இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் -5

பாரதத்தின் அடித்தளம் ஹிந்து தர்மம் தான் என்பதை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவும் அறிவிக்கவும் வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, தர்மத்தின் வரம்பற்ற வீரியம் முழுவீச்சில் வெளிப்படும். அதுவே, பாரதத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே நன்மையைத் தரும்.

இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் -4

ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டை, நாகரிகத்தை ஒற்றை  வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அது தர்மம். தர்மம்தான் இந்த தேசத்தின் அடிப்படை. தர்மம் என்ற வாழ்வியல் விஞ்ஞானமே எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து வைத்திருக்கிறது. நாம் இதுவரை இந்தக் கட்டுரையில் பேசிய முக்கிய அம்சங்களும்  ‘தர்மம்’  என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கிவிடும்.

இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் -3

அனைத்துப் பண்பாட்டிற்கும்  தொட்டிலாக இருக்கும் பாரதியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக இருப்பது ஹிந்து சமுதாயம். எனவே, ஹிந்து சமுதாயத்திற்கு அடித்தளமாக இருப்பது எது என்ற கேள்வி அடுத்து எழுவது இயல்பே. இங்கு ஹிந்துக்கள் என்று நாம் அழைக்கும் மக்களை உருவாக்கியது எது? அதுதான் உலகளாவிய, அறிவியல் பூர்வமான, சாஸ்வதமான வேதச் சிந்தனை முறை.

இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் – 2

ஒரு தேசம் அல்லது ஒரு இனம் அதன் உண்மையான வரலாற்றை, முழுமையான மகத்துவத்தை, பெருமிதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுமானால் அது உள்ளுக்குள் வலிமை பெறும்; யாராலும் வெல்ல முடியாதபடி ஆற்றலுடன் வல்லமை பெற்றுத் திகழும். எனவே வரலாற்றுக்கும் தேசம் அல்லது இனத்தின் விழிப்புணர்வுக்கும் பெருமிதத்திற்கும், நெருங்கிய, பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது.....

இந்தியக் கலாச்சாரத்தின் கட்டுமானம்- 1

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவி சுவாமி சுத்திதானந்தர். கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்தில் இருக்கிறார். அம்மடத்தில் புதிதாகச் சேரும் பிரம்மச்சாரிகளுக்கு (இளம் துறவிகளுக்கு) பயிற்சி அளிப்பவராக  இருக்கிறார். அவரது இந்தக் கட்டுரைத் தொடர் (BUILDING BLOCKS OF INDIAN CULTURE) ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மாத இதழான 'பிரபுத்த பாரதா'வில் தொடராக வெளிவந்தது. அதன் தமிழாக்கம் இது.