கட்டிப் போட முயற்சிக்கிறார்.
காற்றிடைச் சாளரம் – 13
பிச்சையெடுத்தா பிண்டமிடுவது?- இந்தக் கடைசி வரிக் கேள்வியில் தான் இக்கவிதை தொக்கி நிற்கிறது...
காற்றிடைச் சாளரம் – 12
-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம் கடவுளும் நானும் துயிலெழுந்தார்;உயிரெடுத்தேன். நீராடினார் ;மழையாடினேன். பசியடைந்தார்;பசியாறினேன். காமமெய்தினார்;கலவிபுரிந்தேன். சினந்தார்;சமரிட்டேன். விடைகளாயிருந்தார்;வினாக்களாயிருந்தேன். மௌனமானார்;தியானமானேன். அன்பிலலர்ந்தார்;இன்புறவடைந்தேன். நன்றி பெருக்கினார்;நாயுடன் இருந்தேன். லயித்திருந்தார்;கவிதைகளாக்கினேன். திருவுலாவினார்;தடம் தேடினேன். என்னையறிந்தார்;தன்னைக் கரைத்தேன். இனி என்ன? இடையிடையே நான் பயந்தும் துவண்டும் வாழ்ந்தபோதெல்லாம் அவரின் நிலையறியாமலேயே உடல் விடுவேன் – துயிலடைவார். $$$
காற்றிடைச் சாளரம் – 11
கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலத்தின் மன உருவகத்தில் வரையப்பட்ட மீன் இது...
காற்றிடைச் சாளரம்
உங்கள் வீட்டு குப்பைகளை என் வாசலில் கொட்டுகின்றீர்கள்; அதனை உரமாக்கிக்கொள்ளும் என் வீடு....
காற்றிடைச் சாளரம் – 9
கவிஞரின் எளிய கவிதை... அரிய பொருளுடன்...
காற்றிடைச் சாளரம்- 8
அழுக்குத் தலையணைக்கு வெளுத்த உறை- என்றால் என்னவென்று புரிகிறதா? இந்தக் கவிதைகளைப் படியுங்கள்... கவித்துவத்தில் கிறங்குங்கள்!
காற்றிடைச் சாளரம் – 7
நதியொரு சிற்பி
கூருடைத்த உருளைக் கற்கள்.
நதியொரு பாடகர்
விடியலுக்கு முன் கேளுங்கள்.
நதியொரு கலைஞன்
சும்மாயிருப்பதில்லை.
நதியொரு ஞான யோகி
தன்னியல்பில் தானானது.
காற்றிடைச் சாளரம் – 6
நீண்டு வளர்ந்த தும்பிக்கை நெளிய முறக்காது விசிறிவரும் யானைக்கு வால் மட்டும் பம்பரக் கயிறளவு. பெரிய மனிதர்க்கு சின்னப்புத்தியென வாலாட்டிச் சொல்லிவரும் யானை....
காற்றிடைச் சாளரம் – 5
மனம் என்னும் துணி- காற்றிடைச் சாளரத்தில் அலைபாய்கிறது இந்தக் கந்தல் துணி....
காற்றிடைச் சாளரம்- 4
கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம் எழுதியுள்ள சிறு கவிதை- பாரதியின் ‘அக்கினிக் குஞ்சு’ போல.
காற்றிடைச் சாளரம் -3
பயணிகளின்
கனிவான கவனத்திற்கு…
தயாராக இருக்கவும்.
தலையில் பறவையிடும் எச்சமாய்,
கிளையில் வந்தமரும் பறவையாய்,
கூட்டத்தில் வெடிக்கும் வன்முறையாய்,
வழியில் எதிர்ப்படும் கந்துக்காரனாய்,
உங்களுக்கான தடத்தில்
உங்களுக்கான வண்டி
எப்போதும் வரலாம்.
அழகிய மரம்: நூல் மதிப்புரை
18-ஆம் நூற்றாண்டில் பாரதத்தின் பாரம்பரியக் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை ஆராயும் இந்நூல், மேற்கண்ட வினாக்களுக்கு தக்க ஆதாரங்களுடனும், குறிப்புகளுடனும் விரிவான விடைகளை அளிக்கின்றது.... காந்திய சிந்தனையாளரான தரம்பால் அவர்கள், ஆங்கிலத்தில் ‘The Beautiful Tree’ என்று எழுதிய நூலை தமிழில் பி.ஆர்.மஹாதேவன் அவர்கள் ‘அழகிய மரம்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்து வழங்கியுள்ளார். இந்நூலிற்கான தலைப்பை காந்தியடிகள் எழுதிய குறிப்பிலிருந்து தேர்வு செய்துள்ளனர்....